tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(26) யூதா எழுதிய திருமுகம்

உள்ளடக்கம்;

போலிப் போதகர்கள் பற்றிப் பேசும் திருமுக ஆசிரியர், அவர்களுக்குக் கடவுளின் தண்டனை வரப் போகிறது என்கிறார்; யூத மரபின் அடிப்படையில் இதை விளக்குகிறார் (1-16). தம் வாசகர்கள் திருத்துhதர்களின் போதனைகளை உண்மையாய்க் கடைப்பிடிக்குமாறு ஆசிரியர் அறிவுரை கூறுகிறார்; அத்துடன் கிறிஸ்தவ அன்பின் கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றவும் பணிக்கிறார் (17-23).

1. யூதா இத் திருமுகத்தை யாருக்காக எழுதுகிறார்?
     யூதக் கிறிஸ்தவர்களுக்காக

2. யூதா இத்திருமுகத்தை எப்பொழுது எழுதினார்?
     கி.பி 70க்கும் கி.பி. 80க்கும் இடைப்பட்ட காலத்தில்

3. ஏனோக்கு நூலில் எடுக்கப்பட்ட வசனங்கள் யாவை?
    13,14,15 ஆகிய வசனங்கள்.

4. இத்திருமுகத்தின் நோக்கம் என்ன?
   போலிப் போதகர்களின் தவறான போதனைகளில் இருந்து வாசகர்களை
    காத்துக்  கொள்வதற்காக.

5. யுதா யாரைப்பற்றி எச்சிக்கையாய் இருங்கள் எனக் கூறுகிறார்?
    போலிப்போதகர்கள்.(4)

6. போலிப்போதகர்களை யூதா எவ்வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கிறார்?
      இவர்கள் காற்றால் அடித்துச் செல்லப்படும் நீரற்ற மேகங்கள். கனி தரா 
      மரங்களைப்போல இருமுறை செத்தவர்கள். கொந்தளிக்கும் கடலலைகள்.
      வழி தவறித் திரியும் விண்மீன்கள். (12,13)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்