Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   728-இறைவா எழுந்தருள்வாய்  


இறைவா எழுந்தருள்வாய் - எந்தன்
இதயத்தில் வந்தருள்வாய்
கறைகளைக் கழுவிடுவாய் - உந்தன்
இதயம் போல் மாற்றிடுவாய்

உலகினைப் படைத்து உயிரினைக் காத்கும் - இறைவா….
அலகையை அழித்து அமைதியைத் தந்த - இறைவா….
எந்தனின் உள்ளம் அமைதியைக் கண்டிட - இறைவா….
உந்தனின் அமைதியை உலகம் கொண்டிட - இறைவா….

நொறுங்கிய உள்ளம் மலர்ந்திட கனிந்திட - இறைவா….
குறுகிய மனமும் பரந்திட விரிந்திட - இறைவா….
பொய்மையும் பகைமையும் ஒழிந்திட மறைந்திட - இறைவா….
வாய்மையும் அன்பும் வளர்ந்திட வாழ்ந்திட - இறைவா….

பாஸ்கா உணவை உண்டிட வந்தேன் - இறைவா….
பலியுணர்வோடு பலிப்பொருளானேன் - இறைவா….
இறைகுலத்தோடு இணைந்தே வந்தேன் - இறைவா….
மறையுண்மைக்காக சாட்சியாய் வாழ்வேன் - இறைவா….


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்