tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறந்தோருக்காக வேண்டுதல்
   

இறந்தோர் 1வருடத் திருப்பலி
முன்னுரை

�உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் நம்பிக்கை கொள்பவன், இறப்பினும் வாழ்வான்�
இறை இயேசுவில் அன்புமிக்க சகோதரர்களே! எம்மோடு அன்பாக வாழ்ந்த உறவொன்று, தனது இவ்வுலக வாழ்வின் பயணத்தை முடித்துக் கொண்டு, விண்ணுலகம் நோக்கிச் சென்று ஒரு வருடமாகின்றது. இந்த உறவை வழியனுப்பி வைக்க நாமெல்லாம், பெருந்துயரோடு ஒன்று கூடி செபித்து நின்றோம். இன்றும் அவர் வானுலகையடையும்படி மன்றாட வந்திருக்கும் உங்கள் எல்லோரையும் வரவேற்று நிற்கின்றோம்.

பிறப்பும் இறப்பும் இறைவனின் சித்தமே. அவரது சித்தப்படி பிறந்த நாம், என்றோ ஒரு நாள், எந்நிலையிலிருந்தாலும் சென்றே ஆகவேண்டும் என்பது உண்மையே. நல்லவனுக்கு கூடிய காலம், கெட்டவனுக்கு குறுகிய காலம் என்பது இறைவனின் எண்ணம் அல்ல. அவர் எப்ப விரும்புகிறாரோ, விரும்புகிறவரை அழைத்தே தீருவார். அதனால் தான் நாம் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இவ்வுலகில் வாழும் வரை, நாம் நல் வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இந்த நல்வாழ்வால், நமக்கு நிலை வாழ்வு உண்டு என்பதை உணர்ந்து கொள்வோமாக. தன் மரணத்துக்கு முன், திருந்திய உள்ளத்தோடு, ஆண்டவர் இயேசுவிடம், தன்னை நினைவுகூரும்படி கேட்டுக் கொண்ட நல்ல கள்வனுக்கு, அன்றே வான் வீட்டில் இடம் கிடைத்தது. இதை உணர்ந்தவர்களாக , வாழும் வரை அனைவரையும் அன்பு செய்து, பாவநிலையற்று திருந்திய உள்ளத்தோராய் வாழ்வோம்.

தொடர்ந்து இத் திருப்பலியில் இறந்த  (பெயர்) காகவும் எமக்காகவும் செபித்து நிற்கும் குருவானவருக்காக நன்றி கூறுவோம், அத்தோடு இன்று இவ்வுலக வாழ்வின் பயணத்தை முடித்துக் கொண்ட (பெயர்) அடியார் இவ்வுலகில் செய்த நன்மைத்தனத்தை நாமும் பின்பற்றி, அவரது ஆன்மா நிலைவாழ்வு பெற வேண்டி அவருக்காக மன்றாடுவோம்.



மன்றாட்டு

1) அன்பின் இறைவா!
இவ்வுலக வாழ்வை எங்களோடு சேர்ந்து வாழ்ந்து இன்று எங்களைவிட்டுப் பிரிந்துபோன உம் அடியார்  (பெயர்) பாவங்களையும், குறைகளையும் கருத்தில் கொள்ளாமல் உமது இரக்கப்பெருக்கத்தால் முழுமையான மன்னிப்பும், விண்ணகத்தில் நிறைவான பேரின்பமும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) அழைக்கும் தெய்வமே இறைவா!
சுமைசுமந்து சோர்ந்திருப்பவர்களே! எல்லோரும் என்னிடம் வாருங்கள் என்று உம் திருமகன் கூறிய அழைப்பை ஏற்று, தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திட அடியார் அன்ரனுக்கு அருள் புரிந்தீர். தம் வாழ்வின் கடைசி அழைப்பை ஏற்று விண்ணக சீயோனை நோக்கி பயணம் செய்த இவருக்கு, உமது நிறைவான பேரின்பத்தில் பங்களித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3) உறவை வளர்க்கும் இறைவா!
இவ்வுலகிலே பிரிவு என்பது ஒரு தாங்க முடியாத இழப்பாக இருக்கின்றது. இறந்துபோன எம் சகோதரனுடைய பிரிவால் வாடும் அவருடைய மனைவி, சகோதரர், உற்றார் உறவினரையும், நீரே அரவணைத்து ஆறுதல் அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) எங்கள் உயிர்ப்பும் உயிருமான இறைவா!
இறந்தாலும் ஒருநாள் உயிர்ப்போம் என்ற நம்பிக்கையில் தளராத விசுவாசம் கொண்டு, இவ்வுலகிலே வாழ்ந்து உம்மை வந்தடைந்துள்ள உம் அடியாருக்கும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்கும், இறைபணியாளர்கள், உம் விசுவாசிகள் அனைவருக்கும் விண்ணகப் பிறப்பிலே பங்களித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


ரஞ்சிதம் யேம்ஸ் - Paris

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா