Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு  

எரிகின்ற தீபமாய் எதிர்நோக்கு ஒளிர்கின்றது – இறைவா
எம் பாடல் உமை நோக்கி மகிழ்வாக எழுகின்றது.

அனுபல்லவி:
என்றென்றும் குறையாத உயிரூற்று நீரல்லவா – தலைவா
எம்வாழ்வில் யாமெல்லாம் உம்பாதம் சரணல்லவா!
எல்லோரும் (கோரஸ்):
வரலாற்று நாயகனே, வரும்வாழ்வும் வகுப்பவனே
நிறைவாக உன்பாதம் பணிகின்றோம்
இத்தனை ஆண்டுகளாய் பெற்றஉம் அன்பினையே
நித்தம் எம் வாழ்வாலே பாடிடுவோம்!
– பல்லவி


நாடுகள், மொழிகள், மக்கள் இனங்களுக்கே – ஒளியாய்த்
தேடிடும் உம்வாக்கு உடன்பிறப் பாகினாரே.
தன்பலம் இழந்து சிதறுண்ட மாந்தருக்கு
உம்மகன்தான் தங்கும் வீடாகினார்!
(வரலாற்று நாயகனே)


எத்தனை பரிவுமக்கு எத்தனை பொறுமை கண்டோம் - இறைவா!
அத்தனை மாந்தரையும் கரையேற்றும் அருள்கண்டோம்.
விண்ணுலகும் மண்ணுலகும் மறுஆக்கம் அடைந்திடுமே – தலைவா
விடுதலை வழங்குகின்ற ஆவியின் பொழிதலினால்
(வரலாற்று நாயகனே)


உம்பார்வை பூமியின்மேல் விழுந்தது மீட்பதற்கே – தந்தாய்
எம்கடவுள் எங்கள் காலத்துள்ளே பிறந்தாரே!
உமக்காய் எமக்காய் மனிதனானாரே
உமை அடைந்திட எம் வழியானாரே!
(வரலாற்று நாயகனே)






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்