ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

        பொதுக்காலம் பதினொன்றாம் ஞாயிறு

    திருப்பலி முன்னுரை


 
வருடாந்த
ஞாயிறு வாசகம்
  Sermon Fr.Albert  
திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
பொதுக்காலம் 11ஆம் வாரம் ஞாயிறு 14 06 2026

திருப்பலி முன்னுரை

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று அறைகூவல் விடுத்து ஆயர்களை அழைத்து ஆடுகளை மீட்க அழைக்கும் பொதுக்காலம் 11ஆம் ஞாயிறுத் திருப்பலிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

தன் ஆவியைக் கொடுத்த இயேசு கிறிஸ்து இப்போது தனது ஆற்றலையும் சீடர்களுக்குக் கொடுத்து அற்புதச் செயல்களை நிகழ்த்த தம் சீடர்களைப் பணிக்கிறார். எதிர்நோக்கும்போது இறையாசீரையும் பெற்றுக் கொள்ளலாம். இறை விருப்பத்தையும் நிறைவேற்றலாம்.

இறைவனின் வார்த்தைக்கு செவிசாய்க்கும்போது அவரது கட்டளைகளை கடைப்பிடிப்போர் இறைவனுக்குச் சொத்து என்பதை முதல்வாசகமாகவும் எடுத்துரைக்கிறது இறைவார்த்தைகள். வரிவடிவத்தோடு நின்று விடாமல் அவற்றை செயல்வடிவமாக்கிடுவோம். இறைவனின் தூய மக்களினமாக வாழ முயல்வோம்.

நேர்மையற்று, இறைப்பற்று அற்றவராய் இருக்கும் போதே இயேசு கிறிஸ்து நமக்காக உயிரையே தந்து உலகத்தை மீட்டார் என்பதை இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது.

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை
இரக்கத்துடன் இருப்போம்,
என்ற புனித அன்னை தெரசாவின் பொன்மொழிகளுக்கிணங்க இயேசு போல
உயிரைக் கொடுக்காவிடினும்
உள்ளதைக் கொடுப்போம்.
தன்னையே கொடுக்காவிடினும்
தன்னிடமுள்ளதை கொடுப்போம்.

அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு என்று ஆயரில்லா ஆடுகள் மீது பரிவு கொண்டு அவர்களை வழிநடத்த ஆயர்களை அழைக்கிறது. இன்றைய நற்செய்தி வார்த்தைகள்.

காணாமற் போன ஆடுகள் மீதே இறைவன் கவனம் கொள்கிறார். வழிதவறிய ஆடுகளை சரியான பாதைக்கு வரவே அழைக்கிறார். அவ்வழைத்தலுக்காக, சரியான ஆயர்களை எதிர்பாக்கிறது இறை உள்ளம். விவிலிய வார்த்தைகளை வீதிதோறும் நின்று முழங்குவது மட்டுமல்ல நற்செய்திப்பணி. இறைவார்த்தைகள் இல்வாழ்க்கையிலும் இவ்வுலக வாழ்க்கைகளிலும் செயல்களாக்கப்படும் போது ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பமும் மீட்புச் செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறது.

சொல்லுதல் யாவர்க்கும் எளியவாம் அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
என்பது குறள்.

சொற்களை விட செயல்கள் கடினமானவை. அவற்றிலும் நற்செயல்கள் மிக கடினமானவை. நம் வாழ்வில் நற்செயல்களைச் செய்து, குடும்பமாக, குருவாக இறையாட்சியை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த வரம் கேட்டு இப்பலியில் பங்கேற்போம்.





 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

விளையச் செய்பவரும் பலன் கொடுக்கச் செய்பவருமான எம் இறைவா! திருஅவையை வழிநடத்தும் அன்பர்களை ஆசீர்வதித்து, அவர்களின் பணி வழியாக பிரபஞ்சம் நிறைந்த பலன் காண, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விளையச் செய்பவரும் பலன் கொடுக்கச் செய்பவருமான எம் இறைவா! நாட்டை ஆள்வோர் மக்களின் வாழ்விலே அக்கறை கொண்டு, பயனள்ள நல்ல பல காரியங்களை முன்னெடுத்து, மக்களின் ஏற்றமான வாழ்வுக்கு வழிகாட்ட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விளையச் செய்பவரும் பலன் கொடுக்கச் செய்பவருமான எம் இறைவா! நாங்கள் அனைவரும் உம்முடைய கை வேலைப்பாடே. நாங்கள் எதற்காக படைக்கப்பட்டோமோ அதன் பலனை தந்து வாழ்ந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விளையச் செய்பவரும் பலன் கொடுக்கச் செய்பவருமான எம் இறைவா! படைப்பு எல்லாம் உம் அருளால் நிறைந்த பலன் கொடுத்து பணியாற்றும் போது, அந்த படைப்பை பாதுகாத்துக் கொள்ள, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விளையச் செய்பவரும் பலன் கொடுக்கச் செய்பவருமான எம் இறைவா! பலரும் பயன் பெற எங்களது வாழ்வு, உம் அருளால், உமது திருவுளத்தை கண்டு பாவிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார்! 1 யோவா 04: 16
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
ஆயனில்லாத ஆடுகள்போல!

ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட் என்னும் நாவில் ஒரு நிகழ்வு உண்டு. இளவல் ஆலிஸ் நாற்சாலை சந்திப்பு ஒன்றில் நின்றுகொண்டிருப்பாள். அப்போது அங்கே அவளைக் காண்கிற பூனை ஒன்று, ஆலிஸ், நீ எங்கே போக வேண்டும்? என்று கேட்கும். எனக்குத் தெரியாது என்பாள் ஆலிஸ். எங்கே போக வேண்டும் எனத் தெரியவில்லை என்றால், எந்தச் சாலையும் நீ எடுக்கலாம்! என்று சொல்லிவிட்டு பூனை நகரும்.

மனித வாழ்வின் நிலையை எடுத்துச் சொல்கிறது இந்நிகழ்வு. திசை அறியாமல் நாமும் பல நேரங்களில் வாழ்க்கை என்னும் நாற்சாலைச் சந்திப்பில் நிற்கிறோம். நகர வேண்டும் எனத் தெரிகிறது. ஆனால், எதை நோக்கி நகர வேண்டும் என்று குழப்பமாக இருக்கிறது. இலக்கு இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். யாரும் நமக்கு இலக்கைக் காட்டவில்லையே என்ற வருத்தமும் நம்மில் இருக்கிறது.

விவிலியத்திலும் இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று உண்டு. ஆபிரகாம்-சாரா இல்லத்திலிருந்து தப்பி ஓடுகிற அடிமைப் பெண் ஆகாரை எதிர்கொள்கிறார் ஆண்டவரின் தூதர். நீ எங்கிருந்து வருகிறாய்? நீ எங்கே செல்கிறாய்? எனக் கேட்கிறார் தூதர். நான் என் தலைவி சாராயிடமிருந்து ஓடி வருகிறேன் என்கிறார் ஆகார். முதல் கேள்விக்கு விடை அறிந்த ஆகார், இரண்டாம் கேள்விக்கு விடையின்றி நிற்கிறார். நம் கடந்தகாலம் நமக்குத் தெரிகிறது. ஆனால், எதிர்காலம் நமக்குத் தெரிவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு சூழலிலிருந்தும் நாம் தப்பி ஓடுகிறோம். ஆனால், எதை நோக்கி ஓடுகிறோம்?

காயங்களோடு நிற்கிற நாம் திசை அறியாமல் நிற்கிறோம். சுமைகளோடு நிற்கிற நாம் இலக்குத் தெரியாமல் விழிக்கிறோம்.

ஆயனில்லா ஆடுகள்: மனித எதார்த்தத்தின் உருவகம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இப்படிப்பட்ட மக்கள் குழுவைத்தான் இயேசு சந்திக்கிறார். திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள்மேல் பரிவு கொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

ஆயன் இல்லாத ஆடுகள் குழப்பமாக இருக்கும், பயத்துடன் இருக்கும், பசித்திருக்கும், திசை தெரியாமல் நிற்கும், எதிரிகளின் கைகளில் சிக்குகிற நொறுங்குநிலையில் இருக்கும்.

நம் குடும்ப வாழ்வில், புரிதலின்மை, இழப்பு, இறப்பு, பிரிவு, போதைப் பழக்கம், வன்முறை காரணமாக நாம் ஆயனில்லாத ஆடுகள்போல இருக்கிறோம்.

நோய்வாய்ப்படும்போது, வலி ஏற்படும்போது, முதுமையினால் நாம் ஆயனில்லாத ஆடுகள்போல உணர்கிறோம்.

சமூகத்தில், அரசியல் காரணங்களால், பொருளாதாரச் சிக்கல்களால், போர், வேலைவாய்ப்பின்மை, அநீதி, புலம்பெயர்தல், இயற்கைப் பேரழிவு போன்ற சூழல்களில் நாம் ஆயனில்லாத ஆடுகள்போல உணர்கிறோம்.

அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள் மக்கள் என்று பதிவு செய்கிறார் மத்தேயு.

அலைக்கழிப்பும் சோர்வும் நம் வாழ்வியல் அனுபவங்களாக இருக்கின்றன.

முதல் வாசகம்: கடவுளின் இரக்கமும் உடன்படிக்கையும்

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலைக்கு அருகில் பாளையம் இறக்குகிறார்கள். எகிப்துக்கும் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குமான இணைப்புக் கோடாக இருக்கிறது சீனாய். இங்கிருந்துதான் மோசே புறப்பட்டார். இப்போது இங்கே திரும்புகிறார். இது அவருக்கும் மக்களுக்கும் வீடு திரும்புதல் அனுபவமாக இருக்கிறது.

இங்கே கடவுள் அவர்களை கழுகின் இறக்கைகள்மேல் வைத்துக் காப்பாற்றியதை நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு சுதந்திரமும் பாதுகாப்பும் தொடர்கிறார். மேலும், அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். இரத்த உறவையும் திருமண உறவையும் தாண்டிய ஓர் உறவுநிலை இங்கே ஏற்படுகிறது.

நற்செய்தி வாசகம்: இயேசுவின் பரிவு

மக்களுடைய எதார்த்த நிலை இயேசுவில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள்மேல் பரிவு கொள்கிறார். அந்தப் பரிவு உடனடியாக செயல்பாடாக மாறுகிறது. அவர்களுக்கான ஆயர்களை ஏற்படுத்தி அவர்கள் நடுவே மக்களை அனுப்புகிறார். இயேசுவுடைய பதிலிறுப்பு உடனடியாக இருக்கிறது. தாமே எல்லா இடத்திற்கும் செல்ல இயலாது என்று உணர்ந்த இயேசு தம் சீடர்களை அழைத்து அனுப்புகிறார்.

இரக்கம் பணியாக மாறுகிறது. கொடையாகப் பெற்றுக்கொண்டீர்கள். கொடையாகவே வழங்குங்கள் என்று சொல்லி அனுப்புகிறார். சிறுநுகர் வாழ்க்கை முறையை சீடர்கள் பின்பற்ற வேண்டும்.

இரண்டாம் வாசகம்: வலுவற்றவற்றில் செயலாற்றும் கடவுள்

நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார் என்று எழுதுகிறார் பவுல். கடவுளின் பரிவுள்ளம் இங்கே புலப்படுகிறது. நம்மை அன்பு செய்தார், நம்மை ஒப்புரவாக்கினார், நமக்கு மகிழ்ச்சி தந்தார் கடவுள்.

மேற்காணும் மூன்று வாசகங்களின் பின்புலத்தில், ஆயனில்லாத ஆடுகள் போல இருக்கிற நாம் என்ன செய்ய வேண்டும்?

(அ) பங்கேற்பு

நம் பார்வையை அகலமாக்குதல். தாங்கள் அடிமைகள் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்கள் சீனாய் மலைக்கு அருகில் வந்தவுடன் தாங்கள் கடவுளின் மக்கள் என்னும் புதிய பார்வையைப் பெறுகிறார்கள். கடவுளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பங்கேற்கிற உணர்வு அவர்களுக்குத் துணிவையும் ஊக்கத்தையும் தருகிறது. பிரச்சினைகளை மட்டும் பெரிதாக்கிப் பார்க்காமல், நம் வாழ்க்கையைப் பெரிதாக்கிப் பார்க்க வேண்டும்.

