tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நன்றிப்பாடல்கள்

   971-நன்றி சொல்லி நாளும் பாடிட  
நன்றி சொல்லி நாளும் பாடிட
நித்தம் உந்தன் சித்தம் ஏற்றிட
உந்தன் பாதம் தேடி வருகிறேன்
உனதாய் வாழ என்னைத் தருகின்றேன்
நன்றி நன்றி � நன்றி இயேசுவே (3)
நன்றி இயேசுவே

கருவில் என்னைத் தேர்ந்ததற்காக நன்றி இயேசுவே
கருத்தாய் என்னைக் காப்பதற்காக நன்றி இயேசுவே
கரம் பிடித்து நடத்தினாய் கன் மலையில் உயர்த்தினாய்
காலமெல்லாம் நன்றி பாடுவேன்
கர்த்தருக்குள் என்றும் வாழுவேன்
நன்றி நன்றி � நன்றி இயேசுவே (3)நன்றி இயேசுவே

துன்ப வேளையில் துணையாய் நின்றீர்; நன்றி இயேசுவே
தூய படைப்பாய் உன்னில் இணைத்தாய் நன்றி இயேசுவே
வானம் விட்டு இறங்கினாய் வரங்களாலே நிரப்பினாய்
வாழ்நாளெல்லாம் நன்றி பாடுவேன்
வல்லவர்க்குள் என்றும் வாழ்வேன்
நன்றி நன்றி � நன்றி இயேசுவே (3) நன்றி இயேசுவே






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்