• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருமணம்

                
     


1. குறை பிடிக்காதீர்கள்

உடனுக்குடன் குற்றங்கண்டு பிடித்து கண்டிக்க முற்படாதீர்கள். எது சரி எது பிழை என்பதை முழுமையாக அறிந்தவர் இறைவன் ஒருவரே.


2. மன்னியுங்கள்

ஒருவர் மற்றவரில் நம்பிக்கை வைக்க மறுப்பதும், விட்டுக்கொடுக்காமல் அடம்பிடிப்பதும், மன்னிக்காமல் வைராக்கியமாக இருப்பதும் குடும்ப அமைதியைக் கெடுத்துவிடும்.


3. சிறியவற்றைப் பெரிதுபடுத்தாதீர்கள்

காலையில் இட்லிக்குப் பதிலாக தோசையைச் செய்து வைக்கும் மனைவியை ஏசாதீர்கள். ஒருவரை விருந்துக்கு அழைத்துவிட்டு கணவன் மனைவியிடம் சொல்லாமல் விட்டுவிட்டார் என்றால் அதைவைத்து வீட்டை இரண்டாக்காதீர்கள். இருவரிடமும் குறைகள் இருக்கும். அன்பாக ஒருவர் மற்றவரைத் திருத்துங்கள்.


4. மூடி மறைக்காதீர்கள்

மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு செயற்படாது வெளிப்படுத்திவிடுங்கள். நல்ல முறையில் அதை பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்.

5. நாவை அடக்குங்கள்

கோபத்தோடு எதையும் பேசாதீர்கள்.


6. எதற்கும் வாதாடாதீர்கள்

குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லும் போது சில வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொள்ளுங்கள். வளவள எனப் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரே நேரத்தில் ஒரு விடயத்தை மட்டும் பேசுங்கள். சந்து பொந்தெல்லாம் பாயும் எலியைப் போல் இல்லாமல், கிளைக்குக்கிளை தாவும் குரங்கைப்போல் இல்லாமல் ஒரே கிளையில் இருந்து உரையாடலை முடித்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குற்றம் இருந்தால் தாழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். திருந்துவதாக வாக்களியுங்கள்.


7. வீட்டுச்சண்டை வீதிக்கு ஏன்?

சிலர் அறைக்குள் சண்டை தொடங்கியவுடன், உடனே வீதிக்கு ஓடி வந்து எல்லோருக்கும் கேட்கும் விதத்தில் கத்துவர். இது பிழை, சண்டை என்றதும் மனைவிமார் உங்கள் அப்பா, மாமா? அம்மா, மாமி என்று மற்றவர்களை உடனே கூப்பிட வேண்டாம். உங்களில் இருக்கும் தவறைப் பற்றி உங்கள் கணவர் அன்பாகச் சொல்ல, அதை நீங்கள் வெகுளித்தனமாக அப்பா அம்மாவிடம் சொல்லப்போனால், உங்கள் கணவர் உங்களிடம் தனது மனதைத் திறந்து கதைப்பார் என எதிர்பார்க்காதீர்கள்.


8. நேசியுங்கள்

ஒருவரை உள்ளன்போடு நேசியுங்கள். அந்நேரத்தில் குடும்பப் பாரத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருமனப்பட்டு அதைச் சுமக்க முன்வாருங்கள். தொழிலை முன்கொண்டு நீண்டகாலம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்திருப்பதை இயன்றவரை தவிர்க்கப் பாருங்கள். பிரிவு காலத்தில் சோதனைகள் பல ஏற்படலாம்.


9. துரோகம் செய்யாதீர்கள்

ஒருவர் ஒருவருக்குத் துரோகம் செய்யாதீர்கள். பிரமாணிக்கமாயிருங்கள். பிரமாணிக்கத்திற்கு விளைவிக்கும் சோதனைகளையும், சோதனைகளுக்கு இடந்தரும் சந்தர்ப்பங்களையும் விட்டு விலகுங்கள். தன் மனைவியைத் தவிர பிற பெண்களிடம் கூச்சம் இன்றிப் பேசிப் பழகுவதைக் தவிர்க்க வேண்டும். பெண்ணுக்கு இயற்கையாகவே இருக்க வேண்டிய அச்சம், நாணம், அடக்கம், மரியாதை குணங்களை மனைவி போற்ற வேண்டும்.


10. சண்டை ஏற்படல்

இருவருக்குமிடையில் சண்டையேற்படும் போது ஒரு தலைப்பில் மட்டும் சண்டை பிடிப்பது நன்று. அதே போன்று பழைய கதைகளைக் கிண்டிக் கிளறாது இருப்பது நன்று. பெற்றோர், மாமா, மாமியை இழுத்துப் பேசுவதை (ஏசுவதை)த் தவிர்த்துக் கொள்ளுங்கள். சண்டையை அன்றோடு முடித்து விடுவது நன்று. ஒருவர் மற்றவரை அவமானப்படுத்தும் விதத்தில் சண்டை பிடிப்பது தவறு. ஒருவர் மற்றவரில் கண்ட குறைபாட்டைச் சண்டை நேரத்தில் இழுத்துப் பேசுவது தவறு. தமது பிரச்சினைகளைச் சரியான பயிற்சி பெறாதவர்களிடம் சொல்வது தவறு. அது வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடும். மாதவிடாய் நின்றதும் அல்லது கற்பப்பையைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றியதும் பெண்ணுக்குப் பாதுகாப்புணர்வு குறையலாம்.

நான் இனிமேல் பிரயோசனம் இல்லாத ஒருவர் என்ற நிலை ஏற்படலாம். நான் முன்பு போல் சரீரத்தில் கவர்ச்சியான ஒருத்தியல்ல. உடலுறவிலும் முன்பு போல் கவர்ச்சியில்லை என்ற எண்ணம் எழுவதால் கணவன் முன்பு போல் என் மீது அன்பில்லை என்ற சந்தேகம் எழலாம். இளம் குடும்பங்களிலும், வயதுவந்த குடும்பங்களிலும் பொறாமையும், சந்தேகமும், விசுவாசக்குறைவும் ஏற்படலாம். தான் அன்பு செய்பவரைத் தனக்குள் மட்டும் கட்டுப்படுத்திவைக்கப்பார்ப்பர். இது இளங்குடும்பப் பெண்களில் அதிகம் ஏற்படலாம். ஆகவே ஒருவர் மற்றவருக்குச் சந்தேக உணர்வு ஏற்படும் விதத்தில் நடமாடாமல், பாதுகாப்புணர்வு ஏற்படும் விதத்தில் செயற்படுவது நன்று.


11. குடும்ப ஆன்மீகம்
ஆன்மீகத்தைக் கட்டியெழுப்ப முயல வேண்டும். கிறிஸ்துவை குடும்பத்தின் தலைவராகவும், பாதுகாவலராகவும் ஏற்றுக்கொண்டு வாழ்வது நலம்.

பேராசிரியர் எஸ். ஜே. யோகராசா
உளநல ஆலோசகர், களனிப் பல்கலைக்கழகம்.















1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த ,ப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும்,
திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே,
உம்மை மன்றாடுகிறோம்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்
மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக
மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று
ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக்
குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து
நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டு
மென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!
புதுமணத் தம்பதியர் முருகனும் மியுரியாவும்
திருமணஉறவில் என்றுமே நிலைத்து நின்று
திருக்குடும்பம்போல் அன்பினில்
இன்று அருட்சாதனம் என்னும் அருட்சாதனத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள இப் புதுமணத்தம்பதிகள் ( பெயர்) தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, திருக்குடும்பத்தைப்போல அன்பிலும் பிரமாணிக்கத்திலும், மகிழ்ச்சிலும் சமாதானத்திலும் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் ஊற்றாகிய இறைவா!
இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இவர்கள் அன்பிலும் புரிந்துணர்விலும் ஒருவரை ஒருவர் ஒன்றித்து வாழவும், இவ்வுலகில் தங்கள் கடமை எது என்பதை உணர்ந்து வாழவும் தூயஆவியின் கொடைகளால் நிரப்பி நீரே வழியும் ஒளியும் ஐPவனுமாய் இருந்து, வழி நடத்திடவும் வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

கருணைக்கடலே இறைவா!

அன்று கானாவூர் திருமணத்தை ஆசீர்வதித்து எவ்வித குறையும் ஏற்படாமல் கன்னிமரியாள் இறைமகன் கிறீதுவிடம் வேண்டிக் கொண்டதுபோல இப்புதுத்தம்பதியினரின் வாழ்க்கையிலும் கன்னிமரியாளின் உதவியாலும் வழிநடத்துதலாலும் இறைமகனின் ஆசீரையும் நிறைவாகப் பெறவும் அவர்கள் அன்பின் அடையாளமாக நன்மக்களைப் பெற்று, என்றும் மகிழ்ந்திருக்க உமது நிறைவான ஆசீரைப் பொழிந்திட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் ஊற்றாகிய இறைவா!

(மணமக்கள் பெயர்) என்ற இம்மணமக்களின் இல்லறம் நல்லறமாக அமையவும் பெற்றோர் உற்றாருடன் அன்புறவுடன் வாழவும் இவர்களின் ஆன்ம உடல் நோய்களை அகற்றி இவர்கள் வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று இன்புற வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

அருளின் ஊற்றே இறைவா!

இந்த திருமணக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தும் இந்த அருட்பணி அடிகளார் தொடர்ந்தும் உமது பணியைச் சிறப்பாகப் புரிய ஆன்ம உடல் நலத்தை பெற்று உமது அன்பில் நிலைத்து வாழவும் இன்னும் இத் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தம்பதியர் அனைவரும், தங்கள் திருமண வார்த்தைப்பாட்டை மீண்டும் நினைவு கூர்ந்து அதைப் புதுப்பித்து, இறை அன்பிலும், பிறரன்பிலும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழும் வரத்தினை வழங்கிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

1) திருமணத்தில் தமை அர்ப்பணித்த
முருகன் மியுரியா தம்பதியர்
திருமண உறவில் நிலைத்து நின்று
அன்பு மகிழ்ச்சி சமாதானத்தை
இறைவழியில் அடைந்திடவும்
திருக்குடும்பம்போல் வாழ்ந்திடவும்
இறையவனே உமை வேண்டுகின்றோம்

2 கானாவூர் திருமணக் காட்சியிலே
தண்ணீரை ரசமாக மாற்றியதுபோல்,
இம்மணமக்கள் திருமண வாழ்வினிலே
அருள் அன்பு வளம் பெற்று மாறிடவும்
வல்லதேவன் ஆசீருருடன்
மக்களைப் பெற்று மகிழ்திருக்க
இறையவனே உமை வேண்டுகின்றோம்


3 இறைவன் இணைத்த இத் தம்பதியர்
தூயஆவி அருள் பெற்று
தம் கடமை தனைஉணர்ந்து
அன்பு வழி சென்றிடவும்
நீதி நேர்மை சமாதானம்
கருணையுடன் செயல்படவும்
இறையவனே வேண்டுகின்றோம்

4 தெய்வீக கொடைகள் ஏழும்
அருளுகின்ற தூயஆவியே
கல்வி ஞானம் தெய்வபயம்
ஒழுக்கத்திலும் இயேசு வளர்ந்ததுபோல்
பெற்றோர் தம் பிள்ளைகளை
இப்பண்புகளில் சிறந்தவராய்
உருவாக்க உமை வேண்டுகிறோம்

5 மங்களம் பல பல பெற்றிடவும்
மணமக்கள் மாண்புடன் வாழ்ந்திடவும்
இல்லம் நல்லறம் ஆகிடவும்
செல்வங்கள் பதினாறும் பெற்றிடவும்
இயேசு மரி சூசை ஆசிருடன் -இப்
புது வாழ்வு தொடங்கிடவும்
இறையவனே உமை இறைஞ்சுகின்றோம்




திருமண ஆண்டு விழாவில் செபம்
(திருமண ஆண்டு நிறைவு நாள், வெள்ளிவிழா, பொன்விழா)
பொன்விழா மன்றாட்டு

அன்று
பொன் - வெள்ளி தூபம் ஏந்தி
மூவிராசாக்கள்
உம் திருமுன் வந்து அர்ப்பணம் செய்தனர்.
இன்று
கையில் தீபம் ஏந்தி மலர் தூவி தூபம் காட்டி
இத் தம்பதியர்;
உம் திருமுன் மண்டியிட்டு பொன்விழாக்காணும் இந் நாளில் இந்நன்றித் திருப்பலியை ஒப்புக் கொடுப்போம்


தந்தை இறைவனே - தந்தை இறைவனே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - தந்தை இறைவனே

இன்றிந்த நன்னாளில்- பொன்விழாக்காணும்- இனிய தம்பதியர்
இறைவன் அருளிய - கொடைகளுக்காக - நன்றி நவில்கின்றனர்
இனிவரும் வாழ்விலும் - இறைஅன்பில் வாழ - உறுதி பகன்றிட
நிறைவாய் உமது - ஆசீரைத் தாரும் - அன்புத்தந்தையே

குடும்பக் கோவிலைக் - கட்டிக் காத்து வாழ்ந்த இத்தம்பதியரின்
மக்கள் மருமக்கள் - பேரப்பிள்ளைகளையும் - அறவழியில் வாழச்செய்து
அன்பென்னும் மொழியை - வாழ்வில் என்றும் - நிலையாய் கொள்ளவும்
உமது அருளை- நிறைவாய் இவர்க்குத் - தாரும் தந்தையே

கானாவூரில்- திருமணப்பந்தியில் - கனிரசம் அருளி
முதல் புதுமையை - ஆரம்பித்த - கருணைத் தெய்வமே
குடும்ப வாழ்வில் - பொன்விழாக் கண்டு - மகிழும் இவர்களை
உமது கரங்கள் - நீட்டி ஆசீர் - தாரும் இறைவனே

நன்றித் திருப்பலியில் - பங்கு கொண்ட- இறைகுலம் அனைவர்க்கும்
புனித பலியை - ஒப்புவிக்கும் - அருட்தந்தை அவர்கட்கும்
இறைவன் அருளும் - புனிதர் உறவும் - நிறைவாய் விளங்கிட
கிருபை நிறைந்த - உமது அருளைத் - தாரும் தந்தையே

எமது தாய்திரு- ஈழநாட்டில் - வாழும் மக்களின்
வாயிருந்தும் -பேசமுடியாத - அடிமைத்தனம் நீங்கி
நல்லுறவும் - சமத்துவமும் கொண்ட - மக்களாய் வாழ
நிறைவாய் உமது - அருளைத்தாரும் - தந்தை இறைவனே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலைய எமக்குத் தந்தாய்