திருப்பாடல்கள் | என் தலைவரே! தலைமுறைதோறும் |
திருப்பாடல் 90 என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம். மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள் என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; |