தியானப் பாடல்கள் | நிலமாவோம் நிலமாவோம் |
நிலமாவோம் நிலமாவோம் விதைகளை ஏற்கும் நிலமாவோம் களமாவோம் களமாவோம் விளைச்சலை நல்கும் களமாவோம் உடைபட்ட நிலமே விதை ஏற்கும் உடைபட்ட மனமே இறை ஏற்கும் விதைக்கும் விதைகளில் மாற்றமில்லை விதைப்பவன் கரத்திலும் பேதமில்லை விலங்களை விதைகள் வெறுப்பதில்லை விதைத்திட இறைவனும் மறுப்பதில்லை பண்பட்ட நிலமே பலன் கொடுக்கும் வேர்கள் நுழைய இடம் கொடுக்கும் கிளை விட்ட செடியே கனி கொடுக்கும் இறைவனின் மனதில் இடம் பிடிக்கும் விதைக்கும் விதைகளில் மாற்றமில்லை விதைப்பவன் கரத்திலும் பேதமில்லை முள்ளிடை விதைகள் வளர்வதில்லை நன்னில விதைகள் அழிவதில்லை வார்த்தையைக் கேட்பதால் மாற்றமில்லை செயல்பட மறுத்தால் ஏற்றமில்லை இறைவனின் வார்த்தையை ஏற்றிடுவோம் வளர்ந்திட இதயத்தை மாற்றிடுவோம் |