ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த ஞாயிறு வாசகம்    
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
B தவக்காலம்1  
ஆழ்ந்த அமைதியில் இறைசெய்தியைக் கேட்டு, சந்தேகங்களை சந்தோசமாக மாற்றி, தெளிவடைந்து, அமைதியில் பணிந்து நடப்பதுவே அழகு என்று வாழ்ந்து காட்டிய தூயசூசையப்பரைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற வேட்கை யோடு இந்த இறை சந்நதி முன் குழுமியுள்ள அன்பு இறைமக்களே, உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன்.

சூசையப்பர் தாவீதின் வழி வந்தவர், நேர்மையாளர், நீதிமான், அன்னை மரியாவுக்கு அனைத்திலும் உறுதுணையாக இருந்த உற்ற துணை. குழந்தை இயேசுவை கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்த அன்புத் தந்தை.

கடவுளின் திருவுளம் இதுதான் என்றால் அதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று தனது வாழ்க்கை முழுதும் பிரமாணிக்கத் தோடு வாழ்ந்தவர்.

எல்லோரும் நல்லவரே, அனைவரும் நேர்மை யாளர்களே என்ற சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே நேர்மையாளர்களாக வாழ முடியும். அத்தகைய சிந்தனை கொண்ட சித்தராக, பண்பாளராக வாழ்ந்த சூசை, கன்னி மரியாவின் கணவர் என்பதை மகிழ்ச்சியோடு அறிக்கையிட்டு அதனை ஆனந்தமாகக் கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கிறது.

இல்லறமோ, துறவறமோ நாம் எந்த நிலையை தேர்வு செய்தாலும், இறைவன் நம்மை அழைத் திருக்கிறாரா இல்லையா? இவர் தான் அல்லது இவள் தான் என் வாழ்க்கை துணையா? என்று கேள்வி கேட்டுக் கொண்டே காலத்தைக் கடத்தாமல் தேர்ந்தெடுத்த வாழ்வில் புனித சூசையப்பரைப் போல் இறுதி மட்டும் உறுதியுடன் பயணம் செய்து வாழ்வை நிறைவு செய்ய இறையருளை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்புத் தந்தையே இறைவா, திருச்சபையின் தலைவரான எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் மற்றும் அருட்பணியாளர்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும். எல்லாவற்றிலும் உம்மையே முழுமையாக தேடி, உமக்குத் தொண்டு செய்வதையே எந்நாளும் தம் கடமை என்று வாழ்ந்த தூய வளனாரைப் போல் இவர்கள் வாழவும், அவர் கொண்டிருந்த ஆன்மீகம், அவர் கடைபிடித்த கடவுள் பக்தி, அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கை ஆகியவற்றை இவர்கள் பெறவும், அதன் மூலம் சிறந்த ஞானத்தையும், நிதானத்தையும், நிறை வாழ்வையும், நிம்மதியையும் அவர்கள் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


உனது குடும்பமும், உனது அரசும் உறுதியாக இருக்கும் என்று தாவீதுக்கு நம்பிக்கை அளித்த அன்பு தந்தையே இறைவா, புனித சூசையப்பரை குடும்பங்களின் பாதுகாவலராகத் தந்தமைக்காக உம்மை போற்றுகிறோம். அவரது நன்மாதிரியை பின்பற்றி நேர்மையாளராக வாழவும், பிறர் மீது நல்லெண்ணம் கொண்டோராய் வாழவும், அவரைப் போல் மௌனத்தில் உம்மைத் தேடியும், உழைப்பில் உம்மைக் கண்டும் வாழ அருள் புரிய வேண்டுமென்று தூய சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


அன்புத் தந்தையே இறைவா, தனது வாழ்வில் ஒவ்வொரு இக்கட்டான கட்டத்திலும் சரியான முடிவெடுத்து, யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்து காட்டிய புனித சூசையப்பரைப் போல் எங்களது வாழ்வில் விடை காண முடியாத பல கேள்விகள் எங்களை வாட்டுகிறபோது, அவற்றை பொறுமையோடும், நம்பிக்கையோடும் எதிர்கொண்டு வெற்றிப் பெறவும், உமது விருப்பத்தை கண்டுணர்ந்து கடமை உணர்வோடு வாழவும் அருள் செய்ய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


குடும்பங்களின் தலைவரான இறைவா, எங்களது குடும்ப வாழ்க்கை விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் முழுமையாக உணர்ந்து வாழவும், கணவன் மனைவியாகிய நாங்கள் ஒருவரையொருவர் நிபந்தனையின்றி ஏற்று, குறை நிறைகளை ஒன்றாக பாவித்து வாழும் மனப்பக்குவத்தையும், முதிர்ச்சியையும் தாரும். எங்கள் அன்பில் விளைந்த எங்கள் பிள்ளைகளை ஞானத்திலும், ஒழுக்கத்திலும் வளர்த்து தூய வளனாரின் திருக்குடும்பம் போல் எங்கள் குடும்பமும் திகழ அருள்புரிய வேண்டுமென்று புனித சூசையப்பர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 
திருப்பலி முன்னுரை - 2
ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
இறைமகனை வளர்த்தெடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனிய தன்மையராம் புனித யோசேப்பின் பெருவிழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் அன்புள்ளங்களை வரவேற்கிறோம்.

ஆண்டவரின் தூதர் மொழிந்த வாக்கைச் செயல்படுத்த ஆயத்தமான புனித யோசேப்பையும், ' ஆண்டவரின் அடிமை' என்றுரைத்த கன்னி மரியாவையும் கனப்படுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவதூறு கூறாமல், அருவருப்பு கொள்ளாமல் மரியை மறைவாய் விலக்க எண்ணிய ஒரு கண்ணியவான் புனித யோசேப்பு. அவரின் பெருவிழாவைச் சிறப்பிக்கும் நாம் அவரின் எண்ணங்கள், செயல்பாடுகளை மனதிற் கொண்டு செயல்படுவோம்.

தாவீதுக்கு இறைவன் வழங்கவிருக்கும் ஆசீரை நாத்தான் மூலமாக இறைவன் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. தாவீதின் சந்ததியை ஆசீர்வதிக்க இறைவன் விரும்புகிறார். தாவீதும் தன் வழி பிறழ்ந்து தவறிழைத்தார். தவறுக்காக மனம் கசிந்தார்; மனம் மாறினார்; இறைவன் அவரையும் அவரது வழிமரபையும் மிக அதிகமாகவே ஆசீர்வதித்தார்.

இறைவன் மீது உள்ள எதிர்நோக்கை உறுதியாக்க இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் எடுத்துரைக்கிறார். எதிர்நோக்கும் எதிர்பார்ப்பும் வேறுபட்டது. எதிர்நோக்கு என்பது உறுதியான ஐயமற்ற நம்பிக்கை; கிடைக்கலாம் என்பது எதிர்பார்ப்பு; கிடைத்தே தீரும் என்பதே எதிர்நோக்கு அவருடைய எதிர்நோக்கு ஈசாக்கைப் பெற்றுத் தந்தது; விசுவாசத்தின் தந்தையாக உயர்த்தியது. நாமும் இறைவனிடம் மட்டும் எதிர்நோக்குவோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், கன்னிமரி மற்றும் வளனாரின் துணிவான தியாகங்களும் வெளிப்படுத்தப்படுகிறது. தனது குறைகளை மறைத்து பெருமைகளைப் பறைசாற்றுவோர் மத்தியில், தனக்கு மண ஒப்பந்தம் ஆன மரியின் தூய்மையை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தியாகம் புனித யோசேப்பிற்கு இருந்தது. இகத்தில் பிறப்பெடுக்க இறைவனால் அழைக்கப்பட்டு, இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற தூய வளனாரிடம் திருக்குடும்பங்களின் மாண்பு நம் குடும்பங்களிலும் ஒளிர மன்றாடி இப்பலியில் வேண்டுவோம்.


மன்றாட்டுகள்:


1. தூய ஆவியால் வழிநடத்துபவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, திரு அவைப் பணியாளர்கள் தூய ஆவியாரின் துணையைப் பெற்றுக் கொண்டு, ஆவியின் கனிகளைப் பெற்று, மக்களை நல்பாதையில் நடத்த தேவையான இறையருளைப் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருக்குடும்பத்தை உருவாக்கியவரே எம் இறைவா!
இறைமகன் பிறப்பெடுத்து எளிய குடும்பம் திருக்குடும்பம் ஆனது போல், எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானத்தில் நிறைவு, இயேசுவின் உடனிருப்பை அறிந்து மற்றவர்களோடு ஒன்றித்து வாழவும், உதவி புரிய நேசக்கரம் நீட்டவும் செய்து, நற்செய்தியை செயல்களில் வெளிப்படுத்த வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உழைப்பின் மேன்மையை விளங்கச் செய்பவரே எம் இறைவா!
உழைப்பை வெறுக்காது உண்மையாய்ச் செய்த புனித யோசேப்பைப் போல எங்கள் திறமைகளையும், காலங்களையும் வீணாக்காமல், தெளிவான எண்ணங்களை திறமையான செயல்களில் வெளிப்படுத்த ஞானம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தூய்மையான உள்ளம் பெற்றவர்களாய் வாழ அழைப்பவரே எம் இறைவா!
சூசையப்பரின் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இந்நாளில் தூய்மையையும் வாய்மையையும் பெற்று வாழவும், பிறரின் குறைகளையும் கறைகளையும் பொறுத்துக் கொண்டு, தூய வாழ்வு வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.
யோசேப்பு வழிகாட்டும் நீதிமான்

இறையன்பில் இனியோரே, இறைவனின் மீட்புத்திட்டத்தில் மீட்பராம் இயேசுவின் அருட்காவலாக, உற்றத்துணையாக, விளங்கியவர் தூய யோசேப்பு. திருவிவிலியம் அவரை ' நீதிமான்" எனக் கோடிட்டுக் காட்டுகிறது. தூய யோசேப்பின் பண்பு நலன்கள், நீதிமானின் நெறிச்செரிந்த வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன. எவ்வாறெனில்...?

தன்னடக்கம் - மிக்க தயாளன்
தூய யோசேப்பு, தன்னடக்கம் மிக்க தயாளனாக நமக்குக் காட்டும் வழி இதோ. இல்லறம் நடத்தும் முன்னே கருவுற்ற மரியாவைக் காட்டிக் கொடுக்கத் துணியாமல், கன்னியத்துடன் அச்செய்தியைத் தனக்குள் அடக்கிவைத்து, தனக்கு மட்டுமே தெரிந்த அச்செய்தியைப் பகிரங்கப் படுத்த விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு ஒரு நல்ல பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றார். பிரச்சனை-குழப்பம் எதுவாயினும் அதை தம்பட்டமடித்து பெரிதாக்காமல், தன்னடக்கத்தோடு தீர்த்துக்கொள்ள வழிதேடும் தயாள குணத்தை அவரிடம் நாம் கற்றுக் கொள்வோம்.

கண்ணியம் - மிக்க காவலன்
தூய யோசேப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மரியாவையும், இயேசுவையும் எங்ஙனம் காத்து வந்தார் என்பதை நாம் திருவிவிலியத்தில் காண்கிறோம். பேறுகால மனைவியாகிய மரியாவை பேணிக்காப்பதாக இருக்கட்டும், குழந்தை இயேசுவையும், தாய் மரியாவையும் எகிப்துக்குக் கூட்டிச் சென்றதாகட்டும், நாசரேத்தில் நல்லதொரு குடும்பத் தலைவராக வாழ்ந்ததாகட்டும், யோசேப்பு கண்ணியம் மிக்க காவலனாகத் திகழ்ந்தார் என்றால் மிகையன்று. தனது குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாக பேணிக்காக்கும் ஒருவரே நீதிமானாக வாழ்ந்து காட்டவும் முடியும் என்பதற்கு தூய யோசேப்பு நல்ல உதாரணம். நம்மில் பலர் இறைப்பணிபொதுநலப் பணி என முனைப்புடன் செயல்பட்டு, தமது குடும்பப் பணிகளைச் செய்யத் தவறுவதால், ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க தூய யோசேப்பின் முன்மாதிரியைக் கற்றுக் கொள்வோம்.

கடமைப்- பற்றுமிக்க சேவகன்
தூய யோசேப்பு, தனது கடமைகளைப் பற்றுடன் செய்து முடித்த ஒரு சேவகனாய்த் திகழ்கின்றார். இதற்கு மிகச் சிறந்த ஓர் உதாரணம். பெத்லகேம் மாடடைக் குடில்... இயேசுவின் பிறப்புக்காக மாடடைக் குடிலில் இடம் கிடைத்தது. கொஞ்சம் சிந்திப்போம். ஒரு மாடடைக் குடிலை மனிதக் குழந்தை பிறக்கும் ஒரு பிரசவக் குடிலாக மாற்றிட எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும்?... ஆனால் தூய யோசேப்பு
கடமைப்பற்றுடன் தன்னிகரில்லா மீட்பராம் இயேசுவைத், தரணி காணச் செய்திட உழைத்தார். அசுத்தங்களைச் சுத்தமாக்கி, தீவனத் தொட்டியைக் குழந்தைத் தொட்டிலாக்கி, புல்லணையை மெத்தையாக்கி, கடுங்குளிரில் கதகதப்பூட்டி, இருளை ஒளிமயமாக்கி, குழந்தை இயேசு பிறக்கும் வகையில் ஓர் கடமை வீரராக செயலாற்றிய யோசேப்பிடம் நாமும் நாடிச் செல்வோம். நமது உள்ளங்களும் மாடடைக் குடில்போன்று பாவ நாற்றங்களால் அசுத்தமாகி இருக்கலாம். தூய யோசேப்பின் துணையுடன், அதனைச் சுத்தமாக்கி இறைவன் பிறக்கும் இனிய இடமாக மாற்றிட முன்வருவோம். கடமையைச் செய்து கடவுளைக் காண்போம்.

இறுதியாக
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றெல்லாம் முழங்கும் முரண்பாடுள்ள மனிதர்களிடம் பேச்சு மட்டுமே மிச்சம்... ஆனால் செயல்வீரரான யோசேப்பு, தன்னிலே இவற்றைச் செயல்படுத்தி சிறப்பான இடம் பெறுகிறார். இயேசுவை நெஞ்சிலே சுமந்து நெருக்கம் காட்டி, தோளில் சுமந்து தோழனாய் மாறி, முதுகில் சுமந்து முழுமையாய் வாழ்ந்த தூய யோசேப்பைப்போல நாமும் இயேசுவுக்கு நெருக்கமாய் வாழ்வோம். தூய யோசேப்பின்மீது முத்தமிட்ட இயேசுவின உதடுகள் நம்மை முத்தமிடவும், அவர்மீது பதிந்த இயேசுவின் பிஞ்சுப்பாதங்கள் நம்மில் பதியவும், அவரது கரம்பிடித்துச் சென்ற இயேசுவின் பிஞ்சுக்கரங்கள் நம்மையும் பற்றிக்கொள்ளவும் நாம் முன்வருவோம். நீதிமானாகிய தூய யோசேப்பு நம்மையும் நீதியின் பாதையில் நடத்துவார்.

இறைத்திருவுளம்
இன்றைக்கு தாய்த்திருச்சபை தூய யோசேப்பின் திருவிழாவைக் கொண்டாடுகிறது. யோசேப்பைப்பற்றி வெகுஅரிதாகத்தான் நற்செய்தியிலே நாம் பார்க்க முடியும். அவர் தாவீதின் வழிவந்தவர். நேர்மையாளர். குழந்தைக்கு நல்ல பாதுகாப்பான தந்தையாய் இருந்தார். பலவற்றை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, தனது வாழ்வை அமைத்துக் கொண்டார்.

வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நம்மால் பதில் கண்டுபிடிக்க முடியாது. அவற்றிற்கு விளக்கங்களும் நம்மால் சொல்ல முடியாது. யோசேப்பின் வாழ்விலும் கூட பல கேள்விகளுக்கு அவரால் பதில் கண்டுபிடித்திருக்க முடியாது. எதற்காக தான் மரியாளை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதனால் அவருக்கு கிடைக்கக்கூடிய அவப்பெயர் என்ன? மரியாள் எப்படி தூய ஆவியினால் கருத்தரித்திருக்க முடியும்? இதை நம்ப முடியுமா? இந்த உலகம் தன்னை எப்படிப்பார்க்கும்? எதற்காக தான் வாழ்க்கை முழுவதும், இந்த குடும்பத்திற்கு காவலாக இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் அவருடைய உள்ளத்தைத்துளைத்திருந்தாலும், அந்த கேள்விகளுக்கான பதில் அவருக்கு தெரியவில்லை என்றாலும், அதைப்பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார். அதற்கு, நிச்சயம், அவர் கடவுள் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கை தான் காரணம். நம்பிக்கையாளராக இல்லாமல், யோசேப்பால் இத்தகைய வாழ்வு வாழ்ந்திருக்க முடியாது.

நமது வாழ்வில் நாம் யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்: நம்பிக்கை. நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையாளர்களாய் இருக்க வேண்டும். நம்பிக்கை உணர்வோடு வாழ வேண்டும். வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகள் நம்மை வாட்டுகிறபோது, அவற்றைப் பொறுமையாக நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். நமது நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

பொறுமை
யூதர்களின் திருமணம் மூன்று நிலைகளைக்கொண்டது. முதலில் திருமணம் பேசிவைத்தல். அதாவது குழந்தைகளாக இருக்கிறபோதே, பெற்றோர்களாலோ அல்லது திருமணத்தரகர்கள் மூலமாகவோ இந்த பையனுக்கு, இந்தப்பெண்ணை பிற்காலத்தில் மணமுடிப்போம் என்று பேசி வைத்திருப்பார்கள். சிறுவயதில் ஒருவரையொருவர் பார்க்காமலே இதைப்பெரும்பாலும் முடித்துவைப்பர். ஒருவேளை அந்த சிறுவனோ, சிறுமியோ பெரியவர்களானபிறகு ஒருவருக்கு மற்றவருக்கு பிடிக்கவில்லை என்றால், இந்த உறவை முறித்துக்கொள்ளலாம். இரண்டாவது திருமண ஒப்பந்தம். இந்த திருமண ஒப்பந்த காலம் என்பது ஓர் ஆண்டாகும். இந்த திருமணஒப்பந்தத்தில் கணவன், மனைவிக்குரிய உரிமைகள் அவர்களுக்கு இல்லையென்றாலும், அவர்கள் கணவன், மனைவியாகவே கருதப்படுகிறார்கள். இந்த உறவை முறிப்பதற்கு கண்டிப்பாக விவாகரத்து பெற வேண்டும். இந்தகாலக்கட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற கணவன் இறந்துபோனால், ' கணவனை இழந்த கன்னி' என்று அந்தப்பெண் அழைக்கப்படுவாள். மூன்றாவது திருமணம். அதாவது, திருமணஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிற ஆண்டின் இறுதியில் முறைப்படி திருமணம் நடைபெறும்.

பொறுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு யோசேப்பு. வாழ்வை பொறுமையோடு அணுகுவதுதான் யோசேப்பின் வெற்றி. மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி கேள்விப்பட்டதும், அவர் தன்னுடைய உணர்வுகளுக்கு இடமளித்து, மரியாவின் மீது கோபப்படவில்லை. மரியாவைப்பற்றி, அவளுடைய பண்புகளைப்பற்றி யோசேப்பு நிச்சயம் நன்றாக அறிந்திருப்பார். மரியாள் தவறிழைக்கக்கூடிய பெண் அல்ல என்பதும் யோசேப்புக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏதோ நடந்திருக்கிறது? அது என்னவென்று தெரியவில்லை. தெரியாதவரை பொறுமையாக இருப்பது நல்லது என யோசேப்பு நினைக்கிறார். ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். மின்சாரம் தடைபடுகிறது. எங்கும் ஒரே இருட்டு. ஒன்றுமே தெரியவில்லை. அதிலிருந்து மீள ஒரே வழி, பொறுமையாக இருப்பதுதான். ஒருநிமிடம் பொறுமையாக இருந்தால், அந்த இருளுக்கு நமது கண்கள் பழக்கப்பட்டுவிடும். காரிருளில் நம்மால் நடக்கமுடியும். பதற்றத்தில் மின்சாரம் சென்றவுடன், அங்கும் இங்கும் நடந்தால் கீழே விழவேண்டியதுதான். இந்தப்பொறுமையை யோசேப்பு நமக்கு கற்றுத்தருகிறார்.

இந்த உலகம் வேகமான உலகம். இதிலே நிதானத்திற்கு இடமில்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற நிலைதான். இன்றைக்கு பல திருமணங்கள் உடைவதற்கு காரணம் இந்த வேகம் தான். பொறுமை வாழ்விற்கு அவசியம். முடிவெடுக்கும் தருணங்களில், வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில், தேர்வு எழுதுவதில், கடவுளிடம் செபித்து காத்திருப்பதில் பொறுமை அவசியம். அத்தகைய பொறுமையை யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்வோம்.

இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாத நேர்மையாளர்!
திருக்குடும்பத்தின் பாதுகாவலரும், அனைத்துக் குடும்பங்களுக்கும் எடுத்துக்காட்டான தலைவருமான புனித சூசையப்படைய திருவிழாவை இன்று கொண்டாடுகிறோம்.

அவரைப் பற்றி அவர் ஒரு "நேர்மையாளர்" என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. அவருடைய நேர்மைத்தன்மையின் ஓர் அடையாளமாக "அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையே இன்றைய நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம்.

ஒருவர் நேர்மையாளர் என்று சொல்வதற்கான அடையாளங்களுள் ஒன்று பிறரைப் பற்றி அவர் கொண்டிருக்கிற நல்லெண்ணம். "எல்லாரும் நல்லவரே", "அனைவரும் நேர்மையாளர்களே" என்னும் அடிப்படை மனநிலை ஒரு நேர்மையாளரின் அடையாளம். நேர்மையாளர்களே பிறரையும் நேர்மையாளர் என ஏற்றுக்கொள்வர். எனவே, சூசையப்பரும் மரியாவின்மீது நல்லெண்ணம் கொண்டு, அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பிறர்மீது அவர் கொண்ட நல்லெண்ணம், பரிவு அவரது நேர்மையின் ஓர் அடையாளம்.

நம் நல்ல தந்தை சூசையிடமிருந்து இந்த நற்பண்பை நாம் கற்றுக்கொள்வோம். "பிறர் நல்லவர், நேர்மையாளர்" என்னும் மனநிலையில் வளர்வோம். ஒருவேளை சிலர் நேர்மையாளர்களாக இல்லாவிட்டாலும், அவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், அவரது நற்பெயரைக் கெடுக்காமல், அவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவோம்.

முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர்
கணவர் ஒருவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி, தான் வந்ததுகூடத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார். இதனால் கடும் கோபம்கொண்ட கணவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், " ஒரு பொம்பள எப்ப பாரு டிவி, சீரியல்னு பாத்துக்கிட்டே இருந்தா அந்தக் குடும்பம் எப்படி உருப்படும். நீயெல்லாம் வேலைக்குப் போயி, நாலு காசு சம்பாதிச்சாதான், உனக்கெல்லாம் பணத்தோட அருமை புரியும்" என்று தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய பங்குக்கு போட்டு விலாசினாள். " ஆபிஸ் வேலதான் பெருசுனு நெனைக்காதிங்க. ஒருநாளு வீட்ல இருந்து, வீட்ல இருக்குற வேலையைப் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கு இதுல இருக்குற கஷ்டம் புரியும்" என்று பொரிந்து தள்ளினாள். இறுதியல் அடுத்த நாள் கணவன் வீட்டு வேலை பார்ப்பதாகவும், மனைவி ஆபிசுக்கு செல்வதாகும் உறுதியானது.

அலுவலகத்திற்குச் சென்ற மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு கணவன் செய்த வேலையைச் செய்தாள். அவ்வப்போது அவளுக்கு வீட்டில் தன் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஆனால் வீட்டில் கணவனின் பாடு பெரிய திண்டாட்டமாய் போனது. அவன் அடுப்படியில் கிடந்து வேர்த்து விறுவிறுத்துப் போனான். குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் வெறுத்துப் போய், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவைத்தான்.

மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மனைவி, வீட்டில் என்ன நடந்ததோ என மிகவும் பதற்றத்தோடு வந்தாள். அவள் நினைத்தது போன்று நடந்திருந்தது. வீட்டுக்கு வெளியே கணவன் கையில் கம்போடு நின்றிருந்தான். " எங்கங்க ஆச்சு, இப்படி கையில் கம்போடு அலங்கோலமாக இருக்கீங்க" ? என்று கேட்டாள். அதற்கு அவன், " அத ஏன் கேட்குற, அது பெரிய கதை" என்றான். " சரி வீட்ல இருந்த பிள்ளைங்களாம் எங்க?" என்றாள் அவள். அவன் சற்றுக் கோபத்தோடு, " பிள்ளைகளா அது, பிசாசுக் குட்டிங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததனால, அவங்கள ரூம்ல போட்டுப் பூட்டி வைச்சுருக்கேன்" என்றான்.

" ஐயோ பாவி மனுஷன், ஒருநாள்ல வீட்ட அலங்கோலமாக்கிடாரே" என்று புலம்பியவாறே அறையைத் திறந்தாள். உள்ளே குழந்தைகள் எல்லாம் கட்டிலோடு சேர்த்துவைத்துக் கட்டப்பட்டிருந்தார்கள். அவளுடைய அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அவர்களுடைய குழந்தையோடு இன்னொரு பெண்குழந்தையும் கட்டப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த வெலவெலப்போன மனைவி கணவரிடம், " என்னங்க, நம்முடைய குழந்தைகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தையையும் கட்டிப்போட்டுருக்கீங்க" என்றாள். அதைக் கேட்ட கணவன், " அப்படியா! அதனால்தான் நான் குழந்தைகளை அடித்து வீட்டுக்குள் அடைத்துவைத்தபோது, இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப வெளியே ஓடிவந்தது. எனக்கு சின்னதாகச் சந்தேகம் வந்தது. இருந்தாலும் இது நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் என்றுசொல்லி வீட்டுக்குள் போட்டு, பூட்டிவிட்டேன்" என்றான்.

பிள்ளைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமலும், தன்னுடைய மனைவியை முழுமையாக அறிந்து, அன்புசெய்யாத கணவன்மார்கள்தான் இன்றைக்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் தூய சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாவை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இன்றைக்கு ஒரு சாதாரண குற்றத்திற்காக தங்களுடைய மனைவியை விவாகரித்து செய்யும் கணவன்மார்களுக்கு மத்தியில், யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியா திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கிறார்.
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
யோசேப்பை குறித்து சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாளுக்கு மூன்று வயதானபோது அவருடைய பெற்றோர்கள் அவரை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு மரியாள் பதினான்கு வயது வரை அங்குதான் இருந்தார். அவருக்கு பதினான்கு வயது வந்தபோது ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு, " பதினான்கு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான கணவரை மணந்துகொள்ளுமாறு" சொன்னார். தலைமைக் குருவின் வார்தைகளுக்குக் கீழ்படிந்து மரியாவோடு இருந்த பதினான்கு வயது நிரம்பிய மற்ற பெண் குழந்தைகள் எல்லாம் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள். மரியாள் மட்டும், " நான் ஆண்டவருக்கு அடிமை" என்று சொல்லி அங்கேயே இருந்தாள்.

இதற்கிடையில் ஆலயத்தில் இருந்த தலைமைக் குரு காட்சி ஒன்று கண்டார். அந்தக் காட்சியில், தாவீதின் குலத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்து, அதனை தலைமைக் குருவிடம் கொடுப்பார்கள். யார் கொண்டுவந்த தளிர் மலர்ந்து பூப்பூக்கிறதோ அவரை மரியாள் கணவராக மணந்துகொள்ள வேண்டும் என்று வெளிப்படுத்தப்பட்டார். இச்செய்தியை தலைமைக் குரு மரியாளிடம் எடுத்துச்சொல்லி, குறிப்பிட்ட அந்த நாளுக்காக அவரும் மரியாவும் காத்திருந்தார்கள்.

காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று, ஒரு நாளில் தாவீதின் குலத்தைச் சேர்ந்த திருமண வயதில் இருந்த ஆண்மகன்கள் தங்களுடைய கையில் தளிர் ஒன்றை ஏந்தி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் யோசேப்பும் வந்திருந்தார். எல்லாரும் தாங்கள் கொண்டுவந்த தளிர்களை தலைமைக் குருவிடம் கொண்டுவந்து கொடுத்தார்கள். யோசேப்பைத் தவிர. யோசேப்பு தான் வயது மிகுந்தவர் என்பதனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக அவர் தான் கொண்டு வந்த தளிரை பீடத்தில் போய் வைத்தார். நீண்ட நேரமாகியும் யாருடைய தளிரும் பூப்பூக்கவில்லை. இதனால் குழம்பிப் போன தலைமைக் குரு இறைவனிடத்தில் மன்றாடியபோது, " யார் தன்னுடைய தளிரை பீடத்தில் வைத்திருக்கிறாரோ அவரே மரியாளுக்கு கணவராக ஆக வேண்டியர். நீ சிறிது நேரம் பொறுத்திருந்து பார், அவருடைய தளிர் பூப்பூக்கும். அப்போது தூய ஆவியானவர் அதன்மேல் இறங்கி வருவார்" என்றார்.

இதனால் தலைமைக் குரு சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தார். காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது போன்று யோசேப்பு பீடத்தில் வைத்த தளிர் திடிரென்று பூப்பூத்தது. பின்னர் அதன்மேல் தூய ஆவியானவர் புறாவடிவில் இறங்கி வந்தார். இதைப் பார்த்த தலைமைக் குரு யோசேப்பை மரியாளுக்கு கணவராக மண ஒப்பந்தம் செய்தார். மண ஒப்பந்தத்திற்குப் பிறகு, யோசேப்பு தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமிற்குச் சென்றார். மரியாள் நாசரேத்திற்குச் சென்றார். நாசரேத்தில் தான் வானதூதர் கபிரியேல் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னார்.

வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால் திருமணத்திற்கு முன்பாகவே மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்கு தெரிய வந்ததும் அவளை கல்லால் எறிந்துகொல்ல முற்படவில்லை மாறாக பெருந்தன்மையோடு அவரைத் யாருக்கும் தெரியாமல் விளக்கி விட நினைக்கின்றார். பின்னர் கடவுளின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் கனவில் வெளிப்படுத்திய பிறகு மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்ட பிறகு யோசேப்பு அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார். குழந்தை இயேசுவை ஏரோது மன்னன் கொல்ல நினைத்தபோது, குழந்தையையும் தாய் மரியாவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பின்னர் கொடுங்கோலன் இறந்த பிறகு அவர்களைக் கூட்டிக்கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார். இவ்வாறு மரியாளின் உணர்வுகளை மதிக்கின்ற, அவரை எல்லாவிதங்களிலும் சிறப்பாகப் பராமரிக்கின்ற ஒரு நல்ல கணவராக யோசேப்பு விளங்கினார் என்று சொன்னால் அது மிகையில்லை. யோசேப்பு, இயேசுவுக்கு ஒரு நல்ல வளர்ப்புத் தந்தையாக இருந்தும் செயல்பட்டார். இயேசுவை உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்த்தெடுத்ததில் யோசேப்பின் பங்கை நாம் மறந்து விட முடியாது.

இவ்வாறாக யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவுக்கு ஒரு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு ஒரு நல்ல, சிறந்த முன்மாதிரியான வளர்ப்புத் தந்தையாவும் இருந்து செயல்பட்டு, ஒரு கணவர் எப்படி இருக்கவேண்டும், ஒரு தந்தை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியாளின் கணவர் தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. தன்னை முன்னிலைப்படுத்தாத கணவர்
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய மனைவியரிடத்தில், " நான் சொல்வதைதான் கேட்கவேண்டும், நான் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும்" என்று அதிகாரம் செலுத்துவதைப் பார்க்கின்றோம். இன்னும் ஒரு சிலர் தங்களுடைய மனைவியருக்கும் உணர்வு இருக்கிறது என்பதை அறியாதவர்களாய், புரியாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட குடும்பம் எப்படி நல்ல குடும்பமாக மாறும் என்பது இறைவனுக்குத் தான் வெட்ட வெளிச்சம்.

வேடிக்கையாகச் சொல்லப்படும் கதை.
ஒரு கிராமத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த, ஒரு தம்பதியருக்கு திருமண வெள்ளிவிழா நடைபெற்றது. திருமண வெள்ளிவிழா மேடையில் வெள்ளிவிழா கொண்டாடும் பெண்ணுக்கு அருகே இருந்த ஒரு வயதான பாட்டி அவளிடத்தில், " ஊரில் இருக்கின்ற எல்லாரும் உங்களுடைய குடும்பத்தை உயர்வாகப் போற்றுகிறார்களே! இந்த இருபத்தைந்து ஆண்டுகால இல்லற வாழ்வில் உனக்கும் உன்னுடைய கணவருக்கும் இடையே சண்டையே வந்தில்லையா?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், " அது ஒரு பெரிய கதை" என்று தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

திருமணமான புதிதில் நாங்கள் இருவரும் தேனிலவுக்காக ஒரு மலைவாசஸ்தலத்திற்கு சென்றோம். அப்போது போக்குவரத்து வசதி எல்லாம் இன்று இருப்பது போல் கிடையாது. ஆதலால் எங்களுடைய துணிமணி மற்றும் பெட்டியை ஒரு கழுதையில் ஏற்றிவைத்து, பயணமானோம். நன்றாக மேலேறிக் கொண்டிருந்த கழுதை திடிரென்று சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்து சினமடைந்த என்னுடைய கணவர், வேகமாக கழுதையிடம் சென்று, அதன் ஒரு காதைத் திருகி " இது முதல் எச்சரிக்கை" என்றார். பின்னர் துணிமணி மற்றும் பெட்டியை அதன்மேல் ஏற்றி வைத்துவிட்டு, மீண்டுமாகப் பயணமானோம். நன்றாக மேலேறி வந்துகொண்டிருந்த கழுதை மீண்டுமாக இடறிக் கீழே விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவர் அதன் இன்னொரு காதைப் பிடித்துக்கொண்டு, " இது இரண்டாவது எச்சரிக்கை, இன்னொரு முறை கீழே விழுந்தால் அப்புறம் நடக்கிறது வேறு" என்று சொல்லி எச்சரித்துவிட்டுச் சென்றார்.

பின்னர் கழுதையின் மேல் துணிமணிகளை ஏற்றி வைத்து நாங்கள் இருவரும் மேலே பயணமானோம். நாங்கள் போகவேண்டிய இடத்திற்கு மிக அருகே வந்தபோது, மீண்டுமாக கழுதை சுமை தாங்காமல் கீழே இடறி விழுந்தது. இதைப் பார்த்த என்னுடைய கணவருக்கு கோபம் தலைக்கேறியது. எனவே, அவர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, கழுதையை சுட்டு வீழ்த்தினார். கழுதை துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துபோனது. இதைப் பார்த்து பதறிப்போன நான் அவரிடம், " எதற்காக அந்த வாயில்லாத ஜீவனை இப்படிச் சுட்டுக் கொன்றீர்கள்" என்று கேட்டடேன். அதற்கு அவர், என்னுடைய காதைத் திருகி, " இது முதல் எச்சரிக்கை" என்றார். அவ்வளவுதான் இனிமேலும் ஏதாவது பேசினால் கழுதைக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும் என உணர்ந்துகொண்டு, அன்று பேச்சை நிறுத்தியவள்தான் இன்று வரைக்கும் நான் அவரிடம் எதுவும் பேசியதில்லை" என்றாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த வயதான பாட்டி மயங்கி விழாதுதான் தாமதம்.

இப்படியும் ஒருசில கணவன்மார்கள் தங்களுடைய மனைவியரை அடக்கி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால் யோசேப்பு அப்படியில்லை. அவர் தன்னுடைய மனைவியான மரியாளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். அவருக்கே அதிக முன்னுரிமை தந்தார். இன்னாருடைய மனைவி இன்னார் என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் யோசேப்போ, மரியாளின் கணவர் என்று தன்னுடைய மனைவியாள் பெயராலே அடையாளப்படுத்தப்படுகிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர் எந்தளவுக்கு மனைவிக்கு முன்னுரிமை தருபவர் என்று. மேலும் குழந்தை இயேசு கோவிலில் காணமால் போய், கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தான் பேசாமல் தன்னுடைய மனைவி பேசுவதற்கு முன்னுரிமை தருகிறார். இவற்றையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தன்னுடைய மனைவிக்கு எந்தளவுக்கு முன்னுரிமை வாழ்ந்திருப்பார் என நாம் புரிந்துகொள்ளலாம்.

2. இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்ந்த கணவர்

தூய யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்ந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. திருமணத்திற்கு முன்பாக தனக்கு மண ஒப்பந்தமான மரியாள் ஏற்கனவே கருவுற்றிருப்பது தெரிந்ததும், மறைவாக விலக்கிவிட நினைத்தபோது, ஆண்டவரின் தூதர் அவருக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல, மரியாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். கொலைகாரன் ஏரோது குழந்தை இயேசுவை கொல்ல இருக்கும் செய்தியை ஆண்டவரின் தூதர் அவருக்கு அறிவித்தபோது, உடனே அவர் குழந்தையையும் அதன் தாயையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடி, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார். கொடுங்கோலன் இறந்தபிறகு ஆண்டவரது தூதரின் கட்டளைப் படி தாய் சேயோடு தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி வருகிறார். இவ்வாறு யோசேப்பு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் திருவுளத்திற்கு பணித்து நடந்த ஒரு கணவராக விளங்குகிறார். அவர் ஒருபோதும் தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கவில்லை, நடக்கவும் நினைக்கவில்லை.

3. நேர்மையாளரான கணவர் யோசேப்பு

விவிலியம் யோசேப்பைக் குறித்து சொல்கிற ஒரே ஒரு செய்தி அவர் நேர்மையாளர் என்பதாகும் (மத் 1:19). நேர்மையாளர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இறுதித்தீர்ப்பு உவமையில் நாம் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். அந்த உவமையில் நேர்மையாளர்கள் என்பவர்கள், பசியாய் இருந்தோருக்கு உண்ணக் கொடுத்திருப்பார்கள். தாகமாக இருந்தவரின் தாகத்தை தனித்திருப்பார்கள்; அன்னியராய் இருந்தோரை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்; ஆடையின்றி இருந்தோரை உடுத்தியிருப்பார்கள்; நோயுற்று இருந்தோரை கவனித்திருப்பார்கள்; சிறையில் இருப்போரை பார்க்கச் சென்றிருப்பார்கள். யோசேப்பு நேர்மையாளர் என்பதால் இத்தகைய காரியத்தையும், இதுபோன்று காரியத்தையும் செய்திருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம். ஆகவே, தூய யோசேப்பு நேர்மையாளராய் இருந்து எல்லார்மீதும் இரக்கம்கொண்டு வாழ்ந்திருப்பார் என உண்மையாக நம்பலாம்.

எனவே, மரியாளின் கணவரான தூய யோசேப்பின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாம் ஒவ்வொருவரும் ள் பெண்களுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்களாக, அவர்களுக்கு முன்னுரிமை தருபவர்களாக, இறைத் திருவுளத்திற்கு பணிந்து நடப்பவர்களாக, நேர்மையாளர்களாக வாழ முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

" தூய யோசேப்பிடம் நான் கேட்ட வரங்களை எப்போதும் அவர் தராமல் இருந்ததில்லை" - தூய அவிலாத் தெரசம்மாள்.

 

கணவர் ஒருவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி, தான் வந்ததுகூடத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார். இதனால் கடும் கோபம்கொண்ட கணவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், "ஒரு பொம்பள எப்ப பாரு டிவி, சீரியல்னு பாத்துக்கிட்டே இருந்தா அந்தக் குடும்பம் எப்படி உருப்படும். நீயெல்லாம் வேலைக்குப் போயி, நாலு காசு சம்பாதிச்சாதான், உனக்கெல்லாம் பணத்தோட அருமை புரியும்" என்று தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய பங்குக்கு போட்டு விலாசினாள். "ஆபிஸ் வேலதான் பெருசுனு நெனைக்காதிங்க. ஒருநாளு வீட்ல இருந்து, வீட்ல இருக்குற வேலையைப் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கு இதுல இருக்குற கஷ்டம் புரியும்" என்று பொரிந்து தள்ளினாள். இறுதியல் அடுத்த நாள் கணவன் வீட்டு வேலை பார்ப்பதாகவும், மனைவி ஆபிசுக்கு செல்வதாகும் உறுதியானது.

