| திருவிருந்துப்பாடல்கள் | நீரே என் உணவு | 
|  
			
			 நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது உந்தன் துணைகொண்டு துயர் வெல்லும் திரமாகுமே தாவீதின் கவன்போல் மோசேயின் கோல் போல் உனை நம்பும் என்னில் செயலாற்றவா உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா  |