காணிக்கைப்பாடல்கள் | உன்னில் என்னை இழந்தால் |
உன்னில் என்னை இழந்தால் நான் பலம் பெறுவேன் (2) விதையாக நானும் நிலமாக நீயும் (2) இணைந்தால் நான் விருச்சமாவேன் (2) உன்னில் என்னை இழந்தால் நான் பலம் பெறுவேன் (2) கோதுமை மணிகள் மண்ணிலே மடிந்தால் பலமடங்காக பலன் கொடுக்கும் எனக்காய் உமது உயிரை இழந்தால் என்னையே உம்மிடம் தருகின்றேன் (2) உன்னில் என்னை இழந்தால் நான் பலம் பெறுவேன் (2) விதையாக நானும் நிலமாக நீயும் இணைந்தால் நான் விருச்சமாவேன் ஆதாயம் எனக்கு அகிலமே எனிலும் ஆன்மாவை இழந்தால் பயனில்லை எனது சிந்தனை சொல் செயல் எல்லாம் இறைவா உம்மிடம் தருகின்றேன் (2) உன்னில் என்னை இழந்தால் நான் பலம் பெறுவேன் (2) விதையாக நானும் நிலமாக நீயும் (2) இணைந்தால் நான் விருச்சமாவேன் (2) உன்னில் என்னை இழந்தால் நான் பலம் பெறுவேன் (2) |