தூய மார் இவானியோஸ் | தரணி போற்றும் தானைத் தலைவா |
தரணி போற்றும் தானைத் தலைவா தரிசு நிலம் போல் தாகம் கொண்டாய் எதையும் தாங்கும் இதயம் கொண்ட வணங்கத் தகுந்த மார் இவானியோஸ் மார் இவானியோஸ் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே பவுலின் மனமும் துறவு நிலையும் தேர்ந்து தெளிந்த நீதித் தலைவா ஏழைகள் எளியவர் துயர் துடைத்தவரை நாடியே தேடியே ஓடியே வந்தோம் உம் புகழ் ஓங்குகவே எம் சபை மகிழ்ந்திடவே அறிவுத் திறனும் அருளின் வளமும் ஆற்றலும் மிகுந்த ஞான ஒளியே அன்னையின் அன்பும் ஆண்டவர் துணையும் ஆட்கொள்ளும் ஆவியின் ஆசியும் கொண்ட உம் புகழ் ஓங்குகவே எம் துயர் நீங்குகவே |