(ஆ) பரிவு

இயேசு மக்கள்மேல் பரிவு கொள்கிறார். சீடர்களைப் பணிக்கு அனுப்புகிறார். பரிவாலும் இரக்கத்தாலும் நாம் வெற்றி பெற முடியும். மற்றவர்கள்மேல் பரிவு காட்டுவதற்கு முன் கடவுள் நமக்குக் காட்டுகிற இரக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டும். கழுகு தன் குஞ்சுப் பறவைக்குப் பறக்கக் கற்றுக்கொடுப்பதுபோல கடவுள் தம் மக்களுக்குக் கற்பிக்கிறார். நாமும் ஒருவர் மற்றவரைத் தாங்க வேண்டும்.

(இ) பணி

இயேசு நோக்கி வருகிற சீடர்கள் மக்களை நோக்கி அனுப்பப்படுகிறார்கள். இந்த இரண்டு வழிப்பயணம் சீடத்துவத்தில் அவசியம். ஒரே நேரத்தில் கடவுள் நோக்கியும் ஒருவர் மற்றவர் நோக்கியும் செல்ல வேண்டும். நாம் மற்றவர்களை நோக்கிச் செல்லும்போது மற்றவர்களை வழிநடத்தும் ஆயனாக மாறுகிறோம்.

ஆயனில்லாத ஆடுகள் போன்ற உணர்வு எழும்போது நம் இதயம் ஆண்டவரை நோக்கி எழட்டும். ஏனெனில், அவரே நம்மைப் படைத்தவர். நாம் அவர் மக்கள். அவர் மேய்க்கும் ஆடுகள்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை


உலகத்தையே உலுக்கியது இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமி என்ற இராட்சசப் பேரலை! இதனால் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு மடிந்தனர். இதனால் வீடு இழந்தோர், உடமை இழந்தோர் கணக்கிலடங்கா! இத்தகைய பயங்கர பேராபத்து வந்தவுடன் உலக நாடுகளும் சரி, ஏன் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதரும் உதவிக் கரம் நீட்ட முன் வந்தனர். இதற்காகப் பணமாக, உடையாக, உணவாக, மருந்தாக, ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துபவராக மக்கள் திரண்டு வந்தனர். விவேக் ஓபேராய் என்ற இந்தி நடிகர்கூட தன் சுகபோக வாழ்வை விட்டு விட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்து உதவி செய்ய முன் வந்தார். இதுபோல எத்தனையோ பேர் உதவிக் கரம் நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

இரக்கப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத். 5:7) என்பது நம் ஆண்டவர் இயேசு தந்த வாக்குறுதி. இரக்கம் என்பது ஏதோ துன்பப்படுவோரைப் பார்த்து பரிதாப மனநிலையோடு நோக்கும் பார்வையல்ல, மாறாக துன்பப்படுவோருடன் உடலால், உள்ளத்தால், உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கும் ஒரு நிலை. இத்தகைய உயர் இரக்க நிலையைத்தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றது.

இன்றைய முதல் வாசகம் விடுதலைப் பயணத்திலே (விப. 19:4-6) இறைவன் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததை நீங்கள் காண்பீர்கள். எனக்கு நீங்கள் குருத்துவ அரசராகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள் என்று உடன்படிக்கையை நினைவூட்டுகிறார். ஆனால் இந்த மக்கள் இறைவனின் உடன்படிக்கையை மீறி, தேவ கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தவறினாலும் ஆண்டவர் சலிப்படையாது வெறுப்பும் அடையாது இரக்கத்தால் திரும்பத் திரும்ப அரவணைக்கின்றார். ஆம்! மீட்பின் வரலாற்றைப் படித்துப் பார்த்தால், கடவுள், ஏழை, எளியவர், கைவிடப்பட்டவர், துன்பப்படுபவர், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆரோக்கியம் அளிப்பவராகவும் இருப்பதைப் பார்க்கிறோம். அதேபோல புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய எல்லா இடங்களிலும் அல்லல்படுவோர், அவதிப்படுவோர், ஒடுக்கப்படுவோர், ஏழைகள், பாவிகள் மத்தியில்தான் இயேசுவைச் சந்திக்கிறோம்.

இன்றைய நற்செய்தியிலே கூறப்பட்டதுபோல (மத். 9:36) ஆயனில்லா ஆடுகளைப்போல் அலைக்கழிக்கப்பட்ட மக்களைக் கண்ட இயேசு அவர்கள் மீது பரிவு கூர்ந்தார் என்று வாசிக்கிறோம். சமுதாயத்தில் கடை நிலையில் வாழ்ந்தவர்களை வாழ வைக்க, இயேசு தன் உயிரையும் கொடுத்தார் (உரோ. 5:6) என்றும் வாசிக்கிறோம். இது கடவுளின் மாறாத, குறையாத அன்பைக் காட்டுகிறது. இதை முன் வைத்துத்தான் எசாயா தீர்க்கத்தரிசி நூலிலே (எசாயா 54:10) மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும், உன் மீது நான் கொண்ட பேரன்போ நிலைசாயாது என்கிறார் ஆண்டவர். இதை இன்னும் ஆழப்படுத்தும் வகையில், உனக்கு நான் முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன் (எரே. 31:3) என்று எரேமியா நூலில் கூறுகின்றார்.

ஓர் அழகான கோவில். அதன் உள்ளே அன்பு இயேசுவின் திருவுருவம். புயலால் கோவில் இடிந்து, சுரூபம் சுக்கு நூறாக வெடித்து, சிதைந்த நிலையில் கிடந்த ஆலயத்தைத் திரும்ப எழுப்பி கலைமிக்க ஆலயமாகக் கட்ட நிதி திரட்ட புறப்பட்டார் ஒரு துறவி. கடவுள் அவருக்குக் கனவில் தோன்றி, எனக்கு நீ இப்போது கோவில் கட்ட வேண்டாம். ஏழைகள், கைவிடப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் படும் அவல நிலையைப் பார். அவர்கள் உள்ளம்தான் நான் வாழ விரும்பும் உகந்த இடம் என்று கூறியவுடன் துறவி கோவில் கட்டுவதை நிறுத்தி, ஏழை, எளியவரைத் தூக்கிவிடப் புறப்பட்டார்.

இன்று நாச சக்திகளான சாதி வெறி, மத வெறி, இன வெறி. அதிகார வெறி, பெண் அடிமை போன்ற பல சுனாமிகளால் இன்று எத்தனையோ மக்கள், நம் மத்தியில் அவதிப்படுகிறார்கள். மடிந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடையே எத்தனையோ பஞ்சங்கள் தலைவிரித்து ஆடுகின்றன! நாங்கள் என்ன தவறு செய்தோம் இத்தகைய பிறப்புக்கு! வாழத் தெரியவில்லையே என்று கண்ணீர் வடிக்கும் உள்ளங்கள் எத்தனை! எத்தனை!! இதற்கு நாம் செய்வதென்ன?

இயேசுவுக்கு மறுபெயர் பரிவு, பாசம், நேசம், கனிவு, கருணை ஆகும். அவரது சீடர்களாகிய நமக்கும் இத்தகைய பேறு கிடைத்தால்தான் நாம் அவரது மக்களாக இருப்போம்.

 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி


வந்திடுவாய் என் அருகில் !

அது ஓர் அழகான கோயில். அந்தக் கோயிலுக்குள்ளே அன்பே உருவான இறைவனின் திரு உருவம்! அதற்கு எல்லாருடைய இதயங்களையும் கொள்ளை கொள்ளும் இதம் இருந்தது ; காண்போர்க்கு ஒரு கலைக் கூடமாகவே அது காட்சியளித்தது!

திடீரென ஒருநாள் பெரும்புயல் வீசியது! அந்த இறைவனின் உருவமிருந்த திருக்கோயில் தரைமட்டமானது! அந்த உருவம் பல ஆண்டுகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், பருவ மாற்றங்களால் அலைக்கழிக்கப்பட்டும் கிடந்தது. அதைப் பார்த்த ஒரு துறவி மீண்டும் அக்கோயிலைப் புதுப்பிக்க நிதி திரட்டினார். அச்சமயத்தில் அவர் கனவில் கடவுள் தோன்றி, எனக்குக் கோயில் வேண்டாம். மக்கள் படும் அவலங்களுக்கும். அல்லல்களுக்குமிடையே என்னை விட்டுவிடு. அதுதான் எனக்கு உகந்த இடம் என்று கூறியதால் கோயில் கட்ட நிதி திரட்டுவதை துறவி நிறுத்திவிட்டார்.

மீட்பின் வரலாற்றைப் படித்துப்பார்த்தால், கடவுள் ஏழை. எளியவர்கள், கைவிடப்பட்டவர்கள், துன்பப்படுகின்றவர்கள், அடிமைப் படுத்தப்பட்டவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் அளிப்பதை நாம் காண்போம். பழைய ஏற்பாட்டிலே கடவுள் ஏழை மக்களுக்காக எகிப்து நாட்டை, பார்வோனை எதிர்த்ததை [முதல் வாசகம்] நாம் அறிவோம்.

புதிய ஏற்பாட்டிலே ஏறக்குறைய எல்லா இடங்களிலுமே அவலங்களுக்கும், அல்லல்களுக்கும் நடுவில் வாழ்பவர்கள் நடுவில்தான் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம். தன்னை முதன் முதலில் உலக மக்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது இயேசு தன்னை ஒரு விடுதலை வீரராக அறிமுகப்படுத்திக்கொள்கின்றார் (லூக் 4:18-19). இன்றைய நற்செய்தியில் கூட ஆயன் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டவர்கள் நடுவில்தான் இயேசுவை நாம் காண்கின்றோம்.

சமுதாயத்தில் கடைநிலையில் வாழ்ந்தவர்களை வாழவைக்க இயேசு தன் உயிரைக் கொடுக்கவும் தயங்கவில்லை (இரண்டாம் வாசகம்). இந்த உண்மை கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு என்ற நிலையில் வாழ்பவர்களுக்கு பெரும் ஆறுதலை அளிக்க வேண்டும்.

பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை!
கண்ணீரில் கதையெழுதி சொன்னாலும் புரியவில்லை!
என்று அழுகின்ற பெண்கள் ஆயிரம்!
இதயம் என்பது ஒரு வீடு - அன்றும் இன்றும் அவள் வீடு.
அது மாளிகை ஆனதும் அவளாலே -
பின் மண்மேடானதும் அவளாலே!
என்று அழுகின்ற ஆண்கள் ஆயிரம்!
ஊருமில்லை நாட்டிலே!
உறவுமில்லை வீட்டிலே!
யாருமில்லை வாழ்விலே! ஏன் பிறந்தேன் உலகிலே?
என்று அழுகின்ற மானிடர் ஆயிரம்!

இவர்களையெல்லாம் பார்த்து இயேசு, என் மகளே ! என் மகனே! உனக்காகவே நான் நாளும் நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் எந்தன் உள்ளம். உன்னை நான் வாழவைக்க என்னையே தந்திடுவேன். வந்திடுவாய் என்னருகில் என்கின்றார்.
மேலும் அறிவோம் :

துன்பத்திற்கு யாரே துணைஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணைஅல் வழி? (குறள்: 1299).

பொருள்:

ஒருவருக்குத் துன்பம் வரும்போது தம்முடைய நெஞ்சமே துணை புரியவில்லை என்றால், அவருக்கு வேறு யார் துணைபுரிவார்? எவரும் துணைபுரியார்!

 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்


நேர்முகத் தேர்வுக்குச் சென்ற ஓர் இளைஞர் நிறையக் கைக்குட்டைகளை தன்னுடன் எடுத்துச் சென்றார். ஏன்? என்று கேட்டதற்கு, "நேர்முகத் தேர்வு என்பது வெறும் கண்துடைப்பு என்றார். இக்காலத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி ஆள்களை வேலைக்குத் தெரிவு செய்கின்றனர். ஆனால் கிறிஸ்து நற்செய்திப் பணிக்காகச் சீடர்களைத் தெரிவு செய்வதற்கு நேர்முகத் தேர்வு எதுவும் நடத்தவில்லை. மாறாக, ஓர் இரவு முழுவதும் ஒரு மலையில் கடவுளிடம் வேண்டிய பிறகு (லூக் 6:12), தாம் விரும்பியவர்களைத் தெரிவு செய்தார் (மாற் 3:13).

கடவுள் தமது பணிக்காகத் தகுதியுள்ளவர்களை அழைப்பதில்லை. மாறாக, தாம் அழைத்தவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். திருத்தூதர் பவுல் கூறுவதுபோல. உலகம் மடமை என்றும் வலுவற்றது என்றும் கருதுபவற்றைக் கடவுள் தேர்ந்து கொள்கிறார். கடவுள்முன் எவரும் பெருமை பாராட்டாதபடி அவர் இவ்வாறு செய்கின்றார் (1 கொரி 1:27-29), இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து படிப்பறிவில்லாத சாதாரண, சாமானிய மனிதர்களை, பெரும்பாலும் மீனவர்களைத் தேர்ந்து கொள்வதை வாசிக்கிறோம். இதனால் மனிதருடைய வல்லமையல்ல. கடவுளுடைய வல்லமையே துலங்குகிறது என்பது தெளிவாகிறது.

இன்றைய முதல் வாசகம், கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் உடன்படிக்கை செய்து, அவர்களை எல்லா மக்களினங்களிலும் தமது சொத்தாக, தூய மக்களினமாகத் தெரிவு செய்கிறார். காரணம், அவர்கள் பெரிய இனம் என்பதற்காக அல்ல, மாறாக எல்லா மக்களிலும் அவர்கள் சிறிய இனம் என்பதற்காக, அவர்கள்மீது அன்பு கூர்ந்து அவர்களைத் தெரிவு செய்கிறார். கிறிஸ்து தம் சீடர்களிடம், "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்" (யோவா 15:16) என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்து தம் சீடர்களைத் திருத்தூதுப் பணிக்கு அனுப்பிய பொழுது அவர்களுக்கு ஒருசில இன்றியமையாத அறிவுரைகளை வழங்குகிறார். முதலாவது. அவர்கள் தங்களுடன் பணப்பையோ, கைப்பையோ எடுத்துச் செல்ல வேண்டாம் என்கிறார். இக்காலத்தில் காசு இல்லாமல் பேருந்தில் பயணம் செய்ய முடியுமா? *இயேசு வருகிறார்" என்னும் தலைப்புடன் அச்சடிக்கப்பட்ட பிரதிகளை பைபிள் போதகர் ஒருவர் ஒரு பேருந்தின் நடத்துனரிடம் கொடுத்தபோது அவர், "இயேசு வந்தாலும் கண்டிப்பாகப் பயணச்சீட்டு வாங்க வேண்டும்". என்றாராம்! நற்செய்தியை அறிவிப்பவர் தன்னுடன் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியதன் உட்பொருள்: நற்செய்தி அறிவிப்பவர்கள் பணத்தை நம்பியல்ல, கடவுளையே நம்பித் தங்களதுபணியை ஆற்ற வேண்டும். பேதுருவிடம் பொன்னும் வெள்ளியும் இல்லாதிருந்ததால்தான் அவரால் புதுமை செய்ய முடிந்தது என்பதை நினைவுகூர வேண்டும் (திப 3:6).

இரண்டாவதாக, நற்செய்தியை அறிவிக்கவிருக்கும் தம் சீடர்களுக்குக் கிறிஸ்து நோய்களைப் போக்கவும், பேய்களை ஓட்டவும். இறந்தவர்களை உயிர்ப்பிக்கவும் வல்லமை அளிக்கிறார். இக்காலத்தில் புதுமைகள் செய்ய முடியுமா? ஓர் அருள்சகோதரி இளம் வயதில் இறந்து விட்டார். அவருடைய உடலுக்குமுன் நான் செபித்தேன், அவருடைய அம்மா என்னிடம், "சாமி! நீங்கள் செபம் பண்ணுவதால் என் மகள் எழுந்து உட்காரப் போவுதா? என்று மனவேதனையுடன் கேட்டார். இக்காலத்தில் திருத்தூதர்களைப்போல் புதுமை செய்ய முடியாது. ஆனால் எல்லாப் புதுமைகளுக்கும் மேலான நம்பிக்கை என்னும் புதுமை செய்ய முடியும், அந்த அருள்சகோதரி இம்மை வாழ்வுக்கு இறந்து விட்டாலும் மறுமை வாழ்வுக்குப் பிறக்கிறார் என்னும் நம்பிக்கையை ஊட்ட முடியும். "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11:2,5),

மூன்றாவதாக, நற்செய்தியை எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக அறிவிக்கப் பனர்க்கிறார் கிறிஸ்து, கொடையாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாகவே வழங்க வேண்டும் (மத் 9:8),

உறுதிப்பூசுதல் பெற்ற சிறுவர்களில் ஒருவன் ஒரு சுவரில் இருபது ரூபாய் வைத்து, ஒரு காகிதத் துண்டில், " பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டுமா?" என்று எழுதி இருந்தான் திருப்பலி நிறைவேற்றவும் அருள் சாதனங்களை வழங்கவும் மக்களிடமிருந்து பெறுவது கட்டணம் அல்ல, மாறாக விருப்பமுடன் கொடுக்கப்படும் காணிக்கை. இக்காணிக்கை திருப்பணியாளர்களின் பராமாப்பிற்காக. அவ்வாறு காணிக்கை பெறுவது நியாயமானது. ஏனெனில் "வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே" (மத் 10:10). *கோவிலில் வேலை செய்வோர் கோவில் ருமானத்திலிருந்தே உணவு பெறுவர்" (1 கொரி 9:13). திருப்பலிக்குக் காணிக்கை பெறலாம் என்று திருச்சபைச் சட்டமும் கூறுகிறது (திச 945, ப.1).

அதே நேரத்தில் ஆன்ம நலன்களைப் பணத்திற்கு விற்பது "திருப்பணி விலைப்பழி" என்னும் மாபெரும் பாதகமாகும். இக்குற்றத்தைப் புரியும் திருப்பணியாளர்களுக்கு "திருப்பணிபுரிய இடைக்காலத் தடை" என்னும் தண்டனை வழங்க வேண்டும் என்று அதே திருச்சபைச் சட்டம் கூறுகிறது (திச 1380).

இறுதியாக, திருப்பட்டங்கள் பெற்ற திருப்பணியாளர்கள் மட்டுமல்ல, திருமுழுக்குப் பெற்ற அனைவருமே "அரச குருக்களின் கூட்டத்தினர்" (1 பேது 2:9). எனவே பொதுநிலையினரும் நற்செய்தி அறிவிக்க, குறிப்பாக, திருப்பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கத் தீவிரமான அழைப்புப் பெற்றுள்ளனர். உலகின் நடுவே வாழ்த்து. உலகக் காரியங்களைக் கிறிஸ்தவ மனப்பாங்குடன் செய்து, புளிப்புமாவுபோல் செயல்பட்டு (மத் 13:33) உலகில் இறையரசைக் கட்டி எழுப்புவது பொதுநிலையினரின் தனிப்பட்டட அழைப்பு ஆகும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகிறது. "பொதுநிலையினர் உலகையே இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றனர்" (திருச்சபை, எண் 34), முடிந்தவரை எல்லா விதங்களிலும் அறப்பணி ஆற்ற வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்(குறள் II)

அவ்வாறே கிறிஸ்துவின் விசுவாசிகள் எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் நற்செய்தியை அறிவிப்பதுடன், அவர்களே நற்செய்தியாக மாறுவது காலத்தின் கட்டாயமாகும்.
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 அறுவடையும் அழைப்பும்

கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர்' என்ற பெருமைக்குரியவர் தூய சவேரியார். இந்தியாவில் அவர் நற்செய்திப் பணி தொடங்கி ஓர் ஆண்டுக்குப் பின்பு தூய இஞ்ஞாசியாருக்குக் கடிதம் எழுதினார்: எத்தனை பேருக்குத் திருமுழுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால், பல வேளைகளில் என் கைகள் வாதநோய் கண்டது போல உயர்த்த முடியாத அளவுக்கு மரத்துப்போய் விடுகின்றன. இவர்களின் மொழியில் விசுவாச அறிக்கை மற்றும் செபங்களைக் கற்றுக் கொடுத்து என் தொண்டையும் அடைத்துக் கொள்கிறது.

மேலும் அவர் தொடர்கிறார்: "இங்கே இந்தியாவில் பலர் கிறிஸ்தவர்களாக முடியவில்லையென்றால் இயேசுவையோ நற்செய்தியையோ இவர்களுக்கு வழங்க ஆளில்லை என்பதுதான் காரணம். ஐரோப்பாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று வெறிபிடித்தவனைப் போல நான் கதற வேண்டும் என்று தோன்றுகிறது. அங்கே பல கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே, அந்த மாணவர்கள் தங்கள் பாடங்களுடன் இறைவன் தந்த ஆற்றல்களு,ககு ஈடாக இறுதிநாளில் அவர் கேட்க இருக்கும் வாழ்க்கைக் கணக்கைப் பற்றி நினைப்பார்களா? அவ்வாறு நினைத்துவிட்டால் உடனே ஆன்மிக முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அது இறைவன் திருவுளத்தை உணர வைக்கும். இறைவா, நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர் எனக் கேட்கவும் முன்வருவார்கள்."

''அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" (மத். 9:37,38) என்ற இயேசுவின் ஆதங்கத்தை எதிரொலிக்கவில்லையா தூய சவேரியாரின் உணர்வுகள்?

வால்ட்டர் என்பவர் அறிவியல் அறிஞர். ஆனால் இறைநம்பிக்கையற்றவர்.அவர் சொன்னார், என்னிடம் திறமையான 12 பேரைக் கொடுங்கள். நானும் இந்த உலகை மாற்றிக் காட்டுகிறேன் என்று இயேசு திறமைசாலிகளையா அழைத்தார்? பாமரர்களை, படிப்பறிவில்லாதவர்களை அழைத்தன்றோ இந்த உலகைப் புரட்டிப் போட்டார்! (தி.ப. 17:6). அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தவர்கள். எடுத்துக்காட்டாக மத்தேயு உரோமைப் பேரரசின் அடிவருடி. தீவிரவாதியான சீமோனோ உரோமைப் பேரரசுக்கு எதிரான புரட்சிக் குரல். அவர்கள் பல சமயங்களிலும் இயேசு சொன்னதைப் புரிந்து கொள்ளாத இயல்பினர். ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?' என்ற கூற்றுக்கூட பேதுரு புரிந்து சொன்னதல்ல. என் சதை உண்மையான உணவு என் இரத்தம் உண்மையான பானம் (யோ. 6:55) என்கிறார் இயேசு. அப்போது வாழ்வுதரும் சதை உம்மிடம்தான் உள்ளது என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் வாழ்வுதரும் வார்த்தை என்றல்லவா குறிப்பிடுகிறார்.

இத்தகையவர்கள் இறைவன் திட்டத்துக்கு எந்த அளவு உதவுவார்கள்? இயேசு நாள்தோறும் இறைத்தந்தையுடன் உறவாடினார். ஆயினும் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னால் அவர் ஆழமாகச் செபித்தார் என்பதை நற்செய்தியாளர்கள் குறித்துக் காட்டத் தவறியதில்லை. இறையாட்சித் தூதர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன் இயேசு இரவெல்லாம் செபத்தில் செலவழித்தார் (லூக். 6:12). தான் தேர்ந்து கொள்பவரெல்லாம் தனக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்றா செபித்திருப்பார்? அவர்கள் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்றுதானே மன்றாடியிருப்பார்!

பல்வேறு பின்னணியுடன் கூடிய பன்னிருவரைத் தேர்ந்து கொள்கிறார் இயேசு. இவர்களின் தனித்த இயல்புகளையும் திறமைகளையும் நம்பியல்ல. இவர்களை ஒன்றாக இணைத்து இறைத்தந்தை இவர்களை மாபெரும் சக்தியாக மாற்றுவார் எனும் நம்பிக்கையுடன் இயேசுவின் மறையுடலைக் கட்டிஎழுப்ப இறைவன் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இணைந்து அவரது திருவுளம் தேடினால் கடவுளின் கையில் மாபெரும் சக்தியாவார்கள்.

திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்குமுன் இயேசு செய்த செபம் எந்தவிதத்தில் அருத்தமுள்ளது? இரவெல்லாம் செபித்துத் திருத்தூதர் குழுவில் யூதாசைத்தானே சேர்த்துக் கொள்ள முடிந்தது! செபம் என்றால் தந்தை தன் திருவுளத்தை வெளிப்படுத்த மனிதர் அதனை இனம் கண்டு ஏற்றுக் கொள்வதாகும். இயேசுவைப் பொருத்தவரை, தந்தையின் திருவுளம் இயேசுவின் கல்வாரிச் சாவே! அதற்கு யூதாசு தேவை. எனவே இயேசுவின் செபம் அர்த்தமுள்ளது. திருத்தூதர் குழுவை உருவாக்கும்போதே இயேசு கல்வாரியைச் சுவைக்கிறார்.

