• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

வியாகுல  அன்னையின் மன்றாட்டு மாலை

   

வியாகுல அன்னைக்கு மன்றாட்டு மாலை

முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

முத: புனித மரியாயே
முத: இறைவனின் புனித மாதாவே
முத: கன்னியருள் உத்தமக் கன்னிகையே
முத: வேதனையடைந்த மாதாவே
முத: வியாகுலமடைந்த மாதாவே
முத: கண்ணீர் சொரிந்த மாதாவே
முத: துயரமடைந்த மாதாவே
முத: கைவிடப்பட்ட மாதாவே
முத: ஆறுதலற்ற மாதாவே
முத: மகனை இழந்த மாதாவே
முத: வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே
முத: சஞ்சலத்தில் அமிழ்ந்திய மாதாவே
முத: இதயத்தினுள் சிலுவை சுமந்த மாதாவே
முத: மகா துக்கமுள்ள மாதாவே
முத: கண்ணீர்ச் சுனையான மாதாவே
முத: பாடுகளின் திரளான மாதாவே
முத: பொறுமையின் கண்ணாடியே
முத: உறுதி நிலைமையின் குன்றே
முத: நம்பிக்கையின் பெட்டகமே
முத: கைவிடப்பட்டோர்களுக்கு அடைக்கலமே
முத: துன்பப்படுகிறவர்களின் கேடயமே
முத: அவிசுவாசிகளின் ஜெயசீலியே
முத: நிர்ப்பாக்கியர்களின் ஆதரவே
முத: நோயுற்றவர்களின் ஆரோக்கியமே
முத: மெலிந்தவர்களின் திடனே
முத: யாத்திரையில் துன்பப்படுகிறவர்களின் துறைமுகமே
முத: பெரும்புயலைத் தணித்தவளே
முத: பயணத்தில் துன்பப்படுகிறவர்களுக்குத் தஞ்சமே
முத: துஷ்டர்களின் அச்சமே
முத: விசுவாசிகளின் பொக்கிஷமே
முத: இறைவாக்கினர்களின் நேத்திரமே
முத: திருத்தூதர்களின் உதவியே
முத: மறைசாட்சிகளின் கிரீடமே
முத: துதியர்களின் ஒளியே
முத: கன்னியர்களின் ஆரமே
முத: கைம்பெண்களின் தேற்றரவே
முத: எல்லாப் புனிதர்களின் ஆனந்தமே

முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!

எல்: இறைவனின் தூய அன்னையே, இதோ உம்மிடம் சரணடைய ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களில் நாங்கள் வேண்டிக்கொள்ளும் போது நீர் பாரா முகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் விண்ணகத்துக்கு உரியவளுமாயிருக்கிற நித்தியக் கன்னியே, எல்லா ஆபத்துக்களினின்றும் எங்களைப் பாதுகாத்தருளும்.

முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்கும்படியாக
எல்: வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முத: மன்றாடுவோமாக!
இறைவா, உமது அடியாராகிய சிமியோன் இறைவாக்குரைத்தபடியே உம் திருமகன் சிலுவை சுமந்துப் பாடுபட்ட போது மாட்சி மிக்கக் கன்னித் தாயான மரியாவின் மதுரமான ஆன்மா வியாகுல வாள்களால் ஊடுருவப்பட்டதே. அவருடைய வியாகுலத்தையும் வேதனையையும் வணங்கி ஆராதிக்கிற நாங்கள், உம் திருமகனுடைய சிலுவையை நேசித்த எல்லாப் புனிதர்களின் மகிமையுள்ள பேறுகளினாலும் மன்றாட்டுக்களினாலும் உம் திருமகனுடைய திருப்பாடுகளின் பலனை அடையும்படி அருள் புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.



வியாகுல அன்னையின் கண்ணீர் செபமாலை


செபமாலையின் சிலுவையில்:
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! இதோ உமது காலடியில் தென்டனிட்டு விழுந்து, உமது துயரம் நிறைந்த சிலுவைப்பாதையில் அனுதாபப்பட்டு வேதனையுடன் உம்மைப் பின் சென்ற உம் தாயின் கண்ணீரை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். ஓ நல்ல இயேசுவே! உமது அன்னையின் கண்ணீர் எங்களுக்குக் கற்றுத் தரும் பாடங்களை நாங்கள் எங்கள் இதயத்தில் ஏற்று, இந்த மண்ணுலகில் உமது திருவுளம் நிறைவேறவும், விண்ணகத்தில் நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கத் தகுதியுள்ளவராகச் செய்தருளும். ஆமென்.

பெரிய மணிகளில்:
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் உலகத்திலிருக்கும் போது உம்மை அதிகமாக அன்பு செய்து, இப்போது விண்ணகத்தில் உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்யும் உமது தாயின் கண்ணீரைக் கண்ணோக்கியருளும்.

சிறிய மணிகளில்:
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது தாயான தூய கன்னி மரியாவின் கண்ணீரைப் பார்த்து, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். (முதலில் மூன்று முறையும், பின் கீழுள்ள மன்றாட்டைச் சொல்லி ஏழு முறை சொல்லவும்)

ஏழு மணி செப மன்றாட்டுக்கள்:

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது இதயத்தை ஓர் வாள் ஊடுருவும் என்று முன்னுரைத்த சிமியோனின் வார்த்தைகளைக் கேட்டு, உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எங்கள் துன்பத் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்க அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது தாயானத் தூய கன்னி மரியா எகிப்து நாட்டுக்கு ஓடிப் போன போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, எல்லா அகதிகள் மேலும், உம் மீது கொண்ட விசுவாசத்திற்காகத் துன்பத் துயரங்களையும், வேதனைகளையும் அனுபவிக்கும் அனைவர் மேலும் இரக்கமாயிரும். ( 1 பர, 7 அருள். 1 திரி.)
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! மூன்று நாள்களாக உம்மைக் காணாமல் உமது தாயானத் தூய கன்னி மரியா உம்மைத் தேடியலைந்த போது சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, உம்மை இழந்த ஆன்மாக்கள் அனைவரும் மீண்டும் உம்மைக் கண்டு மீட்படைய அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! உமது வேதனை நிறைந்த சிலுவைப்பாதையில் நீர் நடந்து சென்ற போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நோயாலும், துன்பத் துயரங்களாலும் நாங்கள் வருந்தும் போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, சோதனைகளில் நாங்கள் விழுகின்ற போது நீரே வழியும், உயிரும், உண்மையும் என்பதை எங்களுக்குக் காட்ட அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண வேதனைப்படும் போது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, மரண வேளையில் துன்பப்படும் அனைவர் மீதும் இரக்கமாயிருந்து, எங்களது மரண வேளையில் எங்களை உமது கரங்களில் அன்போடு ஏற்றுக்கொள்ள அருள் புரிவீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு உமது தாயின் மடியில் வளர்த்தப்பட்ட போது, அவர் சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, வேதனைப்படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களுடைய சக்திக்கு மேலானத் துன்பங்களை நீர் அனுமதிக்க மாட்டீர் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும். ( 1 பர, 7 அருள். 1 திரி.)

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டபோது உமது தாயானத் தூய கன்னி மரியா சிந்தியக் கண்ணீரைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள அருள் புரிவீராக. இந்த நாட்களில் உம் சுரூபங்களில் வடியும் கண்ணீருக்குப் பரிகாரமாக எங்கள் துன்பங்களையும் எங்கள் அன்பையும் ஏற்றுக் கொள்வீராக. ( 1 பர, 7 அருள். 1 திரி.)







