திருவிருந்துப்பாடல்கள் | வானக உணவே வாழ்ந்திடும் இறையே |
வானக உணவே வாழ்ந்திடும் இறையே வசந்தமே வாருமே உண்மையின் உருவே உன்னத திருவே உளமதில் வாழுமே பலியும் நீர்தானே.... பகிர்வும் நீர்தானே.... பணிவும் நீர்தானே...... பலமும் நீர்தானே.... நன்மை வரும் என்றே நினைத்து உண்டு வந்தோம் என்னில் வாரும் என்றீர் எங்கள் நல் ஆயனே தாகம் எழும் ஆத்துமம் மீட்கும் தாயின் குணம் கண்டோம் உம் மீதிலே சிலுவைப் பலியினிலே முழுமனதும் இணைந்திடவே சிறசின் நிழலினிலே எமை முழுதும் அணைப்பவளே உம்மை வழி என்றீர் உலகின் ஒளி என்றீர் உண்மை உயிர் என்றீர் உள்ளம் உம் கோவிலே தேடும் மனம் மாற்றங்கள்தான் காண தேகம் தனை தந்தீர் எம் தேவனே உருகும் மனங்களிலே உமை உணரும் திறன் வருமே உதவும் கரங்களிலே இறை உருவம் தெரிந்திடுமே |