| வருகைப்பாடல்கள் | வாருங்கள் வாருங்கள் |
|
வாருங்கள் வாருங்கள் விரைந்திடுவோம் ஆலயம் அழைக்குது பணிந்திடுவோம் பெத்லேகேம் ஓடிய இடையர்களாய் விண்மீனைத் தொடர்ந்த ஞானியராய் அமைதியின் அரசரைப் பணிந்திடவே ஆலயம் செல்வோம் வாருங்களே வாருங்கள் வாருங்கள் விரைந்திடுவோம் ஆலயம் அழைக்குது பணிந்திடுவோம் இறைவனின் உறைவிடம் இறைவனின் உறைவிடம் அழகானது இதயத்தில் ஏக்கம் இதயத்தில் ஏக்கம் உருவாகுது ! தலைவனின் தூயகம் எழிலானது ஆ..ஆ தலைவனின் தூயகம் எழிலானது இறைமக்கள் சங்கமம் அதுவானது விண்ணும் மண்ணும் கைகுலுக்கும் இடமே நமது ஆலயமே ! பீடத்தில் பணிந்தால் மனம் செழிக்கும் உறவே இறையின் ஆலயமே வாருங்கள் வாருங்கள் விரைந்திடுவோம் ஆலயம் அழைக்குது பணிந்திடுவோம் மூவொரு இறைவனின் மூவொரு இறைவனின் வரவானது இதயத்தில் மாற்றம் இதயத்தில் மாற்றம் உருவாக்குது இறைவன் தொடங்கிய சபை இதுவே ஆ..ஆ..ஆ இறைவன் தொடங்கிய சபை இதுவே புகழ்ந்திட விரைவோம் திரு அவையே பாவத்தைப் புனிதம் வெல்லுகின்ற இடமே நமது ஆலயமே மனிதத்தின் மேன்மையைச் சொல்லுகின்ற தளமே நமது ஆலயமே வாருங்கள் வாருங்கள் விரைந்திடுவோம் ஆலயம் அழைக்குது பணிந்திடுவோம் பெத்லேகேம் ஓடிய இடையர்களாய் விண்மீனைத் தொடர்ந்த ஞானியராய் அமைதியின் அரசரைப் பணிந்திடவே ஆலயம் செல்வோம் வாருங்களே வாருங்கள் வாருங்கள் விரைந்திடுவோம் ஆலயம் அழைக்குது பணிந்திடுவோம் |