Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  526-இதயநன்றி காணிக்கை  


இதயநன்றி காணிக்கை
இரக்கம் தந்த பலியிலே
இயேசுவோடு இணைந்து தருகின்றேன் - தந்தையே
ஏற்று உந்தன் ஆசீர் அருளுமே

தந்தை உன்னைப் பிரிந்து
தாழ்ந்து நொந்து போனேன்
கன்றைப் பிரிந்த மான்போல
தவிதவித்தாயே – என்னைத்
தேடிவந்து சிறுமையுற்று
சிறை மீட்ட கருணையே
இதயநன்றி காணிக்கை இறைவா

என்னைக் கொள்ளை கொண்ட
உந்தன் அன்பில் வாழ்வேன்
எண்ணி எண்ணி உருகி
எல்லோர்க்கும் சொல்வேன் -உந்தன்
தியாகத்தினால் நெஞ்சங்களை
ஏற்றுக் கொண்ட கருணையே
இதயநன்றி காணிக்கை இறைவா



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்