திருவிருந்துப்பாடல்கள் | வானகத் திருவிருந்து |
வானகத் திருவிருந்து - இது வாழ்வின் அருமருந்து ஆவலாய் அழைக்குது சுவைத்திட இனிக்குது புத்துயிர் தருகிறது - என் வாழ்வில் புதுமை பிறக்கிறது தனிமை வாட்டும்போது துணையாய் வருவது துயரம் தாக்கும்போது உறுதி தருவது ஏழை என்றபோதும் ஏற்கும் உறவிது பாவி என்ற போதும் பகிரும் விருந்திது இனிது இது இனிது இதன் இனிமை புதியது உடலும் உயிரும் தந்து உறவாய் வந்தது அன்பும் அருளுத் தந்து அருகில் இருப்பது வாழும் காலம் யாவும் நம்மில் இருப்பது வாழ்வு பிரிந்தபோதும் வானகம் சேர்ப்பது இனிது இது இனிது இதன் இனிமை புதியது |