தூய தோமையார் | போற்றி போற்றி புனிதரே |
போற்றி போற்றி புனிதரே தூய தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே இந்தியத்தின் தீபமே தோமாவே இறைவார்த்தையை ஒலித்தவனே தோமாவே இயேசுவின் நல் சீடரே தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே ஆண்டவரைத் தொட்டுணர்ந்த தோமாவே ஆண்டவரை விசுவசித்த தோமாவே இயேசுவே கடவுள் என்ற தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே விசுவாசத்தின் விதையே என் தோமாவே வல்லமை நிறைந்த என் தோமாவே வார்த்தை வழி வாழ்ந்தவரே தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே நீதியினால் உயிர்த்த என் தோமாவே நீதியினை உடுத்திக் கொண்ட தோமாவே நீதிக்காக உயிர் கொடுத்த தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே பாவ வாழ்வு சாபம் என்ற தோமாவே பரமனையே ஏந்தி வந்த தோமாவே அன்பின் வழியைக் கொண்டு வந்த தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே கர்த்தரையே காண்பித்த நல் தோமாவே கருணையினை பொழிபவரே தோமாவே கவலைகளைத் தீர்ப்பவரே தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே பெற்றதே வாழ்வு என்று தோமாவே அவரோடு சேர்வோம் என்ற தோமாவே அவரோடு மரிப்போம் என்ற தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே இறையன்பே செல்வம் என்ற தோமாவே இறையாட்சியை மலரச் செய்த தோமாவே உயர் சாட்சியாக வாழும் என் தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே ஆறுதலைத் தருபவரே தோமாவே அதிசயங்கள் செய்பவரே தோமாவே அற்புதங்கள் புரிபவரே தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே சிலுவையினை வணங்கிய நல் தோமாவே செந்நீரை சிந்தச் செய்த தோமாவே ஜெபத்தினிலே நிலைத்தவரே தோமாவே அருள் மலையின் இரத்த சாட்சியே |