பரிசுத்த கன்னி மரியாளின் வல்லமையான வியாகுல மாதா ஜெபமாலை
( 7 ரகசியங்கள் 7 மணிகளோடு கூடியது)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
முவொரு இறைவன் புகழ்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுது ம் என்றென்றும் இருப்பதாக ஆமென்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

தூய ஆவியாரே இறைவா! எழுந்தருளிவாரும்! விண்ணகத்திலிருந்து உமது அருள் ஒளியின் கதிர்களை அனுப்பும், ஏழைகளின் தந்தையே,
கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பேரொளியே, எழுந்தருளி வாரும். நிறை ஆறுதலானவரே, ஆன்மாக்களுக்கு இனிய விருந்தாளியே, பேரின்ப இரக்கமுள்ள இளைப்பாற்றியே, நோயில் நலமே! வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் ஆறுதலே எழுந்தருளி வாரும். மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிற பேரொளியே, உம் நம்பிக்கையாளர்களுடைய இதயத்தை நிரப்பும். உமது தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.தூய்மைற்றதை தூய்மையாக்கும். உலர்ந்ததை நனையும், காயங்களைக் குணமாக்கும். வணங்காததை வணங்கச்செய்யும். குளிரோடிருப்பதைக் குளிர்போக்கும்.  தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பிய எமக்கு உம் திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணிய பேறுகளையும் நல்ல இறப்பையும் முடிவில்லா பேரின்பத்தையும் எங்களுக்குத்தந்தருளும் ஆமென்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹



 விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன்.
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்.
பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார்.
தூய ஆவியாரை நம்புகின்றேன்.
புனித கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன் ஆமென்

முதல் மூன்று சிறிய மணியில்
�அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியுமான இயேசுவும் ஆசிர்வதிக்கபெற்றவரே அர்ச்சியசிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.

1 பெரிய மணியில்
உன் இதயத்தை ஓர் வாள் ஊடுருவும் என்ற, சிமியோனின் இறைவாக்கைக் கேட்டு, அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்

சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....

2🌺 பெரிய மணியில்
ஏரோதுக்கு பயந்து, எகிப்து தேசத்திற்கு தப்பிப் போனபோது, அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்
💐சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....

3🌺 பெரிய மணியில்
கோயிலில் மூன்று நாட்கள் காணாமல் போன இயேசுவை, தேடியபோது, அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்
💐சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....

4🌺 பெரிய மணியில்
இயேசு சிலுவை சுமந்து சென்றதைக் கண்ட, அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்
💐சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....

5🌺 பெரிய மணியில்
இயேசு, சிலுவையில் மரணமடைந்ததைக் கண்ட ,அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்
🌷சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....
.
6🌺 பெரிய மணியில்
சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட, இயேசுவின் திரு சரீரத்தை, தன் மடியில் வைத்து அழுதபோது, அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்
💐சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....

7🌺 பெரிய மணியில்
இயேசுவின் திரு சரீரத்தைக், கல்லறையில் அடக்கம் செய்த போது, அன்னை அனுபவித்த வியாகுலத்துக்கு இதை அர்ப்பணிப்போம்
💐சிறிய மணியில்
1 விண்ணுலகில்
7 அருள் நிறைந்த மரியே
1 திரி
ஓ என் இயேசுவே....

💐செபிப்போமாக
ஆண்டவரே உமது தூய ஆவியானவரின் தூண்டுதலால் இறைவாக்கு உரைத்த சிமியோன் வாக்கிற்கு மரியாள் இதயத்தை ஊடுருவிய அவள் அனுபவித்த துன்ப துயரங்களை தியானிக்கின்ற நாங்கள் மரியாள் மேல் பக்திகொண்டு அவளை போல் இறை சித்தத்தை ஏற்றுக்கொண்டு எங்கள் வாழ்நாளில் சந்திக்க நேரிடும் துயரத்தை தாங்கி இயேசுவின் சிலுவை பயணத்தில் துணிவுடன் நடைபோட அருள் தந்திட உம் மகனாம் எங்கள் ஆண்டவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென்





வியாகுல மாதா செபமாலை.

நம் அன்னை, தன் அன்பு மகனின் பிறப்பு முதல் இறப்பு வரை எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார்கள். துணை மீட்பராக விளங்கிய நம் தாய், தன் மகனின் பாடுகளில் தனது மாசுமருவற்ற தூய இருதயத்தை அடித்து நொறுக்கி செயலிழக்க செய்வது போன்ற வேதனையை அனுபவித்தார்.

