| 
        			
					 ✠ அருளாளர் டேனியல் ப்ரோட்டியர் ✠(Blessed 
					Daniel Brottier) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : 
					
					பெப்ரவரி 
					28 | 
			 
			
			
				
					
					  
					✠ அருளாளர் டேனியல் ப்ரோட்டியர் ✠(Blessed Daniel Brottier) 
					 
					*ரோமன் கத்தோலிக்க குரு : (Roman 
					Catholic Priest) 
					 
					*பிறப்பு : செப்டம்பர் 7, 1876 
					லா-ஃபெர்ட்-செயின்டஸிர், ஃபிரான்ஸ் (La Ferté-Saint-Cyr, 
					Loir-et-Cher, France) 
					 
					*இறப்பு : ஃபெப்ரவரி 28, 1936 (வயது 
					59) 
					பாரிஸ், ஃபிரான்ஸ் (Paris, France) 
					 
					*ஏற்கும் சமயம் : 
					ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) 
					(தூய ஆவி சபை) (Congregation of the Holy Spirit) 
					 
					*முக்திபேறு பட்டம் : நவம்பர் 
					25, 1984 
					திருத்தந்தை 2ம் ஜான் பால் (Pope John Paul II) 
					 
					அருளாளர் டேனியல் ப்ரோட்டியர், "தூய ஆவியானவரின் சபையைச்" (Congregation 
					of the Holy Spirit) சேர்ந்த ஃபிரென்ச் ரோமன் கத்தோலிக்க குரு 
					ஆவார். முதலாம் உலகப் போரின்போது (World War I), ஒரு கத்தோலிக்க 
					குருவாக, இராணுவத்தினருக்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக 
					ஃபிரான்ஸ் நாட்டு இராணுவத்தின் மிகவும் உயர்ந்த பதக்கங்களான 
					(Croix de guerre) மற்றும் (Légion d'honneur) ஆகிய பதக்கங்கள் 
					இவருக்கு அளிக்கப்பட்டன. 
					 
					இவர் மேற்கு ஆபிரிக்க (West Africa) நாடான "செனெகல்" (Senegal) 
					நாட்டில் மறை போதகராக பணியாற்றினார். பாரிஸ் நகரின் புறநகர்ப் 
					பகுதியான "ஒடேயுல்" (Auteuil) எனும் இடத்தில் உள்ள ஒரு அனாதைகள் 
					இல்லத்தையும் நடத்தினார். 
					 
					"டேனியல் ஜூலஸ் அலெக்ஸிஸ் ப்ரோட்டியர்" (Daniel Jules Alexis 
					Brottier) எனும் இயற்பெயர் கொண்ட இவர், 1876ம் ஆண்டு, 
					"ஜீன்-பாப்டிஸ்ட் ப்ரோட்டியர்" (Jean-Baptiste Brottier) என்ற 
					தந்தைக்கும் "ஹெர்மினி" (Herminie) என்ற தாயாருக்கும் பிறந்த 
					இரண்டாவது மகனாவார். தமது பத்து வயதில் புது நன்மை (First 
					Communion) பெற்ற இவர், அடுத்த வருடமே இளைஞர்களுக்கான 
					குருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். தமது இருபது வயதில் 
					"ப்லாயிஸ்" (Blois) நகரில் ஒரு வருட இராணுவ சேவை புரிந்தார். 
					1899ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 22ம் நாளன்று, குருத்துவ அருட்பொழிவு 
					பெற்றார். அதன் பின்னர், ஃபிரான்ஸ் நாட்டின் "போன்ட்லேவோய்" (Pontlevoy) 
					எனும் இடத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியராக 
					பணியாற்ற அனுப்பப்பட்டார். 
					 
					ஆசிரியர் பணியில் முழுதும் அமைதியடையாத டேனியல், மறை போதக பணியாற்ற 
					முடிவு செய்தார். பின்னர் அவர் 1902ம் ஆண்டு, "ஒர்லி" (Orly) 
					எனுமிடத்திலுள்ள "தூய ஆவியாரின் சபையில்" (Congregation of the 
					Holy Spirit) இணைந்தார். அங்கே துறவறப் புகுநிலையை பூர்த்தி 
					செய்தார். 1903ம் ஆண்டு, அச்சபை அவரை மேற்கு ஆபிரிக்காவின் 
					"செனெகல்" (Senegal) நாட்டில் மறை போதகராக பணியாற்ற அனுப்பியது. 
					எட்டு வருடங்கள் அங்கே பணியாற்றிய அவர், தமது உடல்நிலையில் ஏற்பட்ட 
					தொய்வின் காரணமாக 1911ம் ஆண்டு, ஃபிரான்ஸ் திரும்பினார். 
					 
					முதல் உலகப்போர் வெடித்ததும் அவர் ஃபிரான்ஸ் நாட்டின் இராணுவப் 
					படைகளின் தன்னார்வ மறை போதகராக இணைந்தார். நான்கு வருடங்களுக்கும் 
					மேலாக யுத்த பூமியில் இராணுவ வீரர்களிடையே மதப் பணியாற்றிய 
					டேனியல் ஒருபோதும் தமது பணியில் சுணங்கியதேயில்லை. மாறாக, தமது 
					உயிரைப் பணயம் வைத்து மறை போதக பணியாற்றினார். துணிச்சலுக்காக 
					ஆறுமுறை மேற்கோள் காட்டப்பட்ட டேனியலுக்கு, ஃபிரான்ஸ் நாட்டு 
					இராணுவத்தின் மிகவும் உயர்ந்த பதக்கங்களான (Croix de guerre) 
					மற்றும் (Légion d'honneur) ஆகிய பதக்கங்கள் அளிக்கப்பட்டன. 
					யுத்த பணிகளின்போது இவர் ஒரு சிறு காயம் கூட இன்றி தப்பினார் 
					என்பதே பெரும் அதிசயமாக கருதப்படுகின்றது. போர்முனைகளில் தாம் 
					தப்பிப் பிழைத்தற்கெல்லாம் காரணம், புனிதர் தெரசாவின் (St. 
					Thérése of Lisieux) பரிந்துரையே என்றார். 
					 
					புனிதர் தெரசாவின் (St.Thérése of Lisieux) புனிதர் பட்டமளிப்பின்போது, 
					பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான "ஒடேய்ல்" (Auteuil) எனும் 
					பகுதியில் அவருக்காக ஒரு சிற்றாலயம் கட்டினார். அதுவே அப்புனிதருக்கு 
					அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயமாகும். 
					 
					போருக்குப் பிறகு, "இராணுவத்தினரின் தேசிய ஒன்றிப்பு" 
					(National Union of Servicemen) எனப்படும், பல்வேறு போர்களில் 
					ஈடுபட்ட முன்னாள் ஃபிரெஞ்ச் இராணுவ தியாகிகளின் அமைப்பை 
					நிறுவினார். 
					 
					முதல் உலகப்போரின் பின்னர், பாரிஸ் நகரின் கர்தினால் பேராயரான 
					(Cardinal Archbishop of Paris) "லூயிஸ் எர்னெஸ்ட் டுபோய்ஸ்" 
					(Louis-Ernest Dubois), 1923ம் ஆண்டு, நவம்பர் மாதம், பாரிஸ் 
					நகரின் புறநகர்ப் பகுதியான "ஒடேய்ல்" (Auteuil) எனும் பகுதியில், 
					அனாதைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றினை 
					நடத்துமாறு "தூய ஆவியானவரின் சபையை" (Congregation of the Holy 
					Spirit) கேட்டுக்கொண்டார். அருட்தந்தை டேனியலும், அவரது உதவி 
					குருவான "ய்வெஸ் பிசொன்" (Yves Pichon) இருவரும், இல்லத்தின் 
					வசதிகளை விரிவுபடுத்த 13 ஆண்டுகள் பணியாற்றினர். மற்றும், அனாதைகளின் 
					நலனுக்காக வேலை செய்தார்கள். அவர் தனது பணியை இரு நோக்கங்களுக்கு 
					அர்ப்பணித்தார்: ஒன்று, மிகவும் எளிய மற்றும் துரதிர்ஷ்டசாலிகளை 
					பாதுகாப்பது; இரண்டாவதாக, புனிதர் தெரசாவின் (St.Thérése of 
					Lisieux) பரிந்துரைகளுக்காக அம்முயற்சிகள் மற்றும் உழைப்புகளை 
					அர்ப்பணித்தல் ஆகியனவாகும். 
					 
					டேனியலின் உழைப்பின் பலனாக, அவ்வில்லத்தில், கட்டுமானப் பணிகளின் 
					பட்டறைகள், திரையரங்கம், பத்திரிக்கைகள் மற்றும் அச்சகங்கள் உள்ளிட்டவை 
					நிறுவப்பட்டு நடத்தப்பட்டன. 
					 
					சுமார் 140 அனாதைகளுடன் பணியைத் தொடங்கிய அவர் பதின்மூன்று வருடங்கள் 
					அங்கே பணியாற்றினார். 1936ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் நாளன்று, 
					பாரிஸ் நகரிலுள்ள "தூய ஜோசஃப் மருத்துவமனையில்" (Hospital of 
					St. Joseph) அவர் மரணமடையும்போது, 1400க்கும் மேற்பட்ட அனாதைகள் 
					அங்கே பராமரிக்கப்பட்டனர்.   | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |