Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திரு இருதயப்பாடல்கள்

  1122-தேன் இனிமையிலும்  


தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதை
தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே

காசினிதனிலே நேசமதாக
கசடதை உத்தரித்தே – பாவ
கசடத்தை அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்க தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவாழ்வுண்டு
நிதம் துதி என் மனமே

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும் - என்றும்
கத்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

 

அடைக்கலம் உன்னையன்றி யாரிடம் செல்வோமம்மா
கடைக்கண்ணால் எம்மை நோக்கத் தாமதிக்கலாமா