திருப்பாடல்கள் | அனைத்துலகோரே கடவுளைப் போற்றி |
திருப்பாடல் 66 அனைத்துலகோரே கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள் (2) அனைத்துலகோரே கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள் அவரது பெயரின் மாட்சியை புகழ்ந்து பாடுங்கள் அவரது புகழை மேன்மைப் படுத்துங்கள் (2) கடவுளை நோக்கி உம் செயல்கள் அஞ்சத்தக்கவை என்று சொல்லுங்கள் அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர் பணிந்திடுவர் அவர்கள் உம் புகழ் பாடிடுவர் பாடிடுவர் வாரீர் கடவுளின் செயல்களைப் பாரீர் (2) மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்குரியவையே |