Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  658-மல்லிகைப் பூக்களை  


மல்லிகைப் பூக்களை மெல்லிய பாதத்தில்
நான் படைத்தேன் (2)
வானமும் பூமியும் படைத்த என் தேவனின்
அடி தொழுதேன் ஆ..ஆ....ஆ...

கோதுமை அப்ப ரசத்துடனே
என்னையும் தந்தேன் ஏற்பாயே
என்னுடன் நீயும் தங்கிடுமோர்
ஆலயமாகச் செய்வாயே
தன்னலம் மறந்திட – பிறர் நலம் வளர்ந்திட (2)
உண்மைகள் மண்ணில் மலர்ந்திட - என்
உள்ளத்தைத் தருவேன் அருள்வாயே
மகிழ்வோடு அருள்வாயே

உழைப்பின் கனிகள் உவந்தளித்தேன்
உன்னத வாழ்வில் நிலைத்திடவே (2)
படைப்பின் இறைவா பதம் பணிந்தேன்
பலிதனில் நாளும் இணைந்திடவே
நறுமணத் தூபம் போல் -- இதயத்தை உயர்த்தினேன் (2)
இனி வரும் எந்நாளுமே
யேசுவின் அருளால் வளர்ந்திடுவேன்
நலமோடு வாழ்ந்திடுவேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்