| திருவிருந்துப்பாடல்கள் | விருந்தாக வரும் எந்தன் |
|
விருந்தாக வரும் எந்தன் இறைவா – அரும் மருந்தாக என்னில் வந்து குணம் தா பெரும் பாரம் சுமப்போரே வாரும் – என்ற பரிவான குரல் கேட்டு வந்தேன் ஆசைகள் தேவைகள் ஆயிரம் கூப்பிட ஓடுகின்றேன் – என் ஆதரவெங்கே ஆறுதல் எங்கே தேடுகிறேன் பாலை நிலத்தில் வாடிய மாந்தர் பசியாற உணவூட்டி துயர்தீர்த்தவா நீ தரும் நிலையான உணவு – அதை உண்டாலே பல்வேறு பசிதாகம் போகும் ஆசைகள் தேவைகள் ஆயிரம் கூப்பிட ஓடுகின்றேன் – என் ஆதரவெங்கே ஆறுதல் எங்கே தேடுகிறேன் நோய் நொடியாலே வாடிய மாந்தர் பயம் போக்கி குணமாக்கி துயர் தீர்த்தவா உனைத்தொடும் நேரம் நற்கருணை – என் உடல் உள்ளம்தனை வாட்டும் பிணிபோக்க வா ஆசைகள் தேவைகள் ஆயிரம் கூப்பிட ஓடுகின்றேன் – என் ஆதரவெங்கே ஆறுதல் எங்கே தேடுகிறேன் |