Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் நினைவெல்லாம் நீதானே  

நினைவெல்லாம் நீதானே என் இறைவா
நிலையான உறவாய் நீ எனில் வா வா -2
தகுதியில்லாத அடியேன் உள்ளம்
வருவதன் காரணம் என்னவோ
அன்பின் முழுமை நீர் அல்லவோ

கண்டேன் கண்டேன் கண்டேன்
என்னில் உம்மை கண்டேன்
காண்பேன் காண்பேன் காண்பேன்
பிறரிலும் உம்மை காண்பேன்....-2

1 காலம் கடந்து உம்மை நான் அறிந்தேன்
கரைகாணா கலமாய் நான் திரிந்தேன்-2
தேடி வந்த தெய்வம் நீயே
வீதியில் நின்ற என்னையே
புத்தாடை கொண்டு போர்த்தினீர்
தலையில் நறுமண தைலம் பூசி
எனக்கொரு விருந்தினை அளித்தீரே
அப்பாவை உன்னில் கண்டேனே....
கண்டேன் கண்டேன் கண்டேன்...-2
என்னில் உம்மை கண்டேன்
காண்பேன் காண்பேன் காண்பேன்
பிறரிலும் உம்மை காண்பேன்....-2


2 கடவுள் வடிவினில் விளங்கிய நீர்
அடிமையின் கோலம் அதை ஏற்றீர்-2
வானின்று வந்த தெய்வம்
திரு உணவாய் உடைந்தீரே
திரு இரத்தமாய் வடிந்தீரே
நிலைவாழ்வு அளிக்கின்ற
விண்ணக விருந்தாய் நிலைத்தீரே
அப்பாவை உன்னில் கண்டேனே....
கண்டேன் கண்டேன் கண்டேன்...-2
என்னில் உம்மை கண்டேன்
காண்பேன் காண்பேன் காண்பேன்
பிறரிலும் உம்மை காண்பேன்....-2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்