Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   191) வருவாய் இன்று கிறீஸ்தவ குலமே  

வருவாய் இன்று கிறீஸ்தவ குலமே
கிறீஸ்து விடுத்த அழைபபினை ஏற்று – வருவாய்

வரிவேத நிறைவாம் வார்த்தை அளிக்கும்
விருந்தினை உண்ண விரைவாய் குலமே
உண்பவர் எல்லாம் ஓர் குலமாகி 2
உன்னத பலியை உவந்தே செலுத்த – வருவாய்

திருநீராட்டால் வந்தது உரிமை
திருப்பலிதனையே செலுத்தும் அருமை
கிறீஸ்துவை அறியா உலகுக்கு புதுமை
கிறீஸ்தவ குலமே உந்தன் பெருமை – வருவாய்

கிறீஸ்துவின் வழியில் வருவது குருவே
கீதங்கள் முழங்க நுழைவதும் அவரே
பாவங்கள் போக்கி பகைமையை நீக்கும்
மீட்பின் பலியை மீளவும் செலுத்த - வருவாய்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்