அழைக்கப்படுவதற்குத் தகுதி "இறை ஒப்புதலே'. அந்த ஒப்புதலைப் பெற இறைத்தந்தையோடு அன்புறவில் சங்கமமாகிறார். இயேசுவின் செபம் இறைஒப்புதல் பெற்று நம்மில் அழைப்புக்கான அர்ப்பணத்தை நிகழச் செய்கிறது.

அழைப்பு, பயிற்சி, அனுப்புதல், அனுபவம் இவையனைத்தும் திருத்தூதர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகின்றன. காரணம், இவர்கள் திருஅவையின் பன்னிரு தூண்கள். இஸ்ரயேலின் பன்னிரு குலங்களைப் போல இயேசுவின் பதிலாளிகளாக, இறையாட்சியின் பொறியாளர்களாக பணி நியமனம் பெறுகின்றனர். (மத். 19:28) திருஅவையில் எல்லோருமே இறைநம்பிக்கையாளர்களாக, இறையாட்சியின் சாட்சிகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்பன்னிரு திருத்தூதர்களுக்குத் தனிப்பொறுப்பும் சிறப்பும் உண்டு.

திருத்தூதர்களும் இயேசுவின் அடிச்சுவட்டில் கல்வாரிச் சாவைச் சுவைத்தவர்கள்தாம். மத்தேயு எத்தியோப்பியாவில் வாளால் வெட்டப்பட்டார். பேதுரு உரோமையில் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டார். பெரிய யாக்கோபு எருசலேமில் வெட்டிக் கொல்லப்பட்டார். சின்ன யாக்கோபு பேராலய உச்சியிலிருந்து கீழே வீசி எறியப்பட்டார். யோவான் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டார். பர்த்தலோமேயு உயிரோடு எரிக்கப்பட்டார். அந்திரேயா சிலுவையில் பின்னப்பட்டு உயிர்துறந்தார். தோமா ஈட்டியினால் குத்தப்பட்டார். இவ்வாறாக இயேசுவினால் அழைக்கப்பட்டவர்களின் வரலாறு வீரமரணத்தில் முடிந்தது.

இயேசு இறப்பதற்கு முன் திருத்தூதர்கள் இருந்த நிலையை எண்ணிப் பார்த்தால் இவ்வெளிய மனிதர்கள் மீது அசாத்திய வியப்பே மேலிடும். இவர்கள்எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்களாக பதவி ஆசை பிடித்தவர்களாக, முன்கோபிகளாக, அவநம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். தனது மக்களை அவல நிலையிலிருந்து தம்மை நோக்கி வழி நடத்திச் செல்ல ஞானிகளையும் செல்வர்களையும் அழைக்காது, பலவீனர்களை இயேசு தேர்ந்தெடுத்தது இறைத்தந்தையின் திருவுளம். நாம் பலவீனர்களாக இருக்கலாம். ஆனால் இயேசுவால் பலமூட்டப்படுவோம், பயனுள்ள கருவிகளாக மாறுவோம்.

சீடர்கள் ஆற்ற வேண்டிய பணிகளாக இயேசு குறிப்பிடுபவை இரண்டு. 1. நற்செய்தியை அறிவியுங்கள். இது இறையாட்சி வந்துவிட்டது என்ற அறிவிப்பு. 2. நோயாளிகளைக் குணப்படுத்துங்கள். இது அலகையின் ஆட்சி அகன்றது என்பதன் அடையாளம்.

இந்தப் பணிகளை ஆற்றச் சீடர்களுக்கு இருந்த ஒரே தகுதி இயேசுவின் பால் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்பது மட்டுமே. சீமோனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா?" (யோ. 21:15) இந்தக் கேள்விக்கான பதிலை மூன்று முறை உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேதுருவுக்குப் பொறுப்பளித்தார் இயேசு. எனவே பணி செய்யப்பணம், படிப்பு, பட்டங்கள் மற்றும் பதவியைக் காட்டிலும் இயேசுவின் மேலுள்ள அன்புதான் முதன்மையான தகுதி.
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
ஞாயிறு மறையுரை அருள்பணி கிங்ஸ்லி MMI- சென்னை

"பரிவுள்ள இதயம் - பணியாளராகும் சீடர்"

இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 9:36 10:8), இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு அவர்கள் மீது "பரிவு கொள்கிறார்". இந்த பரிவுதான் திருச்சபையின் நற்செய்திப் பணிக்கு அடிப்படையாக அமைகிறது.
1. ஆயனில்லா ஆடுகள் (Sheep without a Shepherd)

இயேசு மக்களைப் பார்த்தபோது, அவர்கள் "ஆயனில்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டும் சோர்ந்து போயும்" இருந்ததைக் கண்டார்.
சிந்தனை: இன்றும் நம் சமூகத்தில் வழிகாட்ட ஆளின்றி, மன அழுத்தத்திலும், போதை பழக்கத்திலும், குடும்பச் சிக்கல்களிலும் சோர்ந்து போய் அலைக்கழிக்கப்படும் மக்கள் பலர் உள்ளனர். அவர்களைக் கண்டு நாம் 'பரிவு' கொள்கிறோமா அல்லது 'விமர்சனம்' செய்கிறோமா?
2. அறுவடை மிகுதி, வேலையாள்கள் குறைவு (The Harvest is Plenty)

இயேசுவின் பார்வையில் உலகம் ஒரு அறுவடை நிலம். ஆனால், அந்த நன்மைகளைச் சேகரிக்க வேலையாள்கள் குறைவாக உள்ளனர்.
அழைப்பு: வேலையாள்கள் என்பது வெறும் குருக்கள், துறவியர் மட்டுமல்ல. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் தன் குடும்பத்திலும், தெருவிலும், பணியிடத்திலும் அன்பை விதைக்கும் "வேலையாள்கள்" தான்.
3. கொடையாகப் பெற்றீர்கள், கொடையாகவே வழங்குங்கள் (Freely Given, Freely Give)

இயேசு தன் சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து அனுப்பும்போது, "கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" என்கிறார்.
விளக்கம்: நம்மிடம் இருக்கும் அறிவு, செல்வம், திறமை எல்லாமே இறைவன் கொடுத்த கொடை. அதைப் பிறருடைய நலனுக்காகப் பயன்படுத்துவதே நாம் இறைவனுக்குச் செய்யும் நன்றி.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இன்று நாம் நடைமுறைப்படுத்த வேண்டியவை:
ஆயர்களுக்காகச் செபிப்போம்: நம் திருத்தந்தை, ஆயர் மற்றும் பங்குத்தந்தையர்களுக்காக உருக்கமாகச் செபிப்போம். அவர்கள் நல்ல ஆயனின் இதயத்தோடு மக்களை வழிநடத்த இறைவனை வேண்டுவோம்.
ஆறுதல் அளிப்போம்: இந்த வாரம், சோகத்தில் அல்லது தனிமையில் இருக்கும் ஒருவரைச் சந்தித்து, இயேசுவின் பரிவோடு அவரோடு உரையாடுங்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த சிறிய உதவியைச் செய்யுங்கள்.
இலவசப் பணி: பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஒருவருக்கு உதவி செய்யுங்கள். "கொடையாகப் பெற்றீர்கள், கொடையாகவே வழங்குங்கள்" என்ற இயேசுவின் வாக்கை நிறைவேற்றுங்கள்.
அன்பியப் பணி: உங்கள் அன்பியத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நல்வழிகாட்ட முன்வாருங்கள். அறுவடைக்குத் தயாராக இருக்கும் இளம் தலைமுறையை நல்வழிப்படுத்துவது நம் கடமை.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்தது நாம் தனித்து வாழ்வதற்கு அல்ல, மாறாக வழிதவறிய ஆடுகளுக்கு வழிகாட்டும் ஆயர்களாக மாறுவதற்கே. இறைவனிடம் நாம் பெற்ற அன்பை, உலகிற்கு இலவசமாகப் பகிர்ந்தளிப்போம்."
 
நன்றி வழி காட்டும் தோழன்
 இயேசுவின்‌ இதயத்தவராய்‌...

மனித உடலிலுள்ள உறுப்புகளிலேயே தலைசிறந்தது மனித இதயம்‌. இதயம்‌ என்பது வெறும்‌ உடல்‌ உறுப்பு என்பதையும்‌ தாண்டி, பல்வேறு பண்புநலன்களைக்‌ கொண்டதாக உள்ளது. நல்ல இதயம்‌, கெட்ட இதயம்‌ என்றெல்லாம்‌ நாம்‌ பிரித்துப்‌ பார்க்கின்றோம்‌. இன்றைய நற்செய்தி நம்‌ இதயங்கள்‌ எப்படிப்பட்ட இதயங்களாக உள்ளன ? எப்படிப்பட்ட இதயங்களாக இருக்க வேண்டும்‌ என்னும்‌ பாடங்களை நமக்குக்‌ கற்றுத்‌ தருகின்றன.

இன்றைய நற்செய்திப்‌ பகுதியை சுருக்கமாகப்‌ பார்க்கையில்‌, இயேசு மக்களைப்‌ பார்த்து இரக்கம்‌ கொள்கிறார்‌. அவர்கள்‌ மேய்ப்பன்‌ இல்லாத ஆடுகளைப்‌ போல சோர்ந்து சிடப்பதைக்‌ கண்டார்‌. பின்னர்‌ அவர்‌ தம்‌ சீடர்களை அழைத்து, அதிகாரமும்‌ பணியும்‌ கொடுத்து உலகிற்குள்‌ அனுப்புகிறார்‌. இந்த வாசகம்‌ நம்‌ இதயங்கள்‌ எப்படிப்பட்ட இதயங்களாக இருக்க வேண்டும்‌ என்பது பற்றிய இரு முக்கியப்‌ பண்புகளை நமக்குக்‌ கற்றுக்கொடுக்கிறது:

1. இரக்கமுள்ள இதயம்‌:

நற்செய்தியின்‌ தொடக்கமே. இயேசு ஆயனில்லா ஆடுகள்‌ போன்றிருந்த மக்கள்மீது பரிவு கொண்டிருப்பதைச்‌ சுட்டிக்காட்டுகின்றது. இயேசு மக்களை வெறும்‌ கூட்டமாகப்‌ பார்க்கவில்லை. ஒவ்வொருவரின்‌ வேதனையையும்‌ உணர்ந்தார்‌. அவர்களுடைய உடல்‌ நோய்‌, மன வேதனை, ஆன்மிகத்‌ தாகம்‌ என அனைத்தையும்‌ கண்டார்‌. நல்ல சமாரியர்‌ உவமையில்‌ (லூக்கா 10:25-37), பலர்‌ காயமடைந்த மனிதினைப்‌ பார்த்தும்‌ கடந்து செல்கிறார்கள்‌. ஆனால்‌ சமாரியர்‌ நின்று இரக்கம்‌ கொள்கிறான்‌. நாம்‌ கடந்து போகின்றவர்களாக அல்ல, இரக்கத்தோடு உதவுகின்றவர்களாக வாழவே அழைக்கப்படுகின்றோம்‌.

இரக்கம்‌ என்பது கிறிஸ்தவத்தின்‌ அடையாளம்‌. புனித அன்னை தெரசா கூறுகிறார்‌: இந்த உலகில்‌ மிகப்‌ பெரிய வறுமை என்பது அன்பில்லாமல்‌, கவனிக்கப்படாமல்‌ இருப்பதே. இதனை உணர்ந்து, இயேசுவைப்‌ போல இரக்கமுள்ள இதயம்‌ கொண்டு வாழ நாம்‌ முன்வர வேண்டும்‌.

2. இறைபணியாற்றும்‌ இதயம்‌:

தான்‌ இருக்கமுள்ளவராக இருந்ததோடு இயேசு நிறுத்திக்‌ கொள்ளவில்லை, தமக்குப்‌ பிறகும்‌ இந்த இரக்கப்‌ பணிகள்‌ தொடர்ந்து நடக்க வேண்டும்‌ என்று விரும்பியவராக, தன்‌ சீடர்களைப்‌ பணிசெய்ய அனுப்புகின்றார்‌. இயேசு உலகத்தை ஒர்‌ அறுவடை வயலாகக்‌ காண்கிறார்‌. அந்த அறுவடை வயலில்‌ பணியாற்றும்‌ இதயங்களாக நாம்‌ வாழ நம்மை அழைக்கின்றார்‌. இறைவனைத்‌ தேடும்‌ மக்கள்‌, ஆறுதலை நாடும்‌ இதயங்கள்‌, வழிகாட்டுதல்‌ தேவைப்படும்‌ இளைஞர்கள்‌, அன்புக்காக ஏங்கும்‌ குடும்பங்கள்‌ என நம்‌ பணிக்காகக்‌ காத்திருக்கும்‌ மக்கள்‌ இன்றைய உலகில்‌ அதிகம்‌. இத்தகைய பின்னணியில்‌, அர்ப்பணிப்புள்ள அருள்பணியாளர்களாக, துறவியராக, தொண்டுள்ளம்‌ கொண்ட பொதுநிலையினராக நாம்‌ பணிசெய்ய வேண்டும்‌.

இந்த உலகில்‌ ஒவ்வொருவருக்கும்‌ ஒரு பணி உண்டு. நம்‌ பணியை அறிந்து அதன்படி செயல்படுகின்றவர்களாக நாம்‌ மாற வேண்டும்‌. எங்கு இருள்‌ இருக்கிறதோ அங்கே ஒளியைக்‌ கொண்டு செல்லுங்கள்‌ என்ற அசிசி நகர்ப்‌ புனித பிரான்சிசின்‌ செபம்‌ நம்‌ செபமாக மாற வேண்டும்‌.

இரக்கமுள்ள இதயங்களாகவும்‌, இறைபணியாற்றும்‌ இதயங்களாகவும்‌ நம்‌ இதயங்கள்‌ மாறினால்‌, இயேசுவின்‌ தூய இதயமே, எங்கள்‌ இதயங்களை உம்‌ இதயத்தைப்‌ போலாக்கும்‌ என்ற நம்‌ செபங்கள்‌ உண்மையாகும்‌. நாம்‌ தயாரா ?
 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
 
பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு,
முதல் வாசகப் பின்னணி (வி.ப. 19:26),

பழைய ஏற்பாட்டு நூல்களில் மிகவும் விரும்பத்தக்க, அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் இதுவும் ஒன்று. எகிப்திலிருந்து வெளியேறி செங்கடலைக் கடந்து இஸ்ரயேல், மக்கள் சீனாய் பாலைவனத்தில் தங்கியிருந்த போது இறைவன், மோயீசன் வழியாக தான் இஸ்ரயேல் மக்களுக்கு செய்து, வந்திருக்கிற அருஞ்செயல்களை நினைவு கூறுகிறார். எகிப்தில், அடிமைகளாய் இருந்த அவர்களை எவ்வாறு பாரவோனின், பிடியிலிருந்து மீட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தாரென்றும், கோழி தன் குஞ்சுகளை அணைத்துக் காப்பது போல் எவ்வாறு, அவர்களை கழுகுகளின் இறக்கைகளின் மீது சுமந்து வந்தாரென்றும், நினைவூட்டுகிறார். மேலும் அவர்கள் தன்னுடைய குரலுக்குச், செவிசாய்த்து தன்னுடைய உடன்படிக்கையின் வழி நடந்தால், அவர்கள் தனக்குச் சொந்தமான மக்களகாவும் தேர்ந்தெடுக்கப்பட்ட, இனமாகவும், அரசக்குருத்துவத் திருக்கூட்டமாகவும் இருக்கும், உரிமைப் பேற்றை அவர்களுக்கு வாக்களிக்கிறார். சீனாய் மலையடி வாரத்தில் அவர்கள் 'இஸ்ரயேல்' என்ற தனிப்பெரும் இனமாக, ஒருங்கிணைக்கப்படவும், ஒவ்வொரு இஸ்ரயேலரும் கடவுளின் அரும், பெரும் செயல்களை பிறருக்கு எடுத்துரைக்கும் குருவாக, செயல்படவும் இறைவன் அவர்களை பணிக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 5:611),

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நம்மை எந்த, அளவுக்கு அன்பு செய்தாரென்றும், நம்மீது கொண்ட அன்பின், அடையாளமாக நமக்கு எவ்வாறு மீட்பைக் கொண்டு வந்தாரென்றும், தூய பவுல் படம் பிடித்துக்காட்டுகிறார். நாம் பாவிகளாயிருந்த, போதும், பாவத்தினால் கடவுளை விட்டு விலகிச் சென்ற போதும், கடவுள் நமக்காக தன் ஒரே மகனையே நம்முடைய பாவங்களுக்கு, கழுவாயாக கையளித்தார். இதில்தான் கடவுள் நம்மீது கொண்ட, அன்பின் தன்மை விளங்குகிறது. இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க, முடியாத இரத்தத்தால் நாம் கழுவப்பட்டுள்ளோம்.

கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டோம். இதனால் நாம் உறுதியாக மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கை நம்மை தொடர்ந்து பயணிக்க புதுத்தெம்பை அளிக்கிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத் 9:36-10:8)

இயேசு இறையரசை இம்மண்ணிலே கட்டியெழுப்ப சென்ற, இடமெல்லாம் நற்செய்தியை போதித்தார். நற்செயல்கள் பல புரிந்தார். விளைவு, மக்கள் இவர்தான் நாம் ஆவலோடு எதிர்பார்த்த மெசியா, என்று கூட்டம் கூட்டமாக அவரைத் தேடி வந்தார்கள். உரோமை, அரசின் வரிச்சுமைகளாலும் யூத சமயத் தலைவர்களாலும் இற்றுப் போன சட்டங்களாலும் மக்களின் வாழ்வு சின்னா பின்னமாக்கப்படுவதைக் கண்டு மக்கள் மேல் பரிவு கொண்டார். அவர்களை நற்பாதையிலே நடத்திட, அவர்களின் தேவைகளை தனிப்பட்ட முறையிலே சந்தித்தட, அவர்களை இறையரசை நோக்க, அழைத்துச் சென்றிட, தன்னலமில்லா தலைவர்கள் தேவை என்பதை, உணர்ந்தார். தன்னுடைய பணியைத் தொடர்ந்து ஆற்றிட, தொலை தூரங்களில் நற்செய்தியை அறிவித்திட, பன்னிரு திருத்தூதர்களை, அழைத்தார். அழைத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்து தன்னுடைய பிரதிநிதிகளாக, அவர்களை பல இடங்களுக்கும் அனுப்பினார்.
மறையுரை,

பரிதாபப்பட பலர் இருக்கிறார்கள்: பரிவு காட்ட யார் இருக்கிறார்?
அனுதாபப்பட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அன்பு செய்ய, யார் இருக்கிறார்?
பரிதாபப்பட பாரில் பலர் இருக்கிறார்கள். உதவி செய்ய, யார் இருக்கிறார்?

அது ஒரு பிரதான சாலை. எப்போதும் வண்டிகள் பறந்து சென்ற வண்ணமாக இருக்கும். அந்த சாலையிலே ஒரு பேருந்து நிறுத்தம். அந்த பேருந்து நிறுத்தத்தில் சிலுவையைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். காரணம் அவன் ஒரு மனநோயாளி. வெயிலுக்கும் மழைக்கும் மட்டுமல்லாமல் இரவுக்கும் பகலுக்கும், இந்த பேருந்து நிறுத்தம் தான் அவனுக்கு தஞ்சம். அங்கு வருவோர், போவோர்க்கு அவன் தான் துணை. சில வேளைகளில் அவன்தான், எல்லோர்க்கும் பொதுமக்களுக்கு, யாராவது 'டேய் சிலுமை! ஒரு பாட்டு பாடடா' என்று சொல்லி விட்டால் போதும் உடனே தன் கையிலுள்ள தட்டை தபேலாவாக்கி பெரிய பாடகர் போல பாட ஆரம்பித்து விடுவான். இப்படித்தான் அன்றொரு நாள் திடிரென வேகமாக வந்த வண்டி ஒரு நபரை இடித்து தள்ளி விட்டு சிட்டாய் பறந்தது. இதைப் பார்த்த பலரும் 'நமக்கேது வம்பு?' என்பது போல வேடிக்கை பார்த்தனர். உதவி செய்வார் யாருமில்லை அப்போது திருவுள்ள கையில் செய்து தண்ணீருடன் வேகமாக ஓடி வந்தான் சிறுவன். அடிபட்டுக் பக்கர் கிடந்தவரின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க சற்று இருந்தவர்களின் மனதில் துணிச்சல் வந்தது.

இதயமுள்ள ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயற்கையாக, சுரக்கக் கூடியது பரிவு. மனித நேயமுள்ள ஒவ்வொருவரின் மனத்திலும் பிறப்பது பரிவு. பரிவு என்பது 'ஐயோ பாவம்' என்று பரிதாபப்படுவது அல்ல. அழுவாரோடு சேர்ந்து அழுவது மட்டுமல்ல பரிவு. மாறாக அழுபவரின் கண்ணீரைத் துடைப்பதுதான் உண்மையான, பரிவு.

இன்றைய வாசகர்கள் அனைவரும் கடவுள் எந்த அளவுக்கு, பரிவுள்ளவர், நாம் எந்த அளவுக்கு பிறர் மீது பரிவுகாட்ட, வேண்டும் என்று நம்மை சிந்திக்க அழைக்கின்றன.

பழைய ஏற்பாட்டிலே நம்முடைய கடவுள் பரிவுள்ள தந்தையாக, இரக்கமுள்ள இறைவனாக படம் பிடித்துக் காட்டப்படுகிறார். அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும், துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை, வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும், கேட்டேன்.

ஆம் அவர்களின் துயரங்களை நான் அறிவேன் (வி.ப. 3:7). இஸ்ரயேல் மக்கள் மீது கடவுள் பரிவு கொள்கிறார். அவர்களை, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டார். ஆயனில்லா ஆடுகள் போல சிறந்த அவர்கள் மேல் பரிவு கொண்டார். பாறையிலிருந்து, தண்ணீர் வரச் செய்தார். பாலை நிலத்தில் மன்னா பொழிந்தார். அவர்களைக் கரம் பிடித்து வழிநடத்தினார். கழுகுகளின், இறக்கைகளின் கீழே அவர்களை சுமந்து சென்றார். அதைத், தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது.

> இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம். 'மக்கள் யூதாவின் ஆடுகள் போல் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டு அவர்கள் மேல் பரிவு கொண்டார்'. இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார். அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார் (மத்தேயு 14:14). அவருடைய கண்கள் பரிவைத் சுமந்தன. அவரின் வார்த்தைகள் வல்லமையைக் கொடுத்தன. அவரின் கரங்கள் சுகத்தைக் கொடுத்தன. அவரின் கால்கள், உதவி செய்ய விரைந்தன. அவருடைய இதயம் எப்போதும் பிறருக்காகவே இயங்கியது.

> அவர் சந்திக்க வேண்டிய மக்கள் பலர் இருந்தனர். அவர், ஆற்ற வேண்டிய பணி நிறைய இருந்தது. அவரின் பார்வைக்காய், அவரின் வருகைக்காய் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூடியதால் அவர் உணவு அருந்தவும் முடியவில்லை. அந்த அளவுக்கு தேவையிலிருப்பவர்கள், அவரைத் தேடி வந்தார்கள். (மாற்கு 3:20)

> எங்கே தனி ஒரு மனிதனால் இத்தனை மக்களை தனியாக சந்திக்க முடியாதோ, அவர்களுக்கு பணியாற்ற முடியாதோ என்று, எண்ணி மக்கள் மீது பரிவு கொண்டு 12 திருத்தூதர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அனுப்பினார். தான் பெற்றிருந்த அதே வல்லமையை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் (மத்தேயு 10:5).

> அவர் நம்மீது கொண்ட பரிவின் உச்சகட்டம் தான் நமக்காய் நம்மீதுள்ள பாவங்களக்காய் சிலுவை மரத்தினில் அறையப்பட்டார். அதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துக்காட்டுகிறது. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். அவர் தம் காயங்களால் நாம் குணமடைகிறோம். அவர் தம் இரத்தத்தால் நாம் கழுவப்பட்டோம். (ஏசாயா 53:4-5).

> நம்மீதுள்ள வாழ்ந்தையை சற்று அலசி பார்ப்போம். சக மனிதன், துன்பப்படும்போது தேவையிலிருக்கும்போது அதைப் பார்த்து சும்மா இருப்பவன் மனிதன் அல்ல. சில நேரங்களில் விலங்குகள், கூட மற்றொரு விலங்கு துன்பப்படும் போது கண்ணீர் வடிக்கும்., எந்தவொரு மனிதன் தன் அயலான் துன்பப்படும்போது மன, மிரங்கினானோ அவன்தான் உண்மையான கிறிஸ்தவன்., ஏனெனில் துன்பப்படும் ஒவ்வொரு மனிதரோடு இயேசுவும், துன்பப்படுகிறார். கண்ணீர் வடிக்கிற ஒவ்வொருவரோடும் கடவுள், கண்ணீர் வடிக்கிறார். குழைக்கு இரங்குகிறவன், கடவுளுக்குக், கடன் கொடுக்கிறான் (நீதி 19:17). இனிமேல் ஒவ்வொரு முறை, பிள்ளையும் போகும் பிறருக்கு உதவி செய்யும் போதும், ஆண்டவர் இயேசுவுக்கு நீங்கள் உதவி செய்வதாக நினைத்துக், கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களிடம் கடன் கேட்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். என்னவொரு பாக்கியமான காரியம், பாருங்கள்.

