| 
        			
					
					 புனித செக்கரியா (குரு) ✠ (St. 
					Zechariah (Priest) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : நவம்பர் 
					05 | 
			 
			
			
				
					✠ புனிதர் செக்கரியா ✠(St. 
					Zechariah) 
					
					 
					*குரு, இறைவாக்கினர், மரியாளின் பாதுகாவலர் 
					: (Priest, Prophet, Guardian of Mary) 
					 
					*பிறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எபிரோன் (ஜோஷுவா 21:11) 
					 
					*இறப்பு : கி. மு. முதலாம் நூற்றாண்டு எருசலேம் (மாத்யூ 23:35) 
					 
					*ஏற்கும் சபை/ சமயம் : கிறிஸ்தவம் இஸ்லாம் 
					 
					செக்கரியா விவிலியம் மற்றும் திருக்குரானில் குறிப்பிடப்படும் 
					நபர் ஆவார். விவிலியம் இவரை திருமுழுக்கு யோவானின் தந்தை எனவும் 
					ஆரோன் குலத்தவர் எனவும் இறைவாக்கினர் எனவும் குறிக்கின்றது. 
					இவர் இயேசுவின் தாய் மரியாளின் உறவினராகிய எலிசபெத்தின் கணவராவார். 
					 
					
					விவிலியத்தில் : 
					 
					லூக்கா நற்செய்தியின் படி முதலாம் ஏரோதின் ஆட்சியின் போது இவர் 
					வாழ்ந்தவர். இவர் அபியா வகுப்பைச் சேர்ந்த குரு ஆவார். இவர் மனைவி 
					எலிசபெத்து. இவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் 
					விளங்கினார்கள் எனவும் ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் 
					ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் 
					எனவும் விவிலியம் குறிக்கின்றது. இவர்கள் பிள்ளை இல்லாதிருந்தனர். 
					ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் 
					வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள். 
					 
					தம்முடைய பிரிவின் முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் 
					குருத்துவப் பணி ஆற்றி வந்தார். குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, கோவிலுக்குள் 
					சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் 
					போட்டபோது, அது செக்கரியா பெயருக்கு விழுந்தது. அவர் தூபம் 
					காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் 
					வேண்டிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கபிரியேல் தேவதூதர் 
					தோன்றி, அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என அறிவித்தார். இதனை நம்பாமல் 
					செக்கரியா சந்தேகித்ததால், தாம் அறிவித்தவை நிறைவேறும்வரை செக்கரியாவை 
					பேச்சற்றவராய் மாற்றினார். தம்முடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் 
					செக்கரியா வீடு திரும்பினார். அதற்குப் பின்பு அவர் மனைவி எலிசபெத்து 
					கருவுற்றார். 
					 
					இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின் போது கபிரியேலின் மூலம் எலிசபெத்து 
					கருவுற்றிருப்பதை அறிந்த மரியாள் அவரை காண வந்தார். மரியாள் 
					அவரோடு ஆறு மாதம் தங்கி உதவிபுரிந்தார் என விவிலியம் 
					குறிப்பிடுகின்றது. 
					 
					எலிசபெத்து ஒரு மகனைப் பெற்றெடுத்தார். எட்டாம் நாளில் அவர்கள் 
					குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற 
					அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் 
					அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் 
					பெயரிட வேண்டும்" என்றார். "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் 
					விருப்பம் என்ன?" என்று செக்கரியாவை நோக்கிச் சைகை காட்டிக் 
					கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் 
					பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே 
					அவரது வாய் திறந்தது. 
					 
					அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 
					 
					இஸ்லாம் சமயத்தினரின் திருமறையான "திருக்குர்ஆனிலும்" செக்கரியா 
					பற்றிய ஆதாரங்கள் உள்ளன. இஸ்லாம் சமயத்தினர் அவரை "இறைவாக்கினர்" 
					என்றும் "மரியாளின் பாதுகாவலர்" என்றும் விசுவசிக்கின்றனர். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |