Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

காணிக்கைப்பாடல்கள் நான் தரும் காணிக்கை  


நான் தரும் காணிக்கை ஏற்றிடுவாயோ
இறைவா வரமாய் மாற்றிடுவாயோ -2
நீயோ எல்லாம் படைத்ததன்றோ
எல்லாம் உமக்கே சொந்தமன்றோ

சரணம் - 1
நிலத்தின் பலனும் மாந்தரின் உழைப்பும்
உமக்காய் அப்பமாய் கொண்டு வந்தோம்
வாழ்வின் சுமையும் அனுதின வலியும்
உம் பதம் சேர்த்திட இறைஞ்சுகின்றோம்
அப்பம் உணவாய் தருவதுப் போல
சுமைகளை சுகமாய் மாற்றிடுவாயோ
தருகிறோம் இன்று ஒன்றாய் நின்று
கனிவுடன் அருள்வாயோ
ஏற்பாயோ இறைவா பலியில்...


சரணம் - 2
அருளின் கொடையும் எந்தன் வேர்வையும்
உமக்காய் இரசமாய் கொண்டுவந்தோம்
வெற்றியும் தோல்வியும் நிறைகளும் குறைகளும்
யாம் தரும் வாழ்வின் காணிக்கையே
கனிரசம் குருதியாய் தருவதுபோல
குறைகளை நிறைவாக மாற்றிடுவாயே
வருகிறோம் இணைந்து நீயாய் மாற
நிறைவுடன் ஏற்பாயோ -2
இணைப்பாயோ... இறைவா பணியில்.

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்