> கனத்த இதயத்தோடும் கண்ணீரோடும் பரீட்சமைகளோடும் வரும், சக மனிதனிடம் பரிவு கொண்டு ஒரு சில மணித்துளிகள், செலவிட்டாலே போதும், அவன் ஆறுதல் அடைவான், மனம்மகிழ்வு, பெறுவான்.,

> ஒட்டிய வயிற்றோடும் ஒடுங்கிய தேகத்தோடும் உண்ண உண, வின்றி வாழும் சக மனிதனுக்கு ஒரு வேளை உணவுக்கு, வழியேசெய்தாலே போதும், அவன் நிறைவடைவான்.

> மருத்துவமனைகளிலும் அனாதை இல்லங்களிலும் முதியோர், இல்லங்களிலும் அனாதரவாய் ஆதரவுக்காய் ஏங்கும் மக்களோடு, உறவாடினாலே போதும். அவர்கள் ஆறுதல் அடைவர்.

> நாம் படிக்கும் இடங்களிலும் பணி செய்யும் இடங்களிலும் நாம், அடுத்தவர் மீது அக்கறையுள்ளவர்களாய் இருந்தாலே போதும்., நாளும் கிறிஸ்தவை போதிக்கும் நலமிகு நற்செயற்பாடுகளாம்.

> நம்முடைய இதயம் பல வேளைகளிலே ஈரமற்ற, இரக்கமற்ற,, கல்லான இதயமாய் விடுகிறது. எசேக் 11:19ல் அவர்களுக்கு, நாம் வேறோர் இதயத்தையும், புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து, விட்டு கல்லான இதயத்தை அகற்றுவேன் என்று வாக்களித்த, இறைவனிடம், இறைவா, கல்லான என் இதயத்தை எடுத்துவிட்டு, கல்லான இதயத்தைத் தாரும் என்று வேண்டுவோம். இன்று, காணிக்கை வேளையிலே கல்லான நம்முடைய இதயங்களை, கடவுளுக்கு காணிக்கையாக்குவோம்.

நம்முடைய பிள்ளைகள் படிக்கின்ற பிள்ளைகளாக மட்டுமல்லாமல், பரிவு காட்டுகின்ற பிள்ளைகளாகவும் வளர்வார்களாக. நம்முடைய குடும்பங்கள் ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமல்லாமல், அயலனையும் அண்டை வீட்டாரையும் அன்பு செய்துவாழக் கற்றுக்கொண்டோமாக. "முல்லைக் கொடிக்குத் தேர்கொடுத்தான் பாரி மன்னன். குளிர்ந்த வாயை மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன் வள்ளல். வாடியை பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார் வள்ளலார். இயற்கையை அன்னையாய், ஓநாைய சகோதரனாய் பாவித்தார் தாய பிரான்சிஸ் அசிசியார். அனைத்தனையையும், அடுக்கடைந்தவர்களையும் தன் அன்புக்கரங்களால் அள்ளி அணைத்தார் அன்னை தெரசா. பகைவர்களை நேசித்தார். பாலிகளை இரட்சித்தார் இயேசு. நாம் என்னசெய்யப் போகிறோம்? "பரிதாபப்பட பலர் இருக்கிறார்கள். பரிவுககாட்ட யார் இருக்கிறார்?" ஏன் நீ பரிவு காட்டுபவனாய் இருக்கக்கூடாது?
பிற மறையுரைக் கருத்துக்கள்

இரக்கம் உடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள்இரக்கம் பெறுவர். இரக்கம் என்பது பிறரின் துன்பத்தை அறிவதுமட்டுமல்ல, உணர்ந்து பார்ப்பதும், உடனடி உதவி செய்வதுமாகும்.
கடவுள் பரிகுள்ளவர் என்றால், கடவுள் நமது கண்ணீரைகாண்கின்றார். உணருகின்றார். நம்மோடு நமது துன்பங்களைதோள் கொடுத்து சுமக்கும் தோழனாக இருக்கின்றார்.
இறையரசு நம்முடைய உள்ளத்திலே விதைக்கப்பட்டுள்ளது.இது அளப்பரிய ஆற்றல் கொண்டது. இது நம்முடையஉள்ளத்தில் இறைவனால் விதைக்கப்பட்டுள்ளது. இந்த விதைநம்முடைய உள்ளத்திலே விருட்சமாக வளர நாம் நம்முடையஇதயம் என்னும் நிலத்தை பக்குவப்படுத்தி, பாதுகாத்து அதுநம்முடைய உள்ளத்திலேயே முதிர்ச்சியடைய நாம் வழிவகைசெய்ய வேண்டும்.
நம்முடைய குடும்பத்தில் அமைதி நிலவுகின்ற போது,சந்தோஷம் நிலவுகின்ற பொழுது இறையரசு நம்முடையகுடும்பத்தில் நிலைபெற்றிருக்கின்றது. அந்த இறையரசுஇறைவனால் நம்முடைய குடும்பத்தில் நிலைபெற நாம் அந்தவிதையை விதைத்த கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும்.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
 பொதுக்‌ காலம்‌ பதினோராம்‌ ஞாயிறு

இன்றைய மூன்று வாசகங்களும்‌ தங்களுக்கேயுரிய விதத்தில்‌ இறைவனின்‌ செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. முதல்‌ வாசகத்தில்‌ இறைவன்‌ இஸ்ரயேலரை நோக்கி, கழுகுகளின்‌ இறக்கைகளின்‌ மேல்‌ உங்களை ஏந்தி என்னிடம்‌ வரச்‌ செய்தேன்‌ (விப 19:4) என்கிறார்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவுலடியார்‌, நாம்‌ பாவிகளாய்‌ இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத்‌ தம்‌ உயிரைக்‌ கொடுத்தார்‌. இவ்வாறு கடவுள்‌ நம்மீது கொண்டுள்ள தம்‌ அன்பை எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌ ' (உரோ 5:8) என்கிறார்‌. நற்செய்தியில்‌ இயேசு திரண்டிருந்த மக்கள்‌ கூட்டத்தைக்‌ கண்டு பரிவு கொண்டதையும்‌ அவர்களுக்குப்‌ பணியாற்ற திருத்‌தூதர்களை அனுப்புவதையும்‌ வாசிக்கின்றோம்‌. இன்றைய நற்செய்தியை மட்டும்‌ நோக்கும்போது அதில்‌ பல பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத்‌ தலைப்புகள்‌ ஒன்றிணைவதைக்‌ காண்கிறோம்‌. இதைக்‌ காண்பதற்குமுன்‌ நற்செய்தியின்‌ அமைப்பைப்பற்றி அறிந்து கொள்வோம்‌.
அமைப்பு முறை

இன்றைய நற்செய்தியின்‌ முதல்‌ பகுதி (மத்‌ 9:35-104) இதற்கு முந்தய 8-9 அதிகாரங்களில்‌ காணப்பட்ட இயேசுவின்‌ வல்ல செயல்களுக்கும்‌, அடுத்துவரும்‌ 10 ஆம்‌ அதிகாரத்தில்‌ காணப்பட இருக்கும்‌ தூதுரைபோதனைகளுக்கும்‌ இணைப்புப்‌ பாலமாக அமைகின்றது. இந்த நற்செய்தியின்‌ முதல்‌ பகுதியை இரு பகுதிகளாக பிரிக்கலாம்‌.

(1) ஆயர்‌ இல்லா ஆடுகளைப்போல இருக்கும்‌ மக்களைக்‌ கண்டு இயேசு கூறியவை (மத்‌ 9:35-38).
(2) பன்னிரு திருத்தூதர்களின்‌ பெயர்‌ பட்டியல்‌ (மத்‌ 10:1-4) (மத்‌ 10:5-8).

இன்றைய நற்செய்தியின்‌ பிற்பகுதி இயேசுவின்‌ தூதுரைப்‌ போதனையின்‌ தொடக்கத்தின்‌ (மத்‌ 70:5-15) முதல்‌ பகுதியாக அமைகின்றது. இதில்‌ நிகழ்வுக்கால. பின்னனியை விளக்கிவிட்டு (மத்‌ 70:5), இயேசுவின்‌ போதனைகளாக இஸ்ரயேலுக்கான பணி (மத்‌ 10:56-6), விண்ணரசு பற்றிய போதனை (மத்‌ 10:7), சீடர்களின்‌ குணமாக்கும்‌ பணி (மத்‌ 10:8) ஆகியவற்றைக்‌ குறித்துக்‌ காணப்‌படுகின்றன.

தொடக்கத்தில்‌ குறிப்பிட்டதுபோல இன்றைய நற்செய்தியில்‌ பல பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத்‌ தலைப்புகள்‌ ஒன்றிணைகின்றன. அவற்றில்‌ சிலவற்றை இவண் விளக்குவோம்‌.
1. இஸ்ரயேல்‌ எனும்‌ ஆட்டு மந்தை

இஸ்ரயேல்‌ மக்களை ஆட்டு மந்தைக்‌ கூட்டமாக காணும்‌ போக்கு பழைய ஏற்பாட்டுக்கு மிகவும்‌ அறிமுகமான ஒன்று. குறிப்பாக திரண்டிருந்த மக்களை அவர்‌ கண்ட போது அவர்கள்‌ மேல்‌ பரிவுகொண்டார்‌; அவர்கள்‌ ஆயர்‌ இல்லா ஆடுகளைப்போல்‌ அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்‌ (மத்‌ 9:36) எனும்‌ வசனம்‌ எண்‌ 27:17ல்‌ காணப்படும்‌. ஆண்டவரின்‌ மக்கள்‌ கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது" எனும்‌ வசனத்துடன்‌ தொடர்புடையது. இஸ்ரயேல்‌ மக்கள்‌ அலைக்‌ கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டது (மத்‌ 9:36) பழைய ஏற்பாட்டில்‌ இஸ்ரயேலர்‌ அனைவரும்‌ ஆயன்‌ இல்லா ஆடுகளைப்போல்‌ மலைகளில்‌ சிதறுண்டுடைக்கக்‌ கண்டேன்‌ (1 அர 22:17; மேலும்‌ காண்‌. (2 குறி 18:16) எனும்‌ வசனத்துடன்‌ ஒத்திருக்கின்றது. இஸ்ரயேலர்‌ நாடுகடத்தப்பட்டு இருந்த நிலையை விளக்க எசேக்கியேல்‌ இந்த உருவகத்தைப்‌ பயன்படுத்தி ஆயன்‌ இல்லாமையால்‌ அவை அலைத்து திரிந்தன. அப்போது எல்லாக்‌ காட்டு விலங்குகளுக்கும்‌ அவை இரையாயின. என்‌ ஆடுகள்‌ எல்லா மலைகளிலும்‌ உயர்ந்த குன்றுகளிலும்‌ அலைந்‌து திரிந்தன. பூவுலகில்‌ எவ்விடத்திலும்‌ என்‌ மந்தை சிதறுண்டு போனது: அதைத்‌ தேடவோ கூட்டிச்‌ சேர்க்கவோ எவரும்‌ இலர்‌ (எசே 34:5-6) எனக்‌ கூறுகின்றார்‌. செக்கரியாவும்‌, ஆயனை வெட்டு; அப்போது ஆடுகள்‌ சிதறடிக்கப்படும்‌ (செக்‌ 13:7) என ஆயனில்லா ஆடுகளின்‌ நிலையை விவரிக்கின்றார்‌.

இயேசு தம்‌ காலத்து மக்களையும்‌ இத்தகைய ஆயனில்லா ஆடுகளாகக்‌ கண்டு அவர்கள்‌ மீது பரிவு கொண்டு தனது திருத்தூதர்களை அவர்களுக்குப்‌ பணியாற்ற அனுப்புகின்றார்‌ என்பதே இங்கு நற்செய்தி.
2. பன்னிருவர்‌

புதிய ஏற்பாட்டில்‌ சீடர்களைக்‌ குறிப்பிடப்‌ பயன்படுத்தப்‌ படும்‌ பன்னிருவர்‌ எனும்‌ சொல்‌ பழைய ஏற்பாட்டுடன்‌ தொடர்‌ புடையது. தொடக்கத்தில்‌ இது யாக்கோபின்‌ வழி மரபினரான பன்னிரு மக்களைக்‌ குறிப்பிட்டது. பின்‌ வாக்களிக்கப்பட்ட நாட்டில்‌ குடியேறியபின்‌ நீதித்‌ தலைவர்களின்‌ காலத்தில்‌ பன்னிரு கோத்திரங்களின்‌ கூட்டமைப்பைக்‌ குறித்து நின்றது.

புதிய ஏற்பாட்டில்‌ புதுப்பிக்கப்பட்ட இஸ்ரயேலில்‌ இறை யாட்‌ வரும்போது இயேசுவின்‌ பன்னிரு சீடர்களும்‌ இஸ்ரயேலின்‌ பன்னிரு கோத்திரங்களையும்‌ தீர்ப்பிடுவார்கள்‌ என்பது இயேசுவின்‌ வாக்குறுதி (காண்‌ 79:28) [துப்படைப்பின்‌ நாளில்‌ மானிட மகள்‌ தமது மாட்‌ சிமிகு அரியணையில்‌ வீற்றிருப்பார்‌. அப்போது என்னைப்‌ பின்பற்றிய நீங்களும்‌ இஸ்ரயேல்‌ மக்களின்‌ பன்னிரு குலத்தவர்க்கும்‌ நவேர்களாய்‌ பன்னிரு அரியணைகளில்‌ வீற்றிருப்பபீர்கள்‌ என உறுதியாக உங்களுக்குச்‌ சொல்லுகிறேன்‌

எனவே, இப்பன்னிரு திருத்தூதர்களும்‌ வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல்‌ மக்களிடமே செல்ல (வச.6) பணிக்கப்‌ படுகின்றனர்‌. அலைக்கழிக்கப்பட்டு சேர்ந்து காணப்படும்‌ (வச 36) அவர்களுக்கு இயேசு போதித்ததுபோல (மத்‌ 4:17). விண்ணரசு நெருங்கி வந்து விட்டது (வச 7) என்று அறிவிக்கவும்‌, இயேசு செயல்படுத்திய நலமாக்கும்‌ பணியை (காண்‌ மத்‌ 8:1-9:38) இச்சீடர்களும்‌ செய்யவும்‌ (மத்‌ 10:8) பணிக்கப்படுகின்றனர்‌.

இன்றைய இறைச்‌ சமூகமும்‌, பொதுச்‌ சமூகமும்‌ பல நேரங்களில்‌ ஆயனில்லா ஆடுகளாய்‌ அலைக்கழிக்கப்பட்டு, சோர்ந்து காணப்படுகின்றன. இயேசுவின்‌ வழிநின்று நற்செய்தி அறிவிக்கவும்‌, நற்பணி ஆற்றவும்‌, தலைவர்கள்‌, ஆயர்கள்‌ அழைக்கப்படுகின்றனர்‌. பணிக்கப்படுகின்றனர்‌. இத்தகைய நல்ல தலைவர்கள்‌ நம்மிடையே உருவாகச்‌ செபிப்போம்‌.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம்‌ - பத்னொன்றாம்‌ ஞாயிறு முதல்‌ ஆண்டு
முதல் வாசகம் விப 19:2-6

இஸ்ரயேல்‌ மக்களை இறைவன்‌ தேர்ந்தெடுத்து, எகிப்து நாட்டின்‌ அடிமைத்‌ தனத்தினின்று அவர்களை விடுவித்து, அவர்களுடன்‌ உடன்படிக்கை செய்துகொண்டது என்ற மூன்று முக்கிய உண்மைகள்‌ விடுதலை பயணத்தில்‌ இடம்‌ பெறுகின்றன. சீனாய்‌ மலையில்‌ மோசே தலைமையில்‌ மக்கள்‌ பெற்ற இறையனுபவத்தின்‌ எதிரொலியை இன்றைய வாசகம்‌ குறிப்பிடுகிறது.
உடன்படிக்கை

இரு குழுக்களின்‌ சார்பில்‌, இரு தலைவர்களிடையே செய்யப்படும்‌ ஒப்பந்தமே உடன்படிக்கை. அச்சடங்கில்‌ பலிப்பொருளான ஆடோ அல்லது மாடோ இரு துண்டுகளாக வெட்டப்பட்டுத்‌ தரையில்‌ பரப்பப்படும்‌. அவற்றின்‌ இடையே இரு தலைவர்களும்‌ நடந்து செல்வர்‌. உடன்படிக்கையை மீறினால்‌ இவர்களும்‌ இப்பலிப்பொருள்போல்‌ இரண்டாகத்‌ துண்டிக்கப்படுவர்‌ என்ற உண்மையை உடன்படிக்கை உணர்த்தியது. இறைவனுடன்‌ ஒரு குழு செய்து கொள்ளும்‌ உடன்படிக்கையை மீறினால்‌, மக்கள்‌ தண்டிக்கப்படுவர்‌ என்பதை ஒவ்வொரு உடன்படிக்கையும்‌ மக்களுக்கு நினைவூட்டியது. உடன்படிக்கை செய்துகொள்ளும்‌ இறைவன்‌, பிரமாணிக்கம்‌ தவறாதவர்‌; தம்‌ வாக்கை மீறாதவர்‌ :

உதரத்திலிருந்தே உங்களைத்‌ தாங்குபவர்‌ நான்‌. கருவிலிருந்தே உங்களைச்‌ கமப்பவர்‌ நான்‌. உங்கள்‌ முதுமைவரைக்கும்‌ நான்‌ அப்படியே இருப்பேன்‌; நரை வயதுவரைக்கும்‌ நான்‌ உங்களைச்‌ சுமப்பேன்‌; உங்களை உருவாக்கிய நானே உங்களைத்‌ தாங்குவேன்‌: நானே உங்களைச்‌ சுமப்பேன்‌; நானே விடுவிப்பேன்‌ (சா. 46 : 3 - 4).

கழுகு தன்‌ கூட்டின்மேல்‌ அசைந்தாடித்‌ தன்‌ குஞ்சுகளின்மேல்‌ படர்ந்து அணைப்பது போலும்‌, தன்‌ சிறகுகளை விரித்து அவற்றைச்‌ சுமந்து செல்வது போலும்‌ அவற்றைத்‌ தன்‌ சிறகுகளில்‌ சுமப்பது போல்‌, ஆண்டவர்‌ ஒருவரே அவனை வழிநடத்தினார்‌ (இச. 32: 11. இறைவனது பிரமாணிக்கத்திற்குச்‌ சான்று கூறும்‌ வாக்குகள்‌ இவை,

இஸ்ரயேல்‌ இனம்‌ தான்‌ இறைவனுடன்‌ செய்து கொண்ட உடன்‌ படிக்கையை மீறியது. இறைவன்‌ அவர்களைத்‌ திருத்தும்‌ நோக்கத்துடன்‌ தண்டித்தார்‌. அவர்கள்‌ தம்‌ குற்றத்திற்காக வருந்திய பொழுது, தம்‌ உடன்படிக்கையை மீண்டும்‌ அவர்களுடன்‌ புதுப்பித்தார்‌. அவர்கள்‌ மனம்‌ மாறித்‌ தம்முடன்‌ வரும்வரை பொறுமையுடன்‌ காத்திருந்தார்‌.

சாத்தானை விட்டு விடுகிறேன்‌; அதன்‌ ஆரவாரங்களை விட்டுவிடு கிறேன்‌; பாவத்தை விட்டுவிடுகிறேன்‌ ' என்று திருமுழுக்கு வேளையில்‌ உறுதி கூறி, இயேசுவுக்கே நாம்‌ ஆளானோம்‌. இதுவே நாம்‌ செய்து கொண்ட உடன்படிக்கை... கல்வாரியில்‌ இயேசு கன்‌ இரத்தத்தால்‌ எழுதிய புதிய உடன்படிக்கையின்‌ விளைவு இது. எனினும்‌ எத்தனை பேர்‌, இதை மீறி இயேசுவை நிராகரிக்கின்றனர்‌. மக்கள்‌ தங்களுக்குள்‌ செய்து கொண்ட உடன்படிக்கையை மீறும்பொழுது நீதிமன்றத்தில்‌ தண்டிக்கப்‌ படுகின்றனர்‌. இறைவனுடன்‌ நாம்‌ செய்துகொள்ளும்‌ உடன்படிக்கையை மீறும்‌ பொழுது நாமும்‌ தண்டிக்கப்படுவோம்‌ என்பதை நினைவில்‌ கொள்ள வேண்டும்‌.
உடன்படிக்கையன்‌ பலன்‌

நீங்கள்‌ நமது வாக்கைக்‌ கேட்டு, நமது உடன்படிக்கையைக்‌ கைக்கொண்டு அனுசரித்தால்‌, எல்லா மக்களிலும்‌ நீங்களே நமது உடைமையாய்‌ இருப்பீர்கள்‌ (5). கிறிஸ்துவில்‌ திருமுழுக்குப்‌ பெற்ற அனைவரும்‌ அவரில்‌ ஓர்‌ உறுப்பினராக இணைந்துள்ளதால்‌, அவரது நிந்திய குருத்துவத்தில்‌ பங்கு பெறுகிறோம்‌. அனைத்திற்கும்‌ அரசராகிய அவருடன்‌ இணைந்துள்ளதால்‌ அரச குருத்துவ கூட்டமாகின்றோம்‌: இயேசு கிறிஸ்துவின்‌ வழியாய்க்‌ கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப்‌ படைக்கும்‌ தூய குருக்களின்‌ கூட்டமாகவும்‌ இருப்பீர்களாக! நீங்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்‌, அரச குருக்களின்‌ கூட்டத்தினர்‌, தூய மக்களினத்தினர்‌; அவாது உரிமைச்‌ சொத்தான மக்கள்‌ (1பேது. 2:5- 9). இறைவன்‌, நமது தகுதியை முன்னிட்டன்று, தமது நன்மைத்தனத்தால்‌, தாமே முன்வந்து நம்முடன்‌ செய்துகொண்ட உடன்படிக்கையைப்‌ பெரிதும்‌ மதிக்கின்றோமா? பிரமாணிக்கத்துடன்‌ நடந்து கொள்ளுகிறோமா?

நீங்கள்‌ அரச, குருக்களின்‌ கூட்டத்தினர்‌: தூய மக்கள்‌ இனத்தினர்‌.

சமுதாயம்‌ இறைவனுடன்‌ கொண்டிருந்த இணைப்பும்‌ பிணைப்பும்‌ முதற்‌ பாவத்தால்‌ முறிந்தது. முறிந்த உறவை ஒட்டவைத்து நம்மை இறைவனுடன்‌ இணைத்து, பகைவர்களாய்‌ இருந்த நம்மை மீண்டும்‌ பாசமுள்ள மக்களாக மாற்றவே கிறிஸ்து தன்னையே பலியாக்கினார்‌. இதன்‌ பயனாக நாம்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்களாகிறோம்‌ என்ற உண்மையை உணர்த்துவதே இன்றைய வாசகம்‌.
கடவுளின்‌ அன்பு

நாம்‌ இறைவனுக்கு அன்பு செய்யுமுன்‌, அவரே நமக்கு அன்பு செய்தார்‌. எனவே தான்‌ அவரே முதலில்‌ நமக்கு அன்பு செய்ததால்‌, நாமும்‌ அன்பு செய்வோமாக. என்கிறார்‌ யோவான்‌ (1:4 -19). அன்பே கடவுளின்‌ இலக்கணம்‌. இந்த அன்பு கிறிஸ்துவில்‌ வெளிப்படுகிறது. தம்‌ ஒரே மகன்‌ மீது நம்பிக்கைகொள்ளும்‌ எவரும்‌ அழியாமல்‌ நிலைவாழ்வு பெறும்‌ பொருட்டு அந்த மகனையே அளிக்கும்‌ அளவுக்குக்‌ கடவுள்‌ உலகின்மேல்‌ அன்பு கூர்ந்தார்‌ (யோ. 3 : 16). இந்த அன்பு கல்வாரியில்‌ முழுமை அடைகிறது. தன்‌ நண்பர்களுக்காக உயிரைக்‌ கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும்‌ இல்லை. நாட்டு நலனுக்காக, நண்பர்களின்‌ குடும்பத்திற்காக, தன்‌ சகோதரனுக்காக உயிரைக்‌ கொடுத்த உத்தமர்கள்‌ உலகில்‌ இருந்தனர்‌. பகைவர்களை மன்னிப்பவரும்‌ உள்ளனர்‌. ஆனால்‌ அனைவரும்‌ பாவத்தால்‌ பகைவர்களான போது, நமக்காகப்‌ பலியாகியவர்‌ கிறிஸ்து ஒருவரே. இவரது இரத்தத்தால்‌ தான்‌ நாம்‌ மீட்புப்‌ பெற்றுள்ளோம்‌.

