| 
        			✠ புனிதர் ஒலிம்பியாஸ் ✠(St. Olympias) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				
					நினைவுத் திருநாள் : 
					
					
					(டிசம்பர்/ 
					 
					Dec - 
					17) | 
			 
			
			
				
					✠ புனிதர் ஒலிம்பியாஸ் ✠(St. Olympias) 
					 
 ✠பெண் திருத்தொண்டர் : 
					(Deaconess) 
					 
					✠பிறப்பு : கி.பி. 361368 
					அந்தியோக்கியா அல்லது காண்ஸ்டன்டினோபில் 
					(Antioch or Constantinople) 
					 
					✠இறப்பு : ஜூலை 25, 408 
					நிகொமீடியா 
					(Nicomedia) 
					 
					✠ஏற்கும் சமயம் : 
					ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
					(Roman Catholic Church) 
					கீழ் மரபுவழி திருச்சபை 
					(Eastern Orthodox Church) 
					 
					✠நினைவுத் திருநாள் : டிசம்பர் 17 
					 
					புனிதர் ஒலிம்பியாஸ், கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ரோம 
					கிறிஸ்தவ பிரபு வம்சத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் இளம் 
					ஒலிம்பியாஸ் என்றும் அறியப்பட்டிருந்தார். 
					 
					"காண்ஸ்டன்டினோபிள்" (Constantinople) அல்லது "அந்தியோக்கியா" 
					(Antioch) நகரில் பிறந்து வளர்ந்த இவரது தாயார், அந்தியோக்கிய 
					கிரேக்க பிரபுத்துவ பெண்ணான "அலெக்சாண்ட்ரா" (Alexandra) 
					ஆவார். கிரேக்க பிரபுவான "செலியூகஸ்" (Seleucus), இவரது தந்தை 
					ஆவார். 
					 
					இவர், காண்ஸ்டன்டினோபிலின் (Constantinople) உயர் அதிகாரியாக 
					பணியாற்றிய பிரபு வம்சத்தைச் சார்ந்த "நேப்ரிடியஸ்" 
					(Nebridius) என்பவரை அருட்சாதனங்கள்
 செய்தார். 
					 
					தமது கணவரின் மரணத்தின் பின்னர், இவரை மறுமணம் செய்ய முன்வந்த 
					அநேகரை மறுத்த இவர், தமது வாழ்வை திருச்சபைக்கு 
					அர்ப்பணித்தார். ஒரு பெண் திருத்தொண்டராக பணிபுரிந்தார். 
					(ஆரம்ப கால மற்றும் ஒருசில நவீன தேவாலயங்களில் 
					திருத்தொண்டரின் ஒத்த கடமைகளை ஒரு பெண் செய்ய 
					அனுமதிக்கப்பட்டிருந்தார்.) 
					 
					பின்னாளில் இவருக்கு "புனிதர் ஜான் கிரிஸாஸ்டாமின்" (Saint 
					John Chrysostom) நட்பு கிடைத்தது. 
					 
					இவர் ஒரு மருத்துவமனை மற்றும் அநாதை இல்லம் ஆகியனவற்றை கட்டி 
					நற்பணியாற்றினார். "நைற்றியா" (Nitria) நாட்டிலிருந்து நாடு 
					கடத்தப்பட்ட துறவிகளுக்கு சேவை செய்தார். இவரது அனைத்துப் 
					பணிகளிலும் புனிதர் ஜான் கிரிஸாஸ்டாமின் இவருக்கு உறுதுணையாய் 
					இருந்தார். இதன் காரணமாகவே தமது வீடுவாசலை இழந்த இவர் கி.பி. 
					404ல் "நிகொமீடியா" (Nicomedia) நாட்டுக்கு நாடு 
					கடத்தப்பட்டார். நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவர், கி.பி. 
					408ம் ஆண்டு, ஜூலை மாதம், 25ம் தேதி, அங்கேயே மரித்தார். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |