tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   94 இறைவனின் திருமுன் வாருங்கள்  


இறைவனின் திருமுன் வாருங்கள்
இன்னிசை பாடி வாழ்த்துங்கள் (2)
நன்றிகள் நிறைந்த மனதுடனே
அவரின் நாமத்தைப் போற்றுங்கள்
வாருங்கள் புகழ்ந்து போற்றுங்கள்
நம்மை வாழ்விக்கும் தேவனை (2)

ஆலயமணிகளின் ஓசைதனில்
ஆண்டவர் அழைக்கிறார் வாருங்கள் (2)
வாழ்வு தரும் வார்த்தையினால்
வளமிக்கச் செய்வார் வாருங்கள் (2)
வாருங்கள் புகழ்ந்து போற்றுங்கள்
நம்மை வாழ்விக்கும் தேவனை (2)

துன்பம் துயரம் தொல்லைகளை
துடைத்திடச் செய்வார் தூயரவர் (2)
பகைமை பயம் மற்றும் பாவம் தனில்
விடுதலை அளிப்பார் வேந்தரவர் (2)
வாருங்கள் புகழ்ந்து போற்றுங்கள்
நம்மை வாழ்விக்கும் தேவனை (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்