| 
        			✠ புனிதர் ஜான் கான்ஷியஸ் ✠(St. John 
					Cantius) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				
					நினைவுத் திருநாள் : 
					
					
					(டிசம்பர்/ 
					 
					Dec - 
					23) | 
			 
			
			
				
					✠ புனிதர் ஜான் 
					கான்ஷியஸ் ✠(St. John Cantius) 
					✠ ஒப்புரவாளர் : 
					(Confessor) 
					 
					✠பிறப்பு : ஜூன் 23, 1390 
					கெட்டி, ஒஸ்வீஸிம், போலந்து 
					(Kęty, Oświęcim, Poland) 
					 
					✠இறப்பு : டிசம்பர் 24, 1473 (வயது 
					83) 
					க்ரகோவ் அகடமி, க்ரகோவ், போலந்து 
					(Krakw Academy, Krakw, Poland) 
					 
					✠ஏற்கும் சமயம் : 
					ரோமன் கத்தோலிக்க திருச்சபை 
					(Roman Catholic Church) 
					 
					✠முக்திபேறு பட்டம் : மார்ச் 28, 
					1676 
					திருத்தந்தை பத்தாம் க்ளெமென்ட் 
					(Pope Clement X) 
					 
					✠புனிதர் பட்டம் : கி.பி. 1767 
					திருத்தந்தை பதின்மூன்றாம் க்ளெமென்ட் 
					(Pope Clement XIII) 
					 
					✠முக்கிய திருத்தலங்கள் : 
					புனிதர் ஆன்னி ஆலயம், க்ரகோவ், போலந்து 
					(Church of St. Anne, Krakw, Poland) 
					 
					✠பாதுகாவல் : 
					போலந்து (Poland), லித்துவானியா (Lithuania), ஜகியேல்லோனியன் 
					பல்கலைகழகம் (Jagiellonian University) 
					 
					✠நினைவுத் திருநாள் : டிசம்பர் 
					23 
					 
					புனிதர் ஜான் கான்ஷியஸ், ஒரு போலிஷ் கத்தோலிக்க குருவும், தத்துவ 
					அறிஞரும், இயல்பியலாளரும், இறையியலாளரும் ஆவார். இவர் 
					"கான்ட்டியின் ஜான்" அல்லது "ஜான் கான்ஷியஸ்" (John of Kanty 
					or John Kantius) என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். 
					 
					போலந்து நாட்டின் "கெட்டி" (Kęty) என்ற சிறிய நகரத்தில் பிறந்த 
					ஜான் கான்ஷியஸின் தந்தை "ஸ்டானிஸ்லாஸ்" (Stanisław) ஆவார். 
					தாயாரின் பெயர் "அன்னா கன்ட்டி" (Anna Kanty) ஆகும். "க்ரகோவ்" 
					பல்கலையில் கற்று இளங்கலை மற்றும் தகுதிச் சான்றுகளைப் 
					பெற்றார். கி.பி. 1418ம் ஆண்டு, தத்துவ ஞான சாஸ்திரத்தில் முனைவர் 
					பட்டம் வென்றார். அடுத்த மூன்று ஆண்டுகாலம் பல்கலையில் தத்துவவியல் 
					கற்பித்த அவர், அதே வேளையில் குருத்துவ தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். 
					 
					குருத்துவ அருட்பொழிவின் பின்னர், அவர் (Canons Regular of the 
					Most Holy Sepulcher) என்ற சபை நடத்தும் பள்ளிக்கு தலைவராக 
					பொறுப்பேற்றார். அவர் அங்கிருக்கும்போதே "க்ரகோவ்" பல்கலையில் 
					"கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி" (Sacred Scripture) கற்பிப்பதற்காக 
					பேராசிரியராக பணி நியமனம் பெற்றார். 
					 
					இறையியலில் முனைவர் பட்டம் வென்ற இவர், "க்ரகோவ்" பல்கலையில் 
					இறையியல் துறையின் இயக்குனராக நியமனம் பெற்றார். கி.பி. 1473ம் 
					ஆண்டு, தமது மரணம் வரை பேராசிரியராகவே பணியாற்றினார். ஜான் பரிசுத்த 
					வேதாகமத்தின் சுவடிகள், இறையியல் துண்டுப்பிரதிகள் மற்றும் ஆய்வு 
					நூல்களையும் நகலெடுக்கும் பணியில் பல மணிநேரம் செலவிட்டார். 
					 
					க்ரகோவ் நகரில் இவர் வாழ்ந்த காலத்தில், இவர் எழைகளின்பால் - 
					முக்கியமாக பல்கலையின் ஏழை மாணவர்களின் பேரில் கொண்ட பெருந்தன்மை 
					மற்றும் இரக்க குணங்களுக்காய் நன்கு அறியப்பட்டார். இவர் ரோம் 
					நகருக்கு நான்கு தடவையும் ஜெருசலேம் புனித நகருக்கு ஒரு தடவையும் 
					நடை பயணமாகவே யாத்திரை சென்று திரும்பினார். 
					 
					பணி ஓய்வு பெற்றிருந்த இவர், கி.பி. 1473ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 
					24ம் தேதி, தமது என்பத்துமூன்றாவது வயதில், தாம் கல்வி கற்ற 
					இடத்திலேயே மரித்தார். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |