தூய தோமையார் | 1144- |
தெய்வீகத் திருமலையாம் தோமாவின் மலையினிலே..... கர்த்தரை எதிர்நோக்கிய அன்னையின் திருவடியிலே........ இந்தியத் தூதராம் தூய தோமா இரத்தம் சிந்திய மலையினிலே....... வாருங்கள் செல்வோம்......... நம் தோமா மலையின் அதிசயம் காண்போம் தோமாவின் மலை மீது ஏறுவோம் ஏறுவோம் குறையாத வரம் காணுவோம் நம்மைத் தேடி வந்த புனிதரின் தெய்வீக மலையிது நம்பிக்கையோடு வேண்டிடுவோம் நன்மைகளெல்லாம் சேர்த்திடுவோம் தோமாவின் மலை மீதிலே - நம் துயரெல்லாம் பறந்தோடுதே பாரத நாட்டின் நல் மறைத்தூதராம் தோமா வலம் வந்த அருள் வீடிது இம்மலை மீதிலே தெய்வீகமே எந்நாளும் தழைத்தோங்குதே நம் மண்மீதிலே அவர் தியாகமே நல் வாழ்வின் சுடராகுமே இயேசுவின் தூதரை மாண்புடன் வேண்டுவோம் தோமாவின் மலை மீதிலே நம் துயரெல்லாம் பறந்தோடுதே சோதனை எல்லாம் முன் சுமந்து சென்றால் சுந்தர மலை மீது சுகம் காணலாம் செந்நீர் சிந்திடும் திருச் சிலுவை செழிப்போடு வரம் நல்குமே எதிர்நோக்கிய அன்னையின் கருணையே இவை யாவும் பலனாகுமே இயேசுவின் சாட்சியாய் வாழுவோம் என்றுமே தோமாவின் மலை மீதிலே நம் துயரெல்லாம் பறந்தோடுதே |