அலுவலகத்திற்குச் சென்ற மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு கணவன் செய்த வேலையைச் செய்தாள். அவ்வப்போது அவளுக்கு வீட்டில் தன் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஆனால் வீட்டில் கணவனின் பாடு பெரிய திண்டாட்டமாய் போனது. அவன் அடுப்படியில் கிடந்து வேர்த்து விறுவிறுத்துப் போனான். குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் வெறுத்துப் போய், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவைத்தான்.

மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மனைவி, வீட்டில் என்ன நடந்ததோ என மிகவும் பதற்றத்தோடு வந்தாள். அவள் நினைத்தது போன்று நடந்திருந்தது. வீட்டுக்கு வெளியே கணவன் கையில் கம்போடு நின்றிருந்தான். "எங்கங்க ஆச்சு, இப்படி கையில் கம்போடு அலங்கோலமாக இருக்கீங்க"? என்று கேட்டாள். அதற்கு அவன், "அத ஏன் கேட்குற, அது பெரிய கதை" என்றான். "சரி வீட்ல இருந்த பிள்ளைங்களாம் எங்க?" என்றாள் அவள். அவன் சற்றுக் கோபத்தோடு, "பிள்ளைகளா அது, பிசாசுக் குட்டிங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததனால, அவங்கள ரூம்ல போட்டுப் பூட்டி வைச்சுருக்கேன்" என்றான்.

"ஐயோ பாவி மனுஷன், ஒருநாள்ல வீட்ட அலங்கோலமாக்கிடாரே" என்று புலம்பியவாறே அறையைத் திறந்தாள். உள்ளே குழந்தைகள் எல்லாம் கட்டிலோடு சேர்த்துவைத்துக் கட்டப்பட்டிருந்தார்கள். அவளுடைய அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அவர்களுடைய குழந்தையோடு இன்னொரு பெண்குழந்தையும் கட்டப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த வெலவெலப்போன மனைவி கணவரிடம், "என்னங்க, நம்முடைய குழந்தைகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தையையும் கட்டிப்போட்டுருக்கீங்க" என்றாள். அதைக் கேட்ட கணவன், "அப்படியா! அதனால்தான் நான் குழந்தைகளை அடித்து வீட்டுக்குள் அடைத்துவைத்தபோது, இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப வெளியே ஓடிவந்தது. எனக்கு சின்னதாகச் சந்தேகம் வந்தது. இருந்தாலும் இது நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் என்றுசொல்லி வீட்டுக்குள் போட்டு, பூட்டிவிட்டேன்" என்றான்.

பிள்ளைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமலும், தன்னுடைய மனைவியை முழுமையாக அறிந்து, அன்புசெய்யாத கணவன்மார்கள்தான் இன்றைக்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் தூய சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாவை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இன்றைக்கு ஒரு சாதாரண குற்றத்திற்காக தங்களுடைய மனைவியை விவாகரித்து செய்யும் கணவன்மார்களுக்கு மத்தியில், யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியா திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். (மரியாள் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டாள் என நினைத்து அவளைக் கல்லால் எறிந்துகொன்றிருக்கலாம். ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை). மேலும் வானதூதர் கபிரியேல் யோசேப்பிற்குக் கனவில் தோன்றி நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்கிறபோது அவர் திறந்த மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்கிறார்.

யோசேப்பிடம் இருந்த அந்த திறந்த மனநிலை ஒவ்வொரு கணவன்மார்களிடமும் இருந்தால் குடும்பத்தில் பாதிப் பிரச்சனை குறைந்துவிடும். இன்றைக்கு கணவன்மார்களிடம் தன்னுடைய மனைவியைக் குறித்த திறந்த மனநிலை உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாததனால்தான் எல்லாப் பிரச்சனைகளும், குழப்பங்களும்.

யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அடுத்த பாடம் அவர் தாழ்ச்சியுள்ள/அகந்தையற்ற கணவராக விளங்கினார் என்பதுதான். இன்றைய நாள் விழாவே மரியாளின் கணவர் யோசேப்பு" என்றுதான் இருக்கிறது. அதாவது இன்னாருடைய மனைவிதான் இவள் என்று அழைக்கப்படும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் யோசேப்பு மரியாளின் கணவர் என்று அறியப்படுகின்றார். இது அவர் ஒரு தாழ்ச்சியுள்ள கணவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

யோசேப்பு ஒரு சிறந்த பொறுமைசாலியாகவும், பிடிவாதகுணமற்றவராகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மரியாள் கருவுற்றபோதும் சரி, ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோதும் சரி, எகிப்துக்குத் தப்பியோடிய போதும் சரி, எருசலேம் ஆலயத்தில் காணாமல் இயேசு போனபோதும் சரி மிகவும் பொறுமையாக இருக்கின்றார். தான் கொண்ட கருத்தான் சரி என்ற பிடிவாதக்குணத்தோடு இல்லாமல், உண்மையத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். எனவே கணவன்மார்கள்/ நாம் ஒவ்வொருவரும் யோசேப்பிடம் விளங்கிய பொறுமையைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

குடும்ப வாழ்வில் கணவனும், மனைவியும் பிடிவாதக் குணமில்லாமல், அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் ஓர் ஒப்புமை.

வழக்கமாக சமையலுக்காக அம்மிக் கல்லில் தேங்காயை வைத்து அரைக்கும்போது அது வழுக்கிக்கொண்டுபோகும். மாறாக தக்காளியோ அப்படியே இசைந்துபோகும். ஆனால் இறுதியில் (பிடிவாதத்தோடு) வழுக்கிக்கொண்டு போன தேங்காய் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்காது, அனுசரித்துப் போன தக்காளிச் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்கும். ஆதலால் தக்காளியைப் போன்று கணவனும், மனைவியும் ஒருவருக்குக்கொருவர் அனுசரித்துப் போகும்போது குடும்ப உறவு இன்னும் வலுப்பெறும்.

யோசேப்பு கடவுளின் மீட்புத்திட்டத்திற்கும், தன்னுடைய மனைவி மரியாளும் அனுசரித்துப் போனார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இறுதியாக, நிறைவாக யோசேப்பு ஒரு சிறந்த கணவனாக இருந்ததோடு மட்டுமல்லாமல், இயேசுவுக்கு ஒரு சிறந்த (வளர்ப்புத்) தந்தையாகவும் விளங்கினார். கவிஞர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்று "தந்தை தோளின் மீது ஏறிநின்று தானே, பார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே" என்று. ஆம், தந்தை தான் இந்த உலகத்தை நமக்குக் காட்டியவர், அவர்தான் அறிவையும், ஞானத்தையும் நமக்குப் புகட்டியவர். இது இயேசுவுக்கும் பொருந்தும். இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் என்றால், அதில் யோசேப்பின் பங்கு மிக முக்கியமானது. ஏனென்றால் தமிழ் இலக்கித்தில் வரும் புறநானூற்றில் படிக்கின்றோம், "ஈன்று புறந்தருதல் என்தலை (தாய்க்குக்) கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று. அப்படியானால் இயேசு பெற்றிருந்த ஞானத்திற்கும், அறிவுத் தெளிவுக்கும் அடிப்படைக் காரணம் அவருடைய (வளர்ப்புத்) தந்தை யோசேப்பே ஆகும்.

ஆதலால் யோசேப்பு ஒரு சிறந்த கணவராகவும் இருந்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சிறந்த தந்தையாகும் விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகது. எனவே நாம் யோசேப்பைப் போன்று திறந்த மனத்தினராக, தாழ்ச்சி உள்ள கணவராக, பொறுமையுள்ளவராக, சிறந்த தந்தையாக வாழ அழைக்கப்படும் அதே தருணத்தில், நாமும் நம்மோடு வாழும் தந்தையைப் பேணிப் பராமரிக்க, அவருக்குப் பெருமை சேர்க்க, அவர் உள்ளம் குளிரும்படியான வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம்.

ஒரு குடும்பத்தில் இருந்த கணவனும், மனைவியும் தங்களுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். மகனும் பெற்றோருடைய கஷ்டத்தை உணர்ந்து, சிறப்பாகப் படித்து, நல்ல ஒரு வேலையில் சேர்ந்தான்.

அவன் தன்னுடைய முதல் மாதச் சம்பளத்தை வாங்கிவந்து தாயிடம் கொடுத்தான். அதற்கு அவனுடைய தாய், "இத்தனை நாளும் உன்னை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி, எல்லாச் செலவையும் செய்த உன் தந்தையிடம் போய் சம்பளத்தைக் கொடு" என்றாள். அதற்கு அவனோ முடியாது என்று மறுத்துவிட்டான். தாயானவள் மீண்டுமாக அவனிடம் பணத்தை தந்தையிடம் கொடு என்று சொல்லியும் அவன் கேட்காததால், அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஓர் அடி விட்டாள்.

"பணத்தை அப்பாவிடம் போய்க்கொடு, கொடு என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாய்" என்றாள் தாய். அதற்கு அவன், "அம்மா! ஒவ்வொரு முறையும் தந்தையிடம் நான் பணம் வாங்கும்போதும் அவருடைய கை மேலே இருக்கும், என்னுடைய கை கீழே இருக்கும். ஆனால் இப்போது நான் அவரிடம் சம்பளப் பணத்தைக் கொடுக்கும்போது அவருடைய கை கீழேயும், என்னுடைய கை மேலேயும் அல்லவா இருக்கும். அதனால்தான் இப்படி நடந்துகொண்டேன்" என்றான்.

இதை உள்ளறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அவனது தந்தை ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார்.

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்துகொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.

ஆதலால் மரியாளின் கணவர் யோசேப்பின் (தந்தையின்) விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் நமது குடும்பங்களில் வாழும் தந்தையின் உள்ளம் குளிர நடந்துகொள்வோம். யோசேப்பிடம் விளங்கிய பண்புகளை நமதாக்குவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
 
மரியாளின் கணவர் தூய யோசேப்பு விழா

கணவர் ஒருவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய மனைவி, தான் வந்ததுகூடத் தெரியாமல் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார். இதனால் கடும் கோபம்கொண்ட கணவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், " ஒரு பொம்பள எப்ப பாரு டிவி, சீரியல்னு பாத்துக்கிட்டே இருந்தா அந்தக் குடும்பம் எப்படி உருப்படும். நீயெல்லாம் வேலைக்குப் போயி, நாலு காசு சம்பாதிச்சாதான், உனக்கெல்லாம் பணத்தோட அருமை புரியும்" என்று தன்னுடைய கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்த மனைவி தன்னுடைய பங்குக்கு போட்டு விலாசினாள். " ஆபிஸ் வேலதான் பெருசுனு நெனைக்காதிங்க. ஒருநாளு வீட்ல இருந்து, வீட்ல இருக்குற வேலையைப் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கு இதுல இருக்குற கஷ்டம் புரியும்" என்று பொரிந்து தள்ளினாள். இறுதியல் அடுத்த நாள் கணவன் வீட்டு வேலை பார்ப்பதாகவும், மனைவி ஆபிசுக்கு செல்வதாகும் உறுதியானது.

அலுவலகத்திற்குச் சென்ற மனைவி மிகவும் மகிழ்ச்சியோடு கணவன் செய்த வேலையைச் செய்தாள். அவ்வப்போது அவளுக்கு வீட்டில் தன் கணவன் என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? என்ற எண்ணம் வந்து வந்து போனது. ஆனால் வீட்டில் கணவனின் பாடு பெரிய திண்டாட்டமாய் போனது. அவன் அடுப்படியில் கிடந்து வேர்த்து விறுவிறுத்துப் போனான். குறிப்பாக தன்னுடைய பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் வெறுத்துப் போய், ஓர் அறையில் வைத்துப் பூட்டிவைத்தான்.

மாலை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மனைவி, வீட்டில் என்ன நடந்ததோ என மிகவும் பதற்றத்தோடு வந்தாள். அவள் நினைத்தது போன்று நடந்திருந்தது. வீட்டுக்கு வெளியே கணவன் கையில் கம்போடு நின்றிருந்தான். " எங்கங்க ஆச்சு, இப்படி கையில் கம்போடு அலங்கோலமாக இருக்கீங்க" ? என்று கேட்டாள். அதற்கு அவன், " அத ஏன் கேட்குற, அது பெரிய கதை" என்றான். " சரி வீட்ல இருந்த பிள்ளைங்களாம் எங்க?" என்றாள் அவள். அவன் சற்றுக் கோபத்தோடு, " பிள்ளைகளா அது, பிசாசுக் குட்டிங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்காததனால, அவங்கள ரூம்ல போட்டுப் பூட்டி வைச்சுருக்கேன்" என்றான்.

" ஐயோ பாவி மனுஷன், ஒருநாள்ல வீட்ட அலங்கோலமாக்கிடாரே" என்று புலம்பியவாறே அறையைத் திறந்தாள். உள்ளே குழந்தைகள் எல்லாம் கட்டிலோடு சேர்த்துவைத்துக் கட்டப்பட்டிருந்தார்கள். அவளுடைய அதிர்ச்சியை இன்னும் அதிகமாக்கும் விதமாக அவர்களுடைய குழந்தையோடு இன்னொரு பெண்குழந்தையும் கட்டப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த வெலவெலப்போன மனைவி கணவரிடம், " என்னங்க, நம்முடைய குழந்தைகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தையையும் கட்டிப்போட்டுருக்கீங்க" என்றாள். அதைக் கேட்ட கணவன், " அப்படியா! அதனால்தான் நான் குழந்தைகளை அடித்து வீட்டுக்குள் அடைத்துவைத்தபோது, இந்தக் குழந்தை மட்டும் திரும்பத் திரும்ப வெளியே ஓடிவந்தது. எனக்கு சின்னதாகச் சந்தேகம் வந்தது. இருந்தாலும் இது நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் என்றுசொல்லி வீட்டுக்குள் போட்டு, பூட்டிவிட்டேன்" என்றான்.

பிள்ளைகளை முழுமையாக அறிந்துகொள்ளாமலும், தன்னுடைய மனைவியை முழுமையாக அறிந்து, அன்புசெய்யாத கணவன்மார்கள்தான் இன்றைக்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை வேடிக்கையாக இக்கதை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் தூய சூசையப்பரோ தன்னுடைய மனைவியாகிய மரியாவை முழுமையாக அறிந்தவர், அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு அன்புசெய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் விழாவைத்தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபையானது மரியாளின் கணவர் தூய சூசையப்பரின்/ யோசேப்பின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இன்றைக்கு ஒரு சாதாரண குற்றத்திற்காக தங்களுடைய மனைவியை விவாகரித்து செய்யும் கணவன்மார்களுக்கு மத்தியில், யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியா திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக மறைவாக விலக்கிவிடத் தீர்மானிக்கிறார். (மரியாள் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டாள் என நினைத்து அவளைக் கல்லால் எறிந்துகொன்றிருக்கலாம். ஆனால் யோசேப்பு அப்படிச் செய்யவில்லை). மேலும் வானதூதர் கபிரியேல் யோசேப்பிற்குக் கனவில் தோன்றி நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்கிறபோது அவர் திறந்த மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்கிறார்.

யோசேப்பிடம் இருந்த அந்த திறந்த மனநிலை ஒவ்வொரு கணவன்மார்களிடமும் இருந்தால் குடும்பத்தில் பாதிப் பிரச்சனை குறைந்துவிடும். இன்றைக்கு கணவன்மார்களிடம் தன்னுடைய மனைவியைக் குறித்த திறந்த மனநிலை உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாததனால்தான் எல்லாப் பிரச்சனைகளும், குழப்பங்களும்.

யோசேப்பிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அடுத்த பாடம் அவர் தாழ்ச்சியுள்ள/அகந்தையற்ற கணவராக விளங்கினார் என்பதுதான். இன்றைய நாள் விழாவே ' மரியாளின் கணவர்' யோசேப்பு" என்றுதான் இருக்கிறது. அதாவது ' இன்னாருடைய மனைவிதான் இவள்' என்று அழைக்கப்படும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் யோசேப்பு மரியாளின் கணவர் என்று அறியப்படுகின்றார். இது அவர் ஒரு தாழ்ச்சியுள்ள கணவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

யோசேப்பு ஒரு சிறந்த பொறுமைசாலியாகவும், பிடிவாதகுணமற்றவராகவும் இருந்திருக்கலாம். ஏனென்றால் திருமணத்திற்கு முன்பாக மரியாள் கருவுற்றபோதும் சரி, ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல நினைத்தபோதும் சரி, எகிப்துக்குத் தப்பியோடிய போதும் சரி, எருசலேம் ஆலயத்தில் காணாமல் இயேசு போனபோதும் சரி மிகவும் பொறுமையாக இருக்கின்றார். தான் கொண்ட கருத்தான் சரி என்ற பிடிவாதக்குணத்தோடு இல்லாமல், உண்மையத் திறந்த மனநிலையோடு ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். எனவே கணவன்மார்கள்/ நாம் ஒவ்வொருவரும் யோசேப்பிடம் விளங்கிய பொறுமையைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

குடும்ப வாழ்வில் கணவனும், மனைவியும் பிடிவாதக் குணமில்லாமல், அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் ஓர் ஒப்புமை.

வழக்கமாக சமையலுக்காக அம்மிக் கல்லில் தேங்காயை வைத்து அரைக்கும்போது அது வழுக்கிக்கொண்டுபோகும். மாறாக தக்காளியோ அப்படியே இசைந்துபோகும். ஆனால் இறுதியில் (பிடிவாதத்தோடு) வழுக்கிக்கொண்டு போன தேங்காய் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்காது, அனுசரித்துப் போன தக்காளிச் சட்டினியோ நீண்ட நேரத்துக்கு நீடிக்கும். ஆதலால் தக்காளியைப் போன்று கணவனும், மனைவியும் ஒருவருக்குக்கொருவர் அனுசரித்துப் போகும்போது குடும்ப உறவு இன்னும் வலுப்பெறும்.

யோசேப்பு கடவுளின் மீட்புத்திட்டத்திற்கும், தன்னுடைய மனைவி மரியாளும் அனுசரித்துப் போனார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 

இன்று நம் தாய்த்திருஅவை 'புனித வளனார் - புனித கன்னி மரியாவின் துணைவர்' திருநாளைக் கொண்டாடுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1:16,18-21,24) புனித மத்தேயு பதிவு செய்யும் நிகழ்வில் உள்ள யோசேப்பு பற்றிய சில குறிப்புக்களைச் சிந்திப்போம்.

1. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு
'யோசேப்பு' பற்றிய முதல் செய்தியைத் தரும் மத்தேயு, அவரை, 'யாக்கோபின் மகன்,' 'மரியாவின் கணவர்' என்ற இரு நிலைகளில் அறிமுகம் செய்கிறார். இங்கே, 'மகன்' என்பது யோசேப்பின் 'வேர் பதித்தலையும்,' 'கணவர்' என்பது அவரின் 'விழுது பரப்புதலையும்' குறிக்கிறது. மனித வாழ்வு ஒரு குடும்பத்தில் தொடங்கி மற்றொரு குடும்பத்தில் தொடர்கிறது. இதை ஆதாம் நிகழ்வில்கூட பார்க்கிறோம். ஆதாம் மண் என்ற வேரில் தொடங்கி தன் விலா எலும்பு என்னும் ஏவாளில் தன் வாழ்வைத் தொடர்கிறார். இவ்வாறாக, திருமண உறவு என்பதில் அடங்கியுள்ள மாண்பை அழகுற உரைக்கிறார் மத்தேயு. மணத்துறவு கொண்டவர்கள் இதை எப்படிப் புரிந்துகொள்வது. இவர்களுக்கு இவர்களுடைய உறவு தங்களுடைய குடும்பத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இறையாட்சிக் குடும்பத்தை நோக்கி நீள்கிறது. அவ்வளவுதான். ஆக, மணத்துறவு மேற்கொண்டவர் உறவை மறுப்பவராக அல்லாமல் உறவை அதிகரித்துக்கொள்ளவே மணத்துறவு மேற்கொள்கிறார்.

2. மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்
யூதர்களின் முறைமைப்படி முதலில் ஒப்பந்தம் நடந்து, சில மாதங்கள் கழித்தே திருமணம் நடக்கும். இது குஞ்சுபொறிக் காலம் போல. அதாவது, ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், தொடர்ந்து முன்னெடுக்கப்போகும் வாழ்க்கையைத் திட்டமிடவும் எடுக்கும் காலம் இது.

3. மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது

யோசேப்பு இதை எப்படி அறிந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. மரியாளே சொல்லியிருக்கலாம். அல்லது மரியாளின் பெற்றோர் வழியாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், இங்கே தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருக்கிறார் யோசேப்பு. இது ஒரு முக்கியமான குணம். இந்தக் குணம் எல்லாருக்கும் வராது. தன்னிலே அமைதியாய் இருப்பவர், தன்னை முழுமையாக அறிந்தவர் மட்டுமே தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார். மேலும், இப்படிப்பட்ட நபர் தன்னை மற்ற எல்லாரோடும் இணைந்த ஒருவராகவும் பார்ப்பார்.

4. யோசேப்பு நேர்மையாளர்
'நேர்மை' என்பதற்கு இங்கே கிரேக்கத்தில் 'டிகாயுசுனே' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், தன்னை நேர் கோட்டில் வைத்துக்கொள்வது. இங்கே 'நேர்மையாளர்' என்று அறிமுகம் செய்வதன் வழியாக, இவர் ஒரு ஸ்ட்ரிக்ட் பேர்வழி. அடுத்த என்ன செய்வாரோ? என்ற எதிர்பார்ப்பை வாசகரின் மனத்தில் விதைக்கிறார் மத்தேயு. கொஞ்ச நேரத்தில், இவரின் நேர்மையாளர் நிலை என்பது சட்டம் சார்ந்தது அல்ல. மாறாக, இரக்கம் சார்ந்தது என்று நாம் அறிகின்றோம். இயேசுவுக்கு இதே இரக்க குணம் வருவதற்கு யோசேப்பின் இக்குணம் காரணமாக இருக்கலாம்.

5. மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்
தன்னைவிட பிறரை மையமாக வைத்து - மரியாளை மையமாக வைத்து - முடிவெடுக்கிறார் யோசேப்பு. உறவு நிலைகளை முறித்துக்கொள்ளும்போது பல நேரங்களில் நாம் நம்மை மட்டுமே முன்வைத்து முடிவெடுக்கிறோம். ஆனால், உறவில் அடுத்தவரும் இருக்கிறார் என்பதை மனத்தில் வைப்பது மிக அவசியம்.

6. சிந்தித்துக்கொண்டிருக்கும்போது
மிகுதியான சிந்தனை, மிகுதியான களைப்பைத் தரும். பிரச்சினைகள் பற்றி மனம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது பலருக்குத் தூக்கம் வருவதில்லை. ஆனால், யோசேப்பு தூங்கிவிடுகிறார். இதுவும் அவரின் ஆழ்மன அமைதியைக் காட்டுகிறது. என்ன நேர்ந்தாலும் சஞ்சலப்படாத ஒரு பக்குவம் இது.

7. தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மனைவியை ஏற்றுக்கொண்டார்
கனவு என்பது இறைவெளிப்பாட்டு ஊடகம் என்பதை யோசேப்பு அறிந்தவராக இருக்கிறார். தன் மூதாதையர்கள் ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு போன்றவர்களைக் கனவுகளின் வழியாகவே கடவுள் வழிநடத்தினார் என்பதை உணர்ந்திருந்தார் யோசேப்பு. ஆகையால்தான், கனவில் இறைத்திருவுளம் காண்கிறார்.

ஒருமுறை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த யோசேப்பு தன் முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. நல்லவற்றிக்காகவும், மற்றவர்களுக்காகவும் தன் வாக்குறுதிகளை மாற்றிக்கொள்ளவும், தன் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயங்கவில்லை யோசேப்பு.

'எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்' என்பது யோசேப்பின் கொள்கை அல்ல.

அந்த நொடி மரியாவை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். பெத்லகேம், எகிப்து, நாசரேத், எருசலேம் என இவர் ஓடுகின்றார். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைத்திருவுளம் அறிகிறார்.

எனினும், எல்லாவற்றிலும் மௌனம் காக்கிறார்.

மௌனத்தைப் புரிந்துகொள்பவர்களே வார்த்தைகளையும் புரிந்துகொள்ள முடியும்.