Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(16) நெகேமியா

நெகேமியா என்பவர், பாரசீகத் தலைநகரான சூசாவில் மன்னர் அர்த்தக்சசுத்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்களின் இழிநிலையைக் கண்டு வருத்தமுற்றார். பாரசீக மன்னரால் யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்றார். பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளுக்கிடையே மனம் தளராது கட்டியெழுப்பினார். சமய, சமூக சீர்திருத்தங்களை இஸ்ரயேல் மக்களிடையே செய்தார்.

1. நெகேமியா எங்கே வாழ்ந்து வந்தார்?
     பாரசீக நாட்டில் சூசா என்னுமிடத்தில். (1:1)

2. நெகேமியா யூதர்களிடமிருந்து கேள்விப்பட்டது என்ன?
     எருசலேமின் மதில்கள் தகர்த்து எறியப்பட்டுள்ளன, அதன் வாயில் கதவுகள் 
     தீக்கு இரையாகி விட்டன. (1:3)

3. நெகேமியா சூசாவில் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்?
     மன்னருக்கு திராட்சை ரசம் கொடுப்பவராக இருந்தார். (2:1)

4. நெகேமியா மன்னருக்கு திராட்சை ரசம் கொடுக்கும் பொழுது மன்னர்
    அவரைப் பார்த்து கூறியது என்ன?

      " ஏன் உன் முகம் வாடியுள்ளது" என்றார். (2:2)

5. அதற்கு நெகேமியா அளித்த பதில் என்ன?
     யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும் என்றார்.(2:5)

6. நகர மதில்கள் கட்டி முடித்தபின், ஜெருசலேமிற்கு வாழ வந்தவர்கள் எத்தனை 
    பேர்?

    42,360பேர்
 
 

அருள் நிறையே எங்கள் மரியே! உன் நாமம் என்றும் வாழ்க!!
திருஉருவே எங்கள் அன்னையே!!! உன் அன்பு என்றும் வாழ்க!!!!