tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் ஆண்டவரே! இரக்கமாயிரும் சங்கீதம் 50:15  
சங்கீதம் 50:15

என்னை நோக்கிக் கூப்பிடு என்றவரே
உம்மை நோக்கி கூப்பிடுகின்றேன்
என் குரலுக்கு செவி சாய்த்தருளும்
என் குரலுக்கு பதில் தாரும்

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு
என்று உரைத்தவரே எந்தன் இறையரசே
என்றும் வாழ்பவரே என்னை ஆழ்பவரே (2)

கூப்பிடும் குரலுக்கு செவி கொடுப்பார்
புறம்பே தள்ளி விடமாட்டார்
நம்பிடும் அனைவர்க்கும் நலம் தருவார்
புதுமைகள் பலவும் புரிந்திடுவார்
தீமைகள் உன்னை அணுகாது
வாதைக் கூடாரம் நெருங்காது
வாதை உன் கூடாரம் நெருங்காது


தூதரின் படையுடன் துணை வருவார்
தனியே தள்ளி விடமாட்டார்
வல்லமை மிகுந்தவர் வலு தருவார்
வலிகள் பலவும் அகற்றிடுவார்
தேர்ந்தது நம்மை அவர்தானே
தேவன் பேரன்பில் குறையேது
தேவன் பேரன்பில் குறையேது


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்