உண்மையின் தத்துவமே இறை வாசகம் அதில் உன்னதமானது வேதாகமம்-2 அதனுள் ஆகமங்கள் அதில் அதிகாரங்கள் அற்புதர் அதிசயத்தை அறிந்திட வசனங்கள் 1. ஆதியாகமம் பழைய ஏற்பாட்டிற்கு அது ஆரம்பம் - யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம். எழுந்தது உபாகமம் - சிந்தனை தூண்டிடும் யோசுவாவின் புஸ்தகம் நீதிக்கு நியாயாதிபதிகளின் தத்துவம் -2 உள்ளதை சொல்லிடும் உண்மையான இலக்கியம் ரூத், சாமுவேல், ராஜாக்களின் பாக்கியம் 2. நாளாகமம், நன்னெறிகளை விளக்கிடும் நல் ஆகமம் எஸ்றா நெகேமியா, எஸ்தர், யோபுவின் அனுபவ சரித்திரம் படித்திடப் பாடலாகும் தாவீதின் சங்கீதம் நடந்திட நமக்குத் தரும் நீதிமொழிகள் சந்தோஷம் பிரசங்கி சொல்லிடும் நல் வழி கேட்டு சாலொமோன் பாடினது உன்னதப்பாட்டு 3. ஏசாயா என்றும் மகிமைகள் பல சொல்லும் எரேமியா எரேமியாவின் புலம்பல், எசேக்கியேல் தானியேல், ஓசியா யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா மீகா. நாகூம், ஆபகூக், செப்பனியா ஆகாய் அனுபவத்தில் சாட்சியே சகரியா பழைய ஏற்பாட்டின் முடிவே மல்கியா 4. மத்தேயு சொல்லுடன் புறப்பட்டதே புதிய ஏற்பாடு-மாற்கு, லூக்கா, யோவான் நல்வழிகள் அப்போஸ்தலர் நடபடிகள் ரோமர், கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர் பிலிப்பியர், கொலோசேயர். தெசலோனிகேயர், தீமோத்தேயு. தீத்து, பிலேமோனும் மேய்ப்பரின் வழிதனிலே வாழ்ந்திட்ட எபிரேயர் 5. யாக்கோபு புனிதரின் புதுமைகள் பல சொல்லும் பேதுரு யோவான், யூதா, முடிவில் வெளிப்படுத்தின நல்ல விசேஷமே பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இயேசுவின் வருகையை பதித்திடும் ஆதாரம் உணர்ந்திடும் உள்ளங்களில் ஆத்தும அபிஷேகம் - உம் புகழ் பாடி நான் செய்திடுவேன் சுவிசேஷம் |