Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  250-இயேசு இயேசு  

இயேசு இயேசு என்றழைத்து
பேசு பேசு உன் கதையை – உந்தன்
குரலைக்கேட்டு உன்னை மீட்டு
வானகம் சேர்க்கும் தேவனவர்

வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஒளியாய்
வந்தார் மாபரன் யேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு கல்வாரி சிகரமதில்

பாவிகள்தம்மை மீட்கவே உலகில்
ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்து – நம்மை
வேதனையில் வெற்றி பெறச்செய்தார் கல்வாரி சிகரமதில்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்