தியானப் பாடல்கள் | உன் நாமம் பாடாத |
உன் நாமம் பாடாத நாளில்லையே நீயில்லா என் வாழ்வில் நிறைவில்லையே 2 உன்னன்பையே நான் பாடுவேன் உனக்காகவே இனி வாழுவேன் - 2 பொருளில்லா என் வாழ்வு சுமையானதே நிலையில்லா சொந்தங்கள் பறந்தோடுதே - 2 எனைத் தேடும் உன்னன்பு நிலையானதே - 2 உயிராக உடலாக உருவானதே 2 நினைத்தாலும் மறந்தாலும் எனைத் தாங்கினாய் நிழலாக என் பின்னே துணையாகினாய் 2 உனை மீட்டும் நரம்பாக எனை மாற்றினாய் - 2 உன் பாதை விலகாமல் எனைத் தேற்றினாய் |