Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  462-வார்த்தையிது  


வார்த்தையிது - இறை வார்த்தையிது
மாறாதது என்றும் மறையாதது
ஒளி தரும் வார்த்தையிது – அருள்
பொழிந்திடும் வார்த்தையிது

அமைதியின் வார்த்தை ஆக்கத்தின் வார்த்தை
இரக்கத்தின் வார்த்தை ஈகையின் வார்த்தை
உண்மையின் வார்த்தை ஊக்கத்தின் வார்த்தை – (2)
எங்கும் எதிலும் நிறைந்த நல் வார்த்தை
என்றும் நம்மைக் காத்திடும் வார்த்தை

மகிழ்ச்சியின் வார்த்தை வெற்றியின் வார்த்தை
உயிருள்ள வார்த்தை உதவிடும் வார்த்தை
ஆவியின் வார்த்தை ஆற்றிடும் வார்த்தை – (2)
ஆற்றல் மிகுந்த ஆண்டவர் வார்த்தை
உயிர்கள் எல்லாம் தொழுதிடும் வார்த்தை



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்