Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித அன்னம்மாள் தலைமுறை வாழ்த்தும்  

தலைமுறை வாழ்த்தும் தாயவள் நீயே
தவமிருந்தோம் உன் தயவருள்வாயே
அன்னையை ஈன்ற நல் அன்னையே - இறை
அன்னம்மாள் எம் அருட்துணையே – தூய

கரைந்துருகும் உன் விழி துடைப்பார்
கடவுள் என்றே நம்பி காத்திருந்தாய்
உருவிலான் உருபெறும் அருள் நிறைந்தவளை – உன்
கருவினில் கறையின்றி நீ சுமந்தாய் - எம்மை
குறையின்றி இறைவழி சேருமம்மா
தாயே வாழ்க எம் தயவே வாழ்க
அன்னை வாழ்க அன்னம்மாள் வாழ்க

குடும்பங்கள் தழைத்திட வரமருள்வாய்
குழந்தைகள் திழைத்திட உறவருள்வாய்
பெற்றவர் பெரியவர் மாண்பினைப் போற்றி – நல்
ஒற்றுமை உணர்வுகள் தாருமம்மா – எமை
உற்றவர் இயேசுவிடம் சேருமம்மா
தாயே வாழ்க எம் தயவே வாழ்க
அன்னை வாழ்க அன்னம்மாள் வாழ்க


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!