Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் வானம் இருந்து வந்து  

வானகம் இருந்து வையகம் எழுந்து
எங்கள் இயேசுவே
நீர் வாரும் எங்கள் இதயக் கோவிலில்

வானம் இருந்து வந்து
வையம் எழுந்து வந்த
எங்கள் இனிய தெய்வம் இயேசுவே
கண்ணில் மகிழ்ச்சி பொங்க
நெஞ்சில் எழுச்சி பொங்க
உம்மை இதயம் தன்னில் ஏந்துவோம்
வாரும் வாரும் எங்கள் இயேசுவே
எங்கள் இதயம் என்னும் கோவிலில்

வாழ்வு தரும் வார்த்தையெல்லாம்
ஆண்டவர் உம்மிடமே உள்ளன
வல்லவர் நீர் தரும் உணவும்
அழியா உணவாய்த் திகழ்கின்றது
எம்மிலே நீ வரும் நேரமெல்லாம்
அது தேனினும் இனிதாய் இருக்கின்றது
ல…ல…ல…ல
எம்முடன் நீர் எழும் நேரமெல்லாம்
அது நிலமில்லா வானமாய் விடிகின்றது
உண்மை ஒளியே உணவே உயிரே எழுந்திடுவாய்
அன்பே அருளே என்னில் நீயும் கலந்திருவாய்

அப்பமதை கரமெடுத்து இது என் திருவுடல் என மொழிந்தீர்
திராட்சை ரசம் கரமேந்தி இது என் திருரத்தம் என மொழிந்தீர்
உம்முடல் உண்ணும் நாங்களெல்லாம்
தினம் எம்முடல் உமக்காய் இழக்க வேண்டும்
ல…ல…ல…ல
உம் இரத்தம் பருகும் நாங்களெல்லாம்
தினம் எம் இரத்தம் பிறர்க்காய் சிந்த வேண்டும்
உண்மை ஒளியே உணவே உயிரே எழுந்திடுவாய்
அன்பே அருளே என்னில் நீயும் கலந்திருவாய்












 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்