Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(48) மக்கபேயர் 11

1) மக்கபேயர் என்னும் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
    கிரேக்கமொழியில்.

2) இந்நூல் யாருக்காக எழுதப்பட்டது?
    எகிப்து வாழ்
யூதர்களுக்காக.

3) ஆண்டவரின் இல்லம் அழிக்கப்பட்டபோது கூடாரத்தையும் பேழையையும்
    காப்பாற்றியது யார்?

    எரேமியா. (2:5)

4) எலியதோர் என்பவர் யார்?
    ஆசிய மன்னன் செலுத்குவின் கண்காணிப்பாளன்.

5) எலியதோர் ஜெருசலேமுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் என்ன?
    (3:4-6)

6) கோவிலில் எவ்வளவு பணம் இருந்தது?
    16டன் வெள்ளியும் 8 டன் பொன்னும். (3:11)

7) கோவிலில் இருந்த இந்த நிதி யாருக்காக வைக்கப்பட்டிருந்தது?
     கைம் பெண்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் (3:10)

8) எலியதோர் கோவிலுக்குள் நுழைந்தாரா?
    ஆம். (3:14)

9) எலியதோருக்கு நேர்ந்தது என்ன?
   அச்சுறுத்தும் தோற்றமுடைய ஒரு குதிரை வீரன் குதிரை மேல் வந்து 
   எலியதோரை சீற்றத்தோடு பாய்ந்து குதிரையின் முன்னங் குளம்புகளால்
   அவரைத் தாக்கினான். மேலும் இரு இளைஞர்கள் அவரை சாட்டையால்
   அடித்துத் தரையில் தள்ளினார்கள். (3:25)

10) எலியதோர் மனம் மாறினாரா?
     ஆம் தலைமைக்குருவோடு சமாதானம் செய்ததோடு, ஆண்டவருக்கு பலியும் 
     செலுத்தினார். (3:35)

11) எலயாசர் என்பவர் யார்?
    வயது முதிர்ந்த ஏறக்குறைய 90 வயது நிறைந்த தலை சிறந்த மறைநூல்
   அறிஞர். (6:18)

12) எலயாசர் கொலை செய்யப்பட்டது ஏன்?
      இவர் பண்டி இறைச்சியை உண்ண மறுத்ததால். (6:24)

13) ஏழு சகோதரர்களும் அவருடைய தாயும் சாகடிக்கப்பட்டது ஏன்?
     ஒடுக்கப்பட்ட உணவை உண்டு தங்களுடைய மூதாதையர்களின் சட்டங்களை
     மீற சம்மதிக்காததால். (7:2)

14) கோர்கியாவோடு நடந்த போரில் ஆனது என்ன?
       யூதர்களும் சிலர் கொலை செய்யப்பட்டார்கள்.(12:32)

15)  போரில் இறந்த படை வீரர்களுக்காக, யூதா என்ன செய்தார்?
       யூதா பணம் திரட்டி 6கிலோ வெள்ளி சேகரித்து, பாவம் போக்கும் பலி 
       ஒப்புக்கொடுக்கும்படி, எருசலேமுக்கு அனுப்பிவைத்தார். (12:43)

16) யூதாவின் இச் செயலில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?
      மரித்தோர்க்காக ஜெபிப்பது நல்லது. (12:43)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்