tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   194) வருவோம் இறைவன்  



வருவோம் இறைவன் குரல் கேட்போம்
அவரின் சந்நிதியில்
இணைந்து வருவோம் கலந்து மகிழ்வோம்
புதிய உலகம் காணுவோம்

தாயின் வயிற்றில் தனக்கெனத் தெரிந்தார்
பேரைச் சொல்லி இன்று நம்மை அழைத்தார்
சிலுவைப்பலியை தினமும் நினைந்து
நெஞ்சக் கோவிலில் நாம் தாங்குவோம்
உள்ளங்கள் ஒன்றாகும் இந்நாளிலே
உறவுகள் மலர்ந்திடும் எந்நாளுமே
இறைவன் அரசை இங்கமைப்போம் - அவர்
சொல்வதெல்லாம் செய்யக் கூடிவருவோம்

அரச குருத்துவ திருக்குலம் நாமே
அவரின் சொந்தமாய் ஒன்றாகுவோமே
நம்மை இழப்போம் தந்து மகிழ்வோம்
உறவின் பாலம் நாமாகுவோம்
புனிதநாள் இன்று நாம் காணுவோம்
புதிய கீதங்கள் இசைத்திடுவோம்
நீதி உலகை நாம் படைப்போம் - அவர்
சொல்வதெல்லாம் செய்யக் கூடிவருவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்