Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(10)  எபேசியருக்கு எழுதிய திருமுகம்


1. பவுல் இத்திருமுகத்தை எங்கிருந்து எழுதினார்?
     உரோமையில் இருந்து எழுதினார்.

2. இத்திருமுகத்தைப் பவுல் எப்பொழுது எழுதினார்?
     கி.பி. 61ல்

3. நாம் எவ்வாறு மீட்கப்படுகிறோம்?
      இயேசுக்கிறீஸ்துவின் அருளால்.

4. பவுல் எபேசியருக்காக வேண்டுவது என்ன?
    அவர்கள் கிறிஸ்துவின் அன்பிலும், நம்பிக்கையிலும் வளரவேண்டுமென
     மன்றாடுகிறார்.

5. நாம் எவ்வாறு இறைவனுக்கு அருகில் கொண்டு வரப்பட்டுள்ளோம்?
     இயேசுக்கிறிஸ்துவின் சட்டத்தின் மூலமாக. (2:13)

6. எபேசியரிடமிருந்து பவுல் எதிர்பார்க்கும் புதிய வாழ்க்கைமுறை என்ன?
     - பொய்யை விலக்கி வாழ்தல்
     - சினமுற்றாலும் பாவம் செய்யாதிருத்தல்
     - திருடாமல் இருத்தல்
     - கெட்ட வார்த்தை எதுவும் பேசாமல் இருத்தல்
     - மன்னித்து வாழ்தல் (4:25-30)

7. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு எவ்வாறு    
     வெளிப்படுகிறது?

      உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். (4:24)

8. எபேசியரிடத்தில் காணப்பட்ட பாவங்களில் பவுல் கடுமையாகத் தண்டித்தது   
     என்ன?

     பரத்தைமை (5:3)

9. இறைவனுக்குத் தகாதவை எவை?
      வெட்கமற்ற செயல்
      மடத்தனமான பேச்சு
      பகடி பண்ணுதல் (5:1)

10. மனைவியருக்கு பவுல் கூறும் அறிவுரை என்ன?
     ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல், கணவருக்கும் பணிந்திருக்கவேண்டும்.
       (5:22)

11. கணவருக்கு பவுல் கூறும் அறிவுரை என்ன?
      கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல, மனைவியருக்கும் அன்பு  
      செலுத்தவேண்டும். (5:25)

12. பிள்ளைகளின் கடமை என்ன?
      பெற்றோருக்கு கீழ்ப்படிதல். (6:1)

13. அடிமைகளின் கடமை என்ன?
      கிறிஸ்துவுக்கு  கீழ்ப்படிவதுபோல் தலைவர்களுக்கு அச்சத்தோடும்,  
      நடுக்கத்தோடும், முழு மனத்தோடும் கீழ்ப்படியவேண்டும். (6:5)

14. தலைவர்களின் கடமை என்ன?
     அவர்களது அடிமைகளை அச்சுறுத்துவதை விட்டுவிட வேண்டும். (6:9)

15. கிறிஸ்தவ வாழ்வில் போராடும்போது, கிறிஸ்தவர்கள் அணியவேண்டிய
       படைக்கலன்கள் யாவை?

          *இடைக்கச்சை  -  உண்மை
          *மார்புக்கவசம் - நீதி
          *மிதியடி - அமைதி
          *கேடயம் - நம்பிக்கை
          *தலைக்கவசம் - மீட்பு
          *போர்வாள் - கடவுளின் வார்த்தை (6:14-17)

16. எபேசு நகருக்கு தன்னைப்பற்றி அறிவிக்க பவுல் யாரை அனுப்பினார்?
       திக்கிக்கு என்பவரை அனுப்பினார். (6:21)
 
 

தேவைகள் யாவையும் தருபவளே! வேண்டிய வரங்களைத் தாருமே