தாமே துன்புற்றுப்‌ பகைமையை அழித்தார்‌. சிலுவையின்‌ வழியாக இரு இனத்தவரையும்‌ ஒருடலாக்கிக்‌ கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச்‌ செய்தார்‌ (எபே. 2 : 44 - 17), பாவத்தின்‌ தண்டனையினின்று தப்பவோ, இறையன்பைப்‌ பெறவோ நம்மிடம்‌ யாதொரு தகுதியும்‌ இல்லை. எனினும்‌ கிறிஸ்துவின்‌ இரத்தத்தினால்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி, அவர்‌ வழியாக இறுதித்‌ தண்டனைக்குத்‌ தப்பி மீட்புப்‌ பெறுவோம்‌ என்பதை உறுதியாக நம்பலாம்‌ (9). கிறிஸ்து நமக்காகக்‌ கொடுத்த விலை அவரது விலை மதிப்பற்ற இரத்தமேயாகும்‌ (காண்‌ 1 பேது. 1: 19). இரத்தம்‌ சிந்தாமல்‌ பாவமன்னிப்பு இல்லை (எபி. 9 : 22) வேறு எவருடைய இரத்தமும்‌ பாவத்தைப்‌ போக்கியதாக வரலாறு இல்லை. இறையன்பின்‌ நீளத்தையும்‌ அகலத்தையும்‌ ஆழத்தையும்‌, கிறிஸ்துவின்‌ மரணத்தில்‌ உய்த்துணர்ந்து இறைவனுக்கு அன்பு செலுத்துகின்றோமா?
கடவுளில்‌ பெருமைகொள்‌வோம்‌

நம்மை ஒன்றுமில்லாமையின்று உருவாக்கி, பாதுகாத்து, பாவப்‌ படுகுழியில்‌ விழுந்து பரிதவித்தபொழுது நம்மை மீட்ட இறைவனின்‌ கருணையை எண்ணி நாம்‌ பெருமையடைய வேண்டும்‌. எம்‌ கடவுளுக்கு நிகரான கடவுள்‌ இல்லையெனப்‌ பறை சாற்ற வேண்டும்‌. எலிசபெத்தம்மாள்‌ வீட்டில்‌, இறைவன்‌ தனக்குச்‌ செய்த எண்ணரிய நன்மைக்காக மரியா இறை புகழ்‌ பாடினாள்‌: ஆண்டவரை எனது உள்ளம்‌ போற்றிப்‌ பெருமைப்படுத்து கின்றது. என்‌ மீட்பராம்‌ கடவுளை நினைத்து எனது மனம்‌ பேருவகை கொள்கின்றது. ஏனெனில்‌ அவர்‌ தம்‌ அடிமையின்‌ தாழ்நிலையைக்‌ கண்ணோக்கினார்‌' (லூக்‌. 1 : 47). நாம்‌ வெறுமை; கயமை. இத்தகையோரைத்தான்‌ கிறிஸ்து வழியாகத்‌ தம்முடன்‌ இணைத்து, அவரில்‌ பெருமையடையச்‌ செய்கிறார்‌ இறைவன்‌. பவுல்‌ கொரிந்திய மக்களுக்குக்‌ கூறிய சொற்கள்‌ நமக்கு முற்றிலும்‌ பொருந்தும்‌. சகோதர சகோதரிகளே, நீங்கள்‌ அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப்‌ பாருங்கள்‌. மனிதக்‌ கணிப்பின்படி உங்களுள்‌ ஞானிகள்‌ எத்தனை பேர்‌? வலியோர்‌ எத்தனை பேர்‌? உயர்குடி மக்கள்‌ எத்தனை பேர்‌? ஆனால்‌ கடவுள்‌ ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம்‌ கருதுபவற்றைத்‌ தேர்ந்துகொண்டார்‌... உலகம்‌ ஒரு பொருட்டாகக்‌ கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக்‌ கருதுபவற்றையும்‌, இகழ்ந்து தள்ளுபவற்றையும்‌ கடவுள்‌ தேர்‌ ந்தெடுத்தார்‌... எவரும்‌ கடவுள்முன்‌ பெருமை பாராட்டாதபடி அவர்‌ இப்படிச்‌ செய்தார்‌... எனவே மறைநூலில்‌ எழுதியுள்ளவாறு, பெருமை பாராட்ட விரும்புகிறவர்‌ ஆண்டவரைக்‌ குறித்தே பெருமை பாராட்டட்டும்‌' (1 கொரி. 1 : 26 - 31).

நாம்‌ பாவிகளாக இருந்தபோது கிறஸ்து நமக்காகத்‌ நம்‌ உயிரைக்‌ கொடுத்தார்‌: இதனால்‌ கடவுள்‌ நம்மீது கொண்டுள்ள அன்பை எண்பிக்கிறார்‌.
நற்செய்தி மத்‌: 9:36,10:8

பொதுமக்களோடு நெருங்கிப்‌ பழகிய இயேசு அவர்களின்‌ அவல நிலை கண்டு மனமிரங்கினார்‌. ஆயனற்ற ஆடுகள்போல்‌ அவர்கள்‌ அவதியுறுவதைக்‌ கண்டு அவர்களை வழி நடத்திச்‌ செல்ல திருத்தூதர்களை நியமித்தார்‌. அவர்களது பணியைக்‌ கோடிட்டுக்‌ காட்டுகிறார்‌.
மனமிரங்கினார்‌

பார்வையற்றவனையும்‌ (மத்‌. 20 : 34) பேயினால்‌ பீடிக்கப்பட்டவனையும்‌ (மாற்‌. 9 : 22) இயேசு பரிதாபத்துடன்‌ பார்த்தார்‌. இறந்த லாசருக்காக அவரும்‌ மார்த்தாள்‌ மரியாவுடன்‌ அழுதார்‌. நயீன்‌ ஊர்க்‌ கைம்‌ பெண்ணின்‌ கண்ணீர்‌ கண்டு மனமிரங்கி 'அழாதே' என்று ஆறுதல்‌ கூறினார்‌ (லூக்‌. 7 : 13). பசியால்‌ மக்கள்‌ பட்டபாடு அவரது உள்ளத்தை உலுக்கியது (மத்‌. 15 : 32). தொழுநோயாளர்‌ மக்களால்‌ நிராகரிக்கப்பட்டு சமுதாயத்தினின்று விலக்கி வைக்கப்பட்டு. தனிமையில்‌ தவிப்பதைக்‌ கண்டு இயேசுவின்‌ இதயம்‌ அழுதது (மாற்‌. 1 : 41). ஆயனற்ற ஆடுகளாக மக்கள்‌ மனம்‌ தடுமாறியது இயேசுவின்‌ உள்ளத்தை உருக்கியது. மக்கள்‌ இறைவனுக்காக ஏங்கினர்‌. யூத குருக்களும்‌, பரிசேயர்களும்‌ சட்டத்தைக்‌ காட்டி அவர்களை மேலும்‌ குழப்பினர்‌. இறைவனை அறியவும்‌ அனுபவிக்கவும்‌ மதம்‌ அவர்களுக்கு வழி காட்டவில்லை. சமயத்‌ தலைவர்கள்‌, சமயத்தைப்‌ பெரும்‌ சுமையாக்கினர்‌. இப்பரிதாப நிலைகண்டு மனுமகன்‌ மனமிரங்கினார்‌. இளமைக்கு மகிழ்ச்சி தரும்‌ இறைவனிடம்‌ என்னை இட்டுச்‌ செல்லுகின்றதா சமயம்‌? இறைமகனிடம்‌ காணப்படும்‌ இரக்கப்‌ பெருக்கு, மற்றவர்‌ அவலநிலை கண்டு மனமிரங்கும்‌ இளகிய நெஞ்சம்‌ என்னிடம்‌ உண்டா?
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்‌

ஆயனற்ற ஆடுகளைப்போல அவலநிலையில்‌ உள்ள மக்களை வழிநடத்திச்‌ செல்ல ஞானிகளையும்‌, செல்வந்தர்களையும்‌ தேர்‌ ந்தெடுக்காது, சாதாரண செம்படவர்களையே தம்‌ திருத்தூதர்களாகத்‌ தேர்ந்துகொண்டார்‌. அவரது அழைப்பை ஏற்கும்படி அவர்களையோ நம்மையோ அவர்‌ கட்டாயப்படுத்துவதில்லை. நீ விரும்பினால்‌ என்னை பின்‌ தொடரலாம்‌ என்றுதான்‌ இன்றும்‌ கூறுகிறார்‌, அழைப்பை ஏற்று அதில்‌ நிலைத்து நிற்பவர்‌ தக்க பலனைப்‌ பெறுவர்‌ என்றும்‌ ஆண்டவர்‌ உறுதியளிக்கிறார்‌ (மத்‌. 19 : 29). குருவிடம்‌ என்றும்‌ பாடம்‌ பயின்று கொள்பவனே உண்மையான சீடன்‌. ஆண்டவரின்‌ திருத்தூதன்‌ என்றும்‌ அவருடன்‌ இருக்க வேண்டும்‌ (மாற்‌. 3 : 14); அவரைப்‌ போல்‌ ஆகவேண்டும்‌. அவருடன்‌ இணைந்திருந்தால்‌ தான்‌ அவரைப்போல செயல்புரிய முடியும்‌. கருவி உபயோகிப்பவனுடன்‌ இணைந்திருந்தால்‌ தான்‌, அவனது ஆற்றலைப்‌ பெறமுடியும்‌. எனவே இறையரசுப்‌ பணியில்‌ வெற்றியின்‌ இரகசியம்‌, இயேசுவுடன்‌ ஒன்றித்து வாழ்வதாகும்‌. எனவேதான்‌ என்னையன்றி உங்களால்‌ எதுவும்‌ செய்ய முடியாது என்றார்‌ இயேசு. இறையரசுப்‌ பணியில்‌ ஒரு சிறு கருவியாகிய நான்‌ இறை இயேசுவுடன்‌ இணைந்து செயல்புரிகின்றேனா?
போதனையும் சாதனையும்

விண்ணரசு நெருங்கி உள்ளதென அறிவியுங்கள்‌ என்றார்‌ இயேசு. இப்போதனையுடன்‌ சாதனையும்‌ இணைய வேண்டும்‌ என்று அதே இயேசு கூறுகிறார்‌. நோயாளிகளைக்‌ குணமாக்குங்கள்‌; இறந்தோரை உயிர்ப்பியுங்கள்‌; தொழுநோயாளரைக்‌ குணமாக்குங்கள்‌ ' (8) என்று தன்‌ பணியைத்‌ தொடரும்படி கட்டளை கொடுக்கிறார்‌. சீடர்கள்‌ கிறிஸ்துவின்‌ கரமாய்‌, நாவாய்‌, பாதங்களாய்‌ மாறிப்‌ பணி புரிய வேண்டும்‌. உடல்‌ நோயைப்‌ போக்கியபோது, அவர்களின்‌ உள்ளப்‌ பிணியையும்‌ குணமாக்கி மீட்பளித்தார்‌ இயேசு. போதனை தேவை; அத்துடன்‌ சமுதாய சேவையும்‌ தேவை. சமுதாயப்‌ பணியில்‌ ஒருவனது உடல்‌ நோயும்‌ - உள்ளப்பிணியும்‌ - நீக்கப்பட்டு முழு மனிதனும்‌ விடுதலை அடைந்தாக வேண்டும்‌. பிணியால்‌, பேயின்‌ தாக்குதலால்‌ பசிக்கொடுமையால்‌, இருளால்‌ அவதியுறும்‌ மக்களின்‌ வேதனை போக்க நான்‌ என்ன செய்கின்றேன்‌? இறையரசு என்னால்‌ வளர்கிறதா? அல்லது அதன்‌ வளர்ச்சிக்கு நான்‌ தடையாய்‌.உள்ளேனா?

அவர்‌ மக்கட்‌ கூட்டத்தைக்‌ கண்டு, அவர்கள்‌ ஆயனில்லாத ஆடுகள்‌ போலத்‌ தவித்துக்‌ கிடந்தமையால்‌ அவர்கள்‌ மேல்‌ மனமிரங்கினார்‌.
 
மறையுரை மெடடுக்கள் நன்றி வழிகாட்டும் தோழன்
 
 
 
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