Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் ஆண்டவரின் ஆலயம்  

Plerinage des tamouls Lourdesஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
அன்பினாலே நம்மையே பலியாக்குவோம் - 2
        ஒன்றிணைந்து செல்லுவோம்
        ஒர் குலமாய் மாறுவோம்
        ஒன்றே தேவன் என்னும் உண்மை
        உலகம் காணச் செய்யுவோம்

1. இறைமகன் தன்னையே பலிப்பொருளாய் தந்திட
திருப்பலியில் பக்தியாய் பங்கு பெறச் செல்லுவோம் (2)
நமது இயேசு கரங்களில் நம்மை முற்றும் தந்திட 2
இறைவன் வாழும் இல்லமாய் ஆலயம் செல்லுவோம் - 2
ஒன்றிணைந்து

2. நமது பாவம் போக்கிட நோய்களும் நீக்கிட
தன்னையே தானமாய் தலைவன் இயேசு தந்தாரே (2)
அவரின் தியாகப் பாதையில் நம்மைப் பலியாய் தந்திட - 2
அனைவருமே வாருங்கள் அன்புடனே செல்லுவோம்.
ஒன்றிணைந்து

3. பிரிவினை பிணக்குகள் நமக்குள்ளே இலலையே
யேசுவின் தலைமையில் சங்கமம் ஆகுவோம். (2)
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தைப் போக்கியே - 2
பகைமையை மறந்து நாம் பாசத்தை பகிருவோம்
ஒன்றிணைந்து

4. விடியலின் வேள்விகள் படைத்து நாம் வாழவே
விடுதலை வாழ்வினை பகிர்ந்து கொண்டு வாழுவோம் (2)
சமத்துவ உறவினில் சங்கம் ஆகிட - 2
உரிமைகள் அடைந்திட உறவிலே வளருவோம்.
ஒன்றிணைந்து










 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்