Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   689-ஆண்டவரின் திருவிருந்து  


ஆண்டவரின் திருவிருந்து புனிதமானது – அதை
உணர்ந்து பகிர்ந்து வாழ்வதில் தான் அர்த்தம் உள்ளது (2)
அன்பு நீதி சமத்துவத்தில் நிலைத்திடும் போது – (2)
இறைவன் ஆசி நம்மிடையே இனிதே மலரும்

ஆண்டவர் ஆசி வழங்கி நம்மைக் காப்பார் (2)
அன்பு முகம் காட்டி நமக்கு இரக்கம் தருவார்
ஆண்டவர் திருவுளம் நம் இதயத்தை நோக்கி – (2)
அமைதியில் வாழ்ந்திடவே அருளச் செய்வார் – (2)

வானகத் தந்தை பரிவு பொழிவது போல (2)
பிறரில் இரக்கம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்
இருக்கும் உடமைகளைப் பிறரிடம் பகிர்ந்து – (2)
இறைவன் திருவடியில் செல்வத்தைச் சேர்ப்போம் - (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்