Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   948-ஒளிமிக்க ஆண்டவரின் திரு முன்னே  
ஒளிமிக்க ஆண்டவரின் திரு முன்னே
சூழ்ந்து நின்று நன்றி பாடுவோம் (2)
வாழ்கையின் அன்றாட நிகழ்சிகளில்
அவர் பிரசன்னமாவதை கண்டுணர்வோம்

செருக்குற்றோரை அவர் அழிக்கின்றார்
சிறுமையுற்றோரை அவர் உயர்த்துகின்றார்
அவரே தீர்ப்பளிக்கும் கடவுள் என்றார் – (2)
அவருக்கஞ்சுவோர் நீடு வாழ்வார்

பொருத்தனை செய்தே புகழ்ந்திடுவோம்
இதயத்தை அவர்க்கே தந்திடுவோம் (2)
ஏழை எளியவரில் வாழ்கின்றார் - 2
என்பதை என்றும் நாம் உணர்வோம்






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்