இவ்வாறு வானவனின் வார்த்தைக்கு 'ஆகட்டும்' என, தன்னைக் கையளித்த நாள் முதல் நம் தாய் அனுபவித்த வியாகுலங்கள் பற்பல. என்றாலும் நம் தாயாம் திருச்சபை அவற்றில் ஏழு வியாகுலன்களைப் பற்றி தியானிக்க அழைக்கிறது. நாமும் நம் அன்னையின் வியாகுலங்களை தியானிப்போம்.



முதல் வியாகுலம் - சிமியோனின் இறைவாக்கு.

லூக் 2: 25 முதல் 35.

இந்த முதல் வியாகுலத்தில் நம் அன்னை மரியா தன் குழந்தையை யூத பாரம்பரியப்படி கோவிலில் காணிக்கையாகக் கொண்டு செல்கிறார். அங்கே பல ஆண்டுகளாக வாக்களிக்கப்பட்ட மீட்பராகிய மெசியாவின் வருகைக்காகக் காத்திருந்த முதியவர் குழந்தையைக் கையில் எடுத்து "இதோ இக்குழந்தை பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாகத் திகழும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் விளங்கும்" என்றார் . மேலும் அதன் தாயாகிய மரியாவைப் பார்த்து "உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவும்" என்றார்.

என்ன ஒரு கொடுமையான வாழ்த்து! இதுவரை எந்தத் தாயும் தன் மகனைப் பற்றி முதன் முதலில் கேட்டிராத வாழ்த்து இது. இன்று குழ்ந்தை பிறந்தவுடன், கூடும் உறவுகள்,உன் மகன் நன்கு படிப்பான்,பெரிய ஆளாக வருவான், உன் குடும்பப் பெயரை சிறக்கச் செய்வான் என்பன போன்ற வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் சூழலில் இப்படியும் ஒரு வாழ்த்து. இறைவனால் வாக்களிக்கப்பட்ட தன் மகனுக்கும், அவரால் தனக்கும் நேர இருக்கும் கொடுமையை அறிந்தும் பதறவில்லை நம் தாய்!. காரணம், எல்லாம் இறைத் திருவுளம் என்று ஏற்கும் மனப்பக்குவம். இந்தத் துணிவு நமக்கும் வாய்க்கப்பெற ஜெபிப்போம்

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.



இரண்டாம் வியாகுலம் - குழந்தையுடன் எகிப்துக்கு தப்பி ஓடுதல்.

மத் 2:13,14

இந்த இரண்டாம் வியாகுலத்தில் நம் தாய் மரியாள், தன் மகன் இயேசுவைக் கொல்லத் திட்டமிட்ட ஏரோதுக்குப் பயந்து, வானவரின் வழிகாட்டுதலின் பேரில் எகிப்துக்குத் தப்பியோடி அங்கே இருக்கின்றார். எங்கும் இருள், தெரியாத முகம், அறியாத மொழி, புரியாத கலாச்சாரம் என எல்லாமே புதிது!

உணவுக்கு என்ன வழி புரியவில்லை. தங்க இடத்திற்கு என்ன செய்வது தெரியவில்லை. யாரிடம் உதவி கேட்பது என எதுவுமே தெரியாதவர்களாய், முன்பு தன் இனத்து மக்களை தன் வீட்டு மாட்டிலும் கேவலமாக நடத்திய மக்கள் மத்தியில் வாழ்ந்து அனுபவப்படுகின்றார். யூத மக்களின் அடிமை வீடு என அழைக்கப்பட்ட எகிப்தில் யூத மக்களுக்கு உரிமை வாழ்வை அளிக்க கடவுளால் கொடுக்கப்பட்ட மகன் வருகிறார். இந்தத் துயர் அன்னையை எவ்வளவு வேதனைக்கு உள்ளாக்கி இருக்கும் என உணர அன்னையின் துணை வேண்டி ஜெபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.




மூன்றாம் வியாகுலம் - மூன்று நாள் இயேசு காணாமல் போதல்.

லூக் 2: 43,44.

திருவிழாக் காலங்களில் குழந்தைகள் தாய் தந்தையை விட்டுப் பிரிந்து செல்வதும் பின்னர் நீண்ட தேடலுக்குப் பின் பிள்ளைகளைக் கண்டடைந்து மகிழ்ச்சி கொள்வதும் நம் அனுபவத்தை ஒத்தது. இதோ இங்கே ஒவ்வோர் யூதக் குழந்தையும் 12 வயது நடக்கின்ற போது எருசலேம் ஆலயம் சென்று காணிக்கை செலுத்தி மறைநூலை வாசிக்கும் தகுதி பெறுகின்றனர்.

இந்த மதச் சடங்கை நிறைவேற்றவே இயேசுவின் பெற்றோர் இயேசுவைக் கோவிலுக்கு அழைத்து வந்தனர். சடங்குகள் முடிந்து வீட்டுக்குச் செல்ல முற்படும்போது இயேசுவைக் காணவில்லை.

"கடவுள் வாக்களித்த திருமகன், உலகை மீட்க வந்த இரட்சகன், தூய ஆவியால் பிறந்த திருமகனை" காணாமல் போக விட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்வு ஒரு புறம், பிள்ளைப் பாசம் மறுபுறமுமாக பிரிந்த மகன் கிடைப்பானா என்ற ஏக்கத்தோடு கண்ணில் படும் குழந்தைகள் அனைத்தும் தன் மகனோ என்ற பிரமை, இந்தப் பக்கம் போயிருப்பானோ அந்தப் பக்கம் போயிருப்பானோ, என்ற குழப்பத்தோடு நம் தாய் தன் நிலை மறந்து தவிப்பதைத் தியானித்து, எந்த நிலையிலும் இயேசுவை விட்டுப் பிரிந்து போகாமலிருக்க மன்றாடுவோம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.




நான்காம் வியாகுலம் - இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்.

லூக் 23:27.

இந்தக் கொடூரச் செயலைக் கன்னுற்ற நம் தாய் எங்கோ, யாருக்கோ கிடைக்க வேண்டிய தண்டனை இன்று தன் ஒரே மகனுக்கு, குற்றமற்றவருக்குக் கிடைத்திருப்பதைக் கண்டு வருத்தம் மேலிட வதங்கி நிற்கிறார். இது அன்னையின் மனதை உடைத்து நொறுக்குவது போன்ற வேதனையைத் தந்தது.

30 ஆண்டுகளாக கண்ணுக்குள் கண்ணாகப் பொத்திப் பொத்தி வளர்த்த மகன் இந்த மூன்று ஆண்டுப் பணி வாழ்வால், விரோதியாக, வேண்டாதவராக, எதிர்க்கப்பட வேண்டியவராக, ஒழித்துக் கட்டப்பட வேண்டியவராகப் பார்க்கப்படுவதைக் கண்டு குமுறுகிறது அன்னையின் உள்ளம்.

"எப்போதும் மக்கள் கூட்டத்தோடு நடந்து, எல்லோரையும் ஏற்றுக் கொண்டு, எவரும் அன்னியரல்ல என்று போதித்து, எல்லோருக்கும் என் இதயத்தில் இடமுண்டு" என சொன்னவர் , இன்று நாதியற்று, நையப் புடைக்கப்பட்டு, உடல் முழுதும் காயங்களோடு தள்ளாடி தூக்க முடியாத பாரச் சிலுவையைத் தூக்கிச் செல்வதைக் கண்டு, அன்னை அனுபவித்த துயரைத் தியானித்துச் செபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.




ஐந்தாம் வியாகுலம் - இயேசுவின் சிலுவை அடியில் அன்னை.

யோவா 19:41,42.

முதலும் முடிவுமானவர், இருக்கின்றவராய் இருக்கின்றவர் நானே என்று கூறிய இறைவனின் மகன் இன்று மூன்று ஆணிகளுக்கு மத்தியில் முடக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறார் மரியா. இறுதியாகத் தன்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் தன் தாயை வாரிக் கொடுக்கிறார் இயேசு. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை இறுதிவரைக் காத்த இயேசு இந்த நேரத்திலும் தன் தாயை அவர்களுக்குத் தாயாக, சிறந்த வழிகாட்டியாக, "அம்மா, இவர்களைக் கவனித்துக் கொள்" என்ற அர்த்தத்தில் "இதோ உம் மக்கள்" என்கிறார்.

கருவிலே தனக்குப் புரட்சி கீதம் பாடி புதுமையாகச் செயல்படத் தூண்டியது போல தன் சீடர்களுக்கும் இறைவனுக்குள் தாயாக, இறைவிருப்பத்தைச் செய்யத்தூண்டும் புத்துணர்வுப் பெட்டகமாக இரும் என அன்புக்கட்டளை இட்ட போது, அன்னையின் மனம் எத்தகைய கலக்கத்தை உணர்ந்திருக்கும் எனத் தியானித்து வாழ்வில் வரும் சிறிய பெரிய இழப்புகளை இறைவனின் துணையால் மேற்கொள்ள அருள் வேண்டி ஜெபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.




ஆறாம் வியாகுலம் - மாதாவின் மடியில் மரித்த மகன்.

யோவா 19:40 .

தாலாட்டி வளர்த்த தங்க மகன், சீராட்டி வளர்த்த சிறந்த மகன், பாராட்டி வளர்த்த பாச மகனின் உடல் உயிரற்றுக் கிடப்பதை உற்று நோக்கி மடியில் தாங்கி இருக்கும் அன்னையின் மனத்துயரைச் சிறிது நேரம் அமைதியில் உணர்ந்து பார்ப்போம்.

சிறு குழந்தையாய் இயேசு இருந்தபோது தூங்க வைப்பதற்காகத் தாங்கிய மடி, இன்று தாங்குகிறது 33 வயது இளைஞனின் உயிரற்ற உடலை. "அம்மா, என் பணியை முடித்து விட்டேன், செல்லவா?" என்று கேட்பது போன்ற உணர்வு அன்னைக்கு. உள்ளம் நொறுங்குண்டவராக, இனி யாருக்காக வாழ வேண்டும்? எனக்கென்று யார் இருக்கிறார்கள்? எனப் பற்பல கேள்விகள் உள்ளத்தைக் குத்த மௌனியாகிப் போனார் நம் தாய்மாரி. அன்று எருசலேம் ஆலயத்தில் உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சீமோன் சொன்னாNர் அந்த அம்பு இத்தகைய கொடுமையானதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை எனத் திகில் கொண்டவராக இருக்கும் அன்னையின் துயரைத் தியானிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.




ஏழாம் வியாகுலம் - இயேசுவை அடக்கம் செய்த பின், அன்னை அனுபவித்த துயரம்.

யோவா 19:41,42.

இல்லாமை இயலாமை, ஆக அனைத்திலும் பெரிய கொடுமை தனிமை. எனக்கென்று யாருமில்லை, சொந்தம் என்று சொல்ல ஒருவரும் இல்லை, என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லை, என்ற தனிமைத் துயரை ஒரு நேரமாவது அனுபவித்தவர்கள் மட்டுமே அன்னையின் இந்த ஏழாம் வியாகுலத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

யாருக்காக ஆகட்டும் என்றார்களோ, யாருக்காகத் தன் வாழ்வைப் பணயம் வைத்தார்களோ, யாருக்காக வாழ்க்கையின் அத்தனை இடர்களைச் சமாளித்தார்களோ, அவரே இன்று இல்லை என்ற போது இனி ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் மிஞ்சும். அகன்ற பாலைவனம், எங்கும் இருள் என வெறுமை மட்டுமே மனதை நிறைத்து நிற்கும் சூழலில், ஓர் அகல் விளக்காகத் தனித்து இருக்கும் அன்னைக்கு துணையாக நாமும் அமர்ந்து செபிப்போம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
7 அருள் நிறைந்த...
1 பிதாவுக்கும்...
ஆமென்.



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்