| காணிக்கைப்பாடல்கள் | #பலிப்பொருள் என நானும் தருகின்றேன் | 
|  
			பலிப்பொருள் என நானும் தருகின்றேன் பரம் பொருள் பரமனைத் தொழுகின்றேன் பலிப்பொருள் என நானும் தருகின்றேன் இறைவா என் தலைவா விரைவாய் நீ ஏற்பாய் விண்ணகம் துறந்த விண்ணவனும் மண்ணகம் பிறந்த மன்னவனும் படைப்பின் பொருள்தனைத் தரவந்தேன் பலியில் மகிழ்வுடன் தருகின்றேன் இறைவா என் தலைவா விரைவாய் நீ ஏற்பாய் தன்னை கொடுத்த தற்பரனே உண்மையில் நிலைத்த உத்தமனே இருக்கும் பொருள்தனைத் தரவந்தேன் இரங்கும் மனதினைத் தருகின்றேன் இறைவா என் தலைவா விரைவாய் நீ ஏற்பாய்  |