| 
        			
					
					 ✠ 
					மார்ச்சிஸ் நகர் புனிதர் ஜேம்ஸ் ✠
					(St. James of the Marches) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : நவம்பர் 
					28 | 
			 
			
			
				
					✠ மார்ச்சிஸ் நகர் புனிதர் ஜேம்ஸ் ✠(St. 
					James of the Marches) 
					 
 ✠ஃபிரான்சிஸ்கன் துறவி/ பிரசங்கிப்பாளர்/ எழுத்தாளர் : 
					(Friar Minor, Preacher and Writer) 
					 
					✠பிறப்பு : கி.பி. 1391 
					மோண்டேப்ராண்டோன், அன்கொனாவின் மார்ச், திருத்தந்தையர் மாநிலம் 
					(Monteprandone, March of Ancona, Papal States) 
					 
					✠இறப்பு : நவம்பர் 28, 1476 
					நேப்பிள்ஸ், நேப்பிள்ஸ் அரசு 
					(Naples, Kingdom of Naples) 
					 
					✠ஏற்கும் சமயம் : 
					ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
					(Roman Catholicism) 
					(ஃபிரான்சிஸ்கன் சபை - Franciscan Order) 
					 
					✠அருளாளர் பட்டம் : கி.பி. 1624 
					திருத்தந்தை எட்டாம் அர்பன் 
					(Pope Urban VIII) 
					 
					✠புனிதர் பட்டம் : டிசம்பர் 10, 1726 
					திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் 
					(Pope Benedict XIII) 
					 
					✠முக்கிய திருத்தலம் : 
					மார்ச்சிஸ் நகர் புனிதர் ஜேம்ஸின் தேவ இல்லம், 
					மோண்டேப்ராண்டோன், அஸ்காலி பிக்கெனோ, இத்தாலி 
					(Sanctuary of St. James of the Marches, Monteprandone, 
					Ascoli Piceno, Italy) 
					 
					✠நினைவுத் திருநாள் : நவம்பர் 28 
					 
					✠பாதுகாவல் : 
					மோண்டேப்ராண்டோன் (Monteprandone); 
					நேப்பிள்ஸ், இத்தாலியின் இணை பாதுகாவலர் (Co-Patron of Naples, 
					Italy) 
					 
					புனிதர் ஜேம்ஸ், ஒரு இத்தாலிய இளம் துறவியும், மறை போதகரும், 
					எழுத்தாளரும், ஆவார். "டொமினிக் கங்காலா" (Dominic Gangala) எனும் 
					இயற்பெயர் கொண்ட இவர், மத்திய இத்தாலியின் அந்நாளைய 
					"அன்கொனாவின் மார்ச்" (March of Ancona) எனும் இடத்திலுள்ள 
					"மோண்டேப்ராண்டோனில்" (Monteprandone) ஒரு ஏழைக் குடும்பத்தில் 
					பிறந்தார். 
					 
					இளம் வயதில் தமது மாமன் உறவிலுள்ள ஒரு மத குருவின் 
					மேற்பார்வையில் கல்வி கற்ற இவர், பெருஜியா பல்கலைகழகத்தில் (University 
					of Perugia) கேனான் மற்றும் சிவில் சட்டம் ஆகிய கல்வியில் முனைவர் 
					பட்டம் பெற்றார். 
					 
					கி.பி. 1416ம் ஆண்டு, ஜூலை மாதம், 26ம் நாள், அசிஸியிலுள்ள 
					(Assisi) "போர்ட்டின்குளா" சிற்றாலயத்தின் (Chapel of the 
					Portiuncula) இளம் துறவிகள் மடத்தில் இணைந்தார். அப்போது அவர் 
					தமது பெயரை ஜேம்ஸ் என்று மாற்றிக்கொண்டார். 
					 
					புனிதர் சியென்னா நகர் பெர்னார்டின் (St. Bernardine of Siena) 
					அவர்களின் மேற்பார்வையில் இறையியல் பயின்றார். 
					 
					13 ஜூன் 1420 அன்று குருத்துவ அருட்பொழிவு பெற்ற இவர், 
					விரைவிலேயே "டுஸ்கனி" (Tuscany), "மார்ச்செஸ்" (Marches), 
					"உம்பிரியா" (Umbria) ஆகிய இடங்களில் மறை போதனை செய்ய தொடங்கினார். 
					 
					கி.பி. 1427ம் ஆண்டு முதல் சுமார் அரை நூற்றாண்டுகள் இவர் 
					சீரிய முறையில் மறை போதனை செய்தார். தவ வாழ்வு பற்றி 
					போதித்தார். கிறிஸ்துவுக்கு எதிரானவர்களுக்கெதிராக போரிட்டார். 
					ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria), ஸ்வீடன் (Sweden), 
					டென்மார்க் (Denmark), போஹெமியா (Bohemia), போலந்து (Poland), 
					ஹங்கேரி (Hungary) மற்றும் போஸ்னியா (Bosnia) ஆகிய நாடுகளில் 
					சிறப்பாக மறை பணியாற்றினார். 
					 
					ஃபிரான்சிஸ்கன் சபையின் விழிப்போடு கவனிக்கின்ற (Observant 
					Branch of the Friars Minor) கிளையைச் சேர்ந்த இவர், சிறப்புமிக்க 
					மறை போதகர் ஆவார். 
					 
					தனது வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளை "நேபிள்ஸில்" 
					(Naples) கழித்த ஜேம்ஸ், கி.பி. 1476ம் ஆண்டு, நவம்பர் மாதம், 
					28ம் நாளன்று மரித்தார். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |