Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   946-ஒரு கோடி பாடல்கள்  


ஒரு கோடி பாடல்கள் நான் பாடுவேன் - அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன்
புகழ் பாடிப் புகழ் பாடி நான் வாழுவேன்

மணவீணை தனை இன்று நீ மீட்டினாய் -அதில்
மலர்ப்பாக்கள் பல கோடி உருவாக்கினாய்
என் வாழ்வும் ஒரு பாடல் இசைவேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை யேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை யேசுவே (2)

இளங்காலைப் பொழுதுந்தன் புகழ் பாடுதே – அங்கு
விரிகின்ற மலருந்தன் புகழ் பாடுதே
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து
கரை சேரும் நுரை யாவும் கருணை மனம்
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை யேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை யேசுவே (2)






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்