Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  403-சொன்னாலும் புரியாதது  



சொன்னாலும் புரியாதது – அன்பு
சொல்லாமல் சொல்லவும் முடியாதது
இல்லாததும் பொல்லாததும் அல்ல
எல்லோர்க்கும் தேவையது

மாறாத அன்பு மாசில்லாத அன்பு
பிறர் வாழ வாழ்வது மன்னர் இயேசு தந்தது
கள்ளமற்றது உள்ளத்தில் அது உருவாவது
தியாகம் செய்வது தயாளம் உள்ளது
தேவன் தந்தது - அன்பு

நாடாது தன்னலம் நிலையான அன்புள்ளம்
தானாகக் கிடைக்காது யேசு ராஜன் தந்தது
பொறுமையுள்ளது பொறாமைகொள்ளாது அழியாதது
சாந்தம் உள்ளது கோபம் கொள்ளாது
அன்பு என்பது - அன